வந்தே மாதரம் சட்டமாகியது இந்தியா – `இந்து’ இந்தியாவாகியது!
`வந்தே மாதரம்’ பாடலுக்கு மிகுந்த சூழ்ச்சியுடன் ஒன்றிய பாஜக ஆட்சி சட்டபூர்வ ஏற்பை வழங்கிவிட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருந்ததை ஒரு வாய்ப்பாக ஒன்றிய ஆட்சி பயன்படுத்திக் கொண்டது. மாநிலங்களவையில் எந்த விவாதங்களும் இல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத அவையில் (வெளிநடப்பு செய்திருந்தனர்) குரல் ஓட்டு வழியாக மசோதா நிறைவேறிவிட்டது. அதேபோல் மக்களவையிலும் வேறு பிரச்சனைகளை முன்வைத்து நடந்த அமளி துமளிகளை பயன்படுத்தி கடந்த ஜூன்-29, அன்று மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. அமளிகளுக்கு இடையே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்த எதிர்ப்பும், ஆ. ராசா தந்த திருத்தங்களும் புறந்தள்ளப்பட்டன. `வந்தே மாத’ரத்தின் முழுமையான பாடலுக்கும் இப்போது சட்டத்தால் ஏற்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபையில் செய்த முடிவின்படி முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது ஆ.ராசா கொடுத்த திருத்தம். உள்துறை இணை அமைச்சர்...
