`பெண்கள் பாதுகாப்பு’ தமிழ்நாட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார் ஆர்.என்.ரவி!

அருணாச்சல பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள் உருவான தினவிழாவில் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்து சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடகிழக்கு பெண்கள் தமிழ்நாட்டிற்கு படிக்க சென்றால் அவர்கள் பெற்றோர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு அனுப்பலாம். தமிழ்நாடுபோல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அக்கறையுடன், நண்பர்களாக நம்மை கவனித்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டைப் போல் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு பெண்களை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்ற ஆளுநர் ரவிக்கு இந்த “அறிவு ஒளி” கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று புலம்பும் சங்கிகளுக்கு ஆளுநர் ரவியே பதில் கூறிவிட்டார்.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...