என்ன செய்யப் போகின்றாய்?
பாராண்ட தமிழா – நீ
மான வீரனா சொல்வாய்? கேட்டேன்.
உனக்குனை அடிமைசெய் ஆரியரின் கூட்டா?
முடிப்பு தில்லிக்கு அடிமையாய் நீயிருக்கத் -தமிழரை
அடகு வைக்கத் துடிகின்றாய்!
தமிழினம் தலையெடுக்கா திருக்க – நீயே
கருவியாயிருக்கப் போகின்றாய்!
தமிழர் சூடிய மகுடத்தை – நீயே
வேதியர் வேள்வியில் வீசுகின்றாய் !
இமயம் வென்ற கூர்வேலை- ஆரிய
இழிந்தோர் காலடி வைக்கின்றாய்!
தமிழை அழிக்கும் பகையோடு – நீயே
துணையாய் இருக்கப் போகின்றாய்!
தமிழின உறவைக் கொல்ல – நீயே
ஆயுதம் வழங்கப் போகின்றாய்!
வேதிய மனுநீதி கோலோச்ச – நீயே
கைச்சாத் திடவே போகின்றாய்!
தில்லிக்கு அடங்கி அரசாளத் – தமிழர்
செல்வத்தைத் தாரைவார்க்கப் போகின்றாய்!
கொடிய சனாதனக் கூட்டத்தால் – தமிழர்
கெட்டழிந் திரக்கப் போகின்றார்!
கடைசியில் உன்னைப் பூட்டும் – சிறையில்
என்னச் செய்யப் போகின்றாய்? -குயில்தாசன்
பெரியார் முழக்கம் இதழ் 12032026
