கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!
பெண்களுக்கான கருப்பை புற்றுநோய் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியது திராவிட மாடல் ஆட்சி. கடந்த சனவரியில் அரசு இத்திட்டத்தை அறிவித்து மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஊசியின் மதிப்பு ரூ.14,000. தமிழ்நாட்டில் இலவசமாக போடப்படுகிறது. இதுவரை 4 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக தொடரும்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைக் கான திட்டங்களை வாக்கு திரட்டும் திட்டமாக சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வாக்களிக்கும் வயதிற்கு வராத 14 வயது சிறுமிகளுக்கான திட்டம்.
தமிழ்நாட்டைப் பார்த்த பிறகு தான் மோடி கடந்த பிப்ரவரியில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மோடி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா முழுவதும் 14 வயதான 1.5 கோடி பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் `Globocan’ 2022-ல் வந்துள்ள தகவலின் படி இந்தியாவில் 35 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் 2-ம்இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1,20,000 பெண்கள் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுவதும், 80,000 பேர் உயிரிழப்பதும் தெரிய வந்திருக்கிறது. `செர்வாக்’ Cervavac என்ற தடுப்பூசி இதற்கு பயன்படுத்தப்படுகிறது. மோடி அரசு உலகளாவிய தடுப்பூசி கூட்டணி (CAVI) என்ற அமைப்புடன் இணைந்து இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளது.
தமிழ்நாடு அரசோ ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை வந்த உடனேயே சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உலக வங்கியிடம் ரூ.1,185 கோடி ரூபாய் கடன் பெற்று இத்திட்டத்தை தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 5-ஆண்டு காலம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மோடி ஆட்சி சர்வதேச அமைப்புடன் உடன்படிக்கை செய்து கொண்டு நிறைவேற்றப்படும் இத்திட்டம் வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டும் தான். தமிழ்நாடு அரசு உடனடியாக பெண்களுக்கு கவலையோடு திட்டங்களை என எப்படி அமல்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு மறுக்க முடியாத சான்று. தமிழ்நாட்டில் மட்டும் 2023-ம் ஆண்டில் 8,534 பெண்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசின் அறிக்கை கூறியது. தமிழ்நாடு அரசின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 5-ஆண்டு காலம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மோடி ஆட்சி சர்வதேச அமைப்புடன் உடன்படிக்கை செய்து கொண்டு நிறைவேற்றப்படும் இந்தத் திட்டம் வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டும் தான். தமிழ்நாடு அரசு உடனடியாக பெண்களுக்கு கவலையோடு திட்டங்களை என எப்படி அமல்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு மறுக்க முடியாத சான்று.
பெரியார் முழக்கம் இதழ் 12032026
