வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா? அஇஅதிமுகவா?

அதிமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் ஒரு ஒப்பீடு.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கின்ற பொழுது மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டது., 2018- 2019-லேயே மாணவர்கள் போராடினார்கள். மதுரையில் லேப்டாப்பை கொடுங்க, அந்த அம்மா கொடுத்தார்கள் நீங்க கொடுங்க என்று கேட்டார்கள். வழங்கவில்லை.
திமுக அரசு வழங்கியது. 20 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கியது.
5 ஆண்டுகளில் 2016 -2021 வரைக்கு எந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிமுக ஆட்சி குறைக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூவாயும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்தது திராவிட மாடல் அரசு.
தேவைக்கேற்ப சிறுபான்மையிருக்கான விடுதிகள் துவக்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது
தொடங்கினார்களா! இல்லை. தற்போது திமுக அரசு ஹ்ஜ் பயணிகளுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு விடுதிகள் கொண்டுவரப்படும் என்றது அதிமுக தேர்தல் அறிகை
சொன்னார்கள். ஆனால் செய்யவில்லை. திமுக அரசு தோழி விடுதியை அமைத்து, தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் இருந்து பெண்பிள்ளைகள் பாதுகாப்பாடு இன்றைக்கு அங்கே தங்கி பணிபுடிந்து கொண்டிருக்கிறார்கள்.
மாற்றுத்திறாளிகளுக்கு சம வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதற்கும் அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றது அதிமுக தேர்தல் அறிகை
செய்தார்களா? இல்லை. மாறாக போராடிய மாற்றுத்திறானாளிகள் கண்பார்வையற்ற மாற்றுத்திறானாளிகளை பேருந்தில் கொண்டு போய் சென்னைக்கு வெளியில் சுடுகாட்டில் இறக்கி விட்டது அதிமுக.
ஆனால் திமுக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி நியமனமாக மாற்றுத்திறனாளிகள் போட்டியின்றி உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் பங்கேற்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்து ஆயிரக்கணக்கானோர் அதில் பயன்பெற்றுள்ளனர்.

மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உயர்நிலை மேம்பாலங்கள் அமைக்கப்டும் – அதிமுக தேர்தல் அறிகை
செய்தார்களா. இல்லை ஆனால் திமுக தேனாம்பேட்டை முதல் கிண்டி வரை உயர்நிலை மேம்பாலம் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பெருங்களத்தூரில் மேம்பாலபணி நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்து வாங்கப்படும். புதிய வழித்தடங்களுக்கு விடப்படும் அதிமுக தேர்தல் அறிகை.
ஆனால் வாங்கவும் இல்லை. ஆனால் திமுக நகரங்களில் பல அதிநவீன வசதிகளுடன் கூடிய மின்சாரப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, வெளி மாவட்டங்களுக்கு செல்ல சொகுசு பேருந்து (Volvo Bus).
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்துர் ஆகிய இடங்களில் மோனோ ரெயில் திட்டம் செய்யப்படுத்தப்படும் – அதிமுக தேர்தல் அறிகை
செயல்படுத்தவும் இல்லை. மாறாக மதுரை கோவை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதிக் தராத பாஜக அரசை வலியுறுத்தக் கூடவில்லை.
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலனில் சிறந்த மாநிலமாக உருவாக்கப்படும். அதிமுக தேர்தல் அறிகை
10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. மாறாக 44 ஆவது செஸ் சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டை நடத்திக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின். மகளிர் டென்னிஸ் போட்டி, கேளோ இந்தியா, ஜூனியர் உலகக்கோப்பை, பார்முலா கார் பந்தையங்கள் என தமிழ்நாட்டை விளையாட்டுப் போட்டிகளின் தலைநகரமாக மாற்றியுள்ளது திமுக.
தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் அதிமுக தேர்தல் அறிகை
ஆனால் 10 ஆண்டுகளில் வழங்கவில்லை. திமுக அரசு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கனடா நாடு பாராட்டியுள்ளது.

36 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டமே தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக

ஆனால் வல்லுநர் குழுவைக் கூட அமைக்கவில்லை. ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும் இல்லை. மாறாக திமுக அரசு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்றத் திட்டத்தைக் கொண்டு வந்து ஓய்வூதியத்தை உறுதி செய்திருக்கிறது.
ஊடவியலாளர் செந்தில்வேல்
பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...