திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள் கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர், கோவை, சேலம், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தினமும் 2 முதல் 4 இடங்களில் மாவட்டத்தின் பல முக்கிய சாலைகளில் நாள் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமைக்குழு அறிவித்த சில நாட்களில் தோழர்கள் சுமார் 90-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் திமுக ஆட்சியை ஆதரித்து பரப்புரை செய்து வருகிள்ளனர். தொய்வில்லாமல் தோழர்கள் கடும் வெயிலிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்பு.
திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் 5 நாட்கள் தினமும் 4 இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டங்களை தோழர்கள் மாவட்டத்தின் மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு என பல முக்கிய சாலைகளில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக 5 நாட்களில் 20 கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். தோழர்களின் இந்த பரப்புரையில் பேசிய கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு (மாவட்ட தலைவர்) முன்னிலையிலும் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், திமுக அரசை உறுதி செய்வோம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடந்தது.
28.02.2026 (2வது நாள்): இடுவம்பாளையம், முருங்கம்பாளையம், தண்ணீர் பந்தல் (பல்லடம் சாலை), குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
02.03.2026 (3வது நாள்): மங்கலம் பிரதான சாலையில் கே.வி.ஆர் நகர் (சென்னை பேக்கரி அருகில்), செல்லா நகர், ஆண்டிபாளையம், ஆண்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முகில் இராசு (மாவட்டத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), அபத்ரா ஆனந்த் (திமுக-மாமன்ற உறுப்பினர்), சீனிவாசன் (திமுக,இடுவம்பாளையம் செயலாளர்) ஆனந்த் (மதிமுக பகுதி கழகச் செயலாளர்),தமிழ் அமுதன் (மார்க்சிய முற்போக்காளர் பேரவை), ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். கழகப் பொருளாளர் சு.துரைசாமி நிறைவுரையாற்றினார். இரா.சரசுவதி (மாநகர அமைப்பாளர்), மா. இராமசாமி (தெற்கு பகுதிச் செயலாளர்), இனியன், சிரிஜா ஆகியோர் நன்றி கூறினர். கழகத் தோழர்கள் மாரிமுத்து (மாநகர துணை அமைப்பாளர்), வீரபாண்டி கார்த்திக், மற்றும் செல்வகுமார் (மார்க்சிய பொதுவுடைமை கட்சி), எல்.அய்.சி கண்ணன், விஸ்வநாதன், முருங்கம்பாளையம் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு கழக வெளியீடுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சென்னை: மாவட்டக் கழகம் சார்பில் தினமும் 2 கூட்டங்கள் என இது வரை 11 தெருமுனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கலைநிகழ்ச்சிகள் பாடல்கள், நையாண்டி என பரப்புரைக்கென தனிப் பாடல்களை உருவாக்கி திமுக ஆட்சியை உறுதிசெய்வோம் என்ற முனைப்புடன் தோழர்கள் நடத்தி வருகிறார்கள். பொன்ராஜ், சத்யா, லதா கலைக் குழுவினர் இணைந்து இதற்கென தனி பிரச்சாரப் பாடல்களை உருவாக்கி அதை தனது பாணியில் பாடினார்கள். அருவி வலையொலி அனைத்து தெருமுனைக் கூட்டங்களையும் பதிவுசெய்து தனது வலையொலி பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் சமூக வலைதளத்தில் பார்த்து வருகின்றனர். திவிக சென்னை முகநூல் பக்கத்திலும் கூட்டங்கள் குறித்தான காணொலி வெளிவந்து சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. கழக வெளியீடுகளும் விற்பனை செய்யப்படுகிறது.
தோழர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் மற்றும் இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்‌.
மார்ச்-2: திமுக ஆட்சியை உறுதி செய்வோம்! என்ற தலைப்பில் திருவல்லிக்கேணி பகுதி கழகம் சார்பில் தோழர்கள் கோபிநாத், ராஜேஷ், சூர்யா ஏற்பாட்டில் 02.03.2025 அன்று மாலை 6 மணிக்கு திருவல்லிக்கேணி பெரியார் படிப்பகத்தில் தொடங்கி சைவ முத்தையா தெரு உள்ளிட்ட 10 இடங்களில் வீதி வீதியாக திமுக ஆட்சியை ஆதரித்து பரப்புரை நடைபெற்றது. ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணைச் செயலாளர்), கா.வே மோகன் (திமுக வட்டச் செயலாளர்), மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், பிரபு (வட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்டச் செயலாளர் உமாபதி, தோழர்கள் பிரகாஷ் மாஸ்டர், வீரா, இரண்யா, அருண், வடசென்னை ஏசு குமார், மாணிக்கம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரச்சாரத்தை செய்தனர். ஆட்சியின் சாதனைகளை தோழர்கள் ஒலிபெருக்கியில் சொல்லிக் கொண்டு நடந்து சென்றனர்.
மார்ச்-3: மாலை 5 மணிக்கு, சுரேந்தர் தலைமையில், குரோம்பேட்டை பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, தீபக் தலைமையில், பல்லாவரம் ரங்கநாத முதலி தெருவிலும், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சீராளன் (புஇமு) ஆகியோர் உரையாற்றினர். இளைஞரணியினர் உருவாக்கிய பிரச்சார வாகனம், மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
CPI மாவட்டச் செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டார். குரோம்பேட்டை கூட்டத்திற்கான செலவினங்களை இம்சாம்(திமுக இளைஞரணி மாநகர துணை அமைப்பாளர்) ஏற்றுக்கொண்டார். தர்மராஜ் இரவு உணவை ஏற்பாடு செய்தார்.
தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), மா. வேழ வேந்தன் (மாவட்டத் தலைவர்), ப.அருண் (சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), சுகுமார், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), அஜித், குமார், புருஷோத், அப்பு, மாணிக்கம், அசோக், மயிலை அருண், வீரா கனிகா செல்வன், பிரீத்தி, புகழேந்தி, கிரிஸ்டோ, தினியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
சேலம்: மாவட்டக் கழகம் நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் 01.03.2026 நாள் முழுவதும் வெள்ளார் நூலகம், மேச்சேரி பேருந்து நிலையம், ஓமலூர் பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவசண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கிருஷ்ணன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), தங்கதுரை (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர். நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். தேவபிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), உமாசங்கர் (வனவாசி நகரச் செயலாளர்), பெரிய சோரகை ஆனந்த், புக்கம்பட்டி கணேசன் ஆகியோர் பரப்புரை கூட்டத்தின் நோக்கங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். மேச்சேரி சபரி நன்றி கூறினார். வெள்ளார் (திமுக சேலம் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்), திரு.மா.கதிர்வேல் (முன்னாள் கவுன்சிலர் திமுக), எ.எம்.பழனிசாமி (வெள்ளார் ஊராட்சி ஒன்றியத் தலைவர்) சிறப்பு அழைப்பாளரக கலந்து கொண்டனர். நினைவு பரிசாக கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர். மேட்டூர் முத்துராஜ், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்கள் நாகராஜ், கவியரசு மற்றும் சிந்தாமணியூர் முருகேசன், மகிழினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை:- முதற்கட்டமாக சூலூர் வீதிகளில் ஒலித்த கழகப் பரப்புரை. கழகத் தோழர்கள் நாள் முழுவதும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தினர். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
06.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 8மணி வரை கலங்கல் பேருந்து நிறுத்தம், சூலூர் புதிய பேருந்து நிலையம், குரும்பபாளையம் ரேசன்கடை மைதானம் மற்றும் நீலாம்பூர் அம்பேத்கர் நகர் குடியிருப்புப்பகுதி ஆகிய 4 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் இரா.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சூலூர் தமிழ்ச்செல்வி மற்றும் நீலாம்பூர் தங்கராசு ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, நிர்மல் குமார் (கோவை மாநகரத் தலைவர்), பரிமளராசன் (கழக சமூக வலைதளப் பொறுப்பாளர்), திருப்பூர் சங்கீதா (திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அன்னூர் விஷ்ணு, மோகன கிருஷ்ணன், சிவராசு ஆகியோர் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய தேவையை பட்டியிலிட்டு பேசினார்கள்.
கோவை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார், சூலூர் பாவேந்தர் பேரவையை சார்ந்த ஆசிரியர் வேலுமயில் மற்றும் வரதராசன், தி.மு.க. சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் அரசூர் அன்பரசன், துணைச் செயலாளர் சீனிவாசன், குரும்பபாளையம் கிளைச் செயலாளர் துரைச்சாமி, கிளை அவைத் தலைவர் செல்வராசு, ம.தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் யுவராஜ், சூலூர் கிருஷ்ணசாமி, அம்பேத்கர் நகர் கிளைச் செயலாளர் ஜெயலட்சுமி துணைச் செயலாளர் நித்யா, தரணி, ராஜீ, சூலூர் ஒன்றிய செயலாளர் பொங்கலூர் கார்த்தி மற்றும் கழகத் தோழர்கள் திருப்பூர் முத்துலட்சுமி, சரஸ்வதி, அய்யப்பன் மற்றும் நவீந்தரகுமார், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலங்கல் பகுதியில் பெரியாரிய உணர்வாளர்கள் கார்த்திக் – கற்பகம் ஆகியோர் கலந்து கொண்ட தோழர்களுக்கு தேநீர் வழங்கினர். மதிய உணவை பசுமை நிழல் விஜயகுமார் வழங்கினார். மாலை குரும்பபாளையம் யுவராஜ் தேனீர் வழங்கினார். இரவு உணவை கழகத் தோழர் நீலாம்பூர் தங்கராசு ஏற்பாடு செய்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...