கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!
கோவை:- சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தைச் சார்ந்தவர் மாரண்ணன். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தனது இளம் வயதில் இருந்தே பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும், திராவிடர் இயக்கக் கொள்கைகள் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். மேலும் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கங்களை ஊக்குவிப்பதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டவர் ஆசிரியர் மாரண்ணன். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பணிகளை பாராட்டியும் மேலும் தொடர்ந்து செயல்பட விருப் பத்தைத் தெரிவித்து ரூ.10,000/-யை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமாரிடம் அவர் வழங்கினார்.
பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியுடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். நிறைவாகக் கழகத்தின் வார இதழான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.300/- செலுத்தி மகிழ்ந்தார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ், மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 19032026
