ஈழத்தமிழர்கள் குடியுரிமை மற்றும் கூட்டாட்சிக்கு திமுக குரல்!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் கூட்டாட்சிக்கு குரல் கொடுப்போம் என்று வலியுறுத்தியுள்ளது. இலங்­கைத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் சமூக உரி­மை­களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக. இதற்­காக ஆட்சி­யையே இழந்த வர­லாறு திமுகவுக்கு உண்டு. இலங்கையில் நடை­பெற்ற இனப்­­படு­கொலையில் இருந்து தப்பி, தமிழ்­நாட்டில் 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாகத் தங்­கி­யுள்ள தமி­ழர்­க­ளுக்கு இருப்­பி­டம், கல்வி, மருத்­து­வம் போன்ற உத­வி­களை மாநில அரசு வழங்கி வரு­கி­றது. அக­தி­கள் முகாமை மறுவாழ்வு மைய­மா­கப் பெயர் மாற்­றம் செய்துள்ளது.

630 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 10,469 வீடு­கள் கட்ட அனு­ம­தி­ய­ளிக்கப்பட்டு, இது­வ­ரை­யில் 5,920 வீடுகள் கட்­டி ­மு­டிக்­கப்­பட்டு முகாம் வாழ்மக்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள வீடு­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்சி­யில்…

2019–ஆம் ஆண்டு இந்­திய அரசு கொண்­டு­வந்த குடியு­ரி­மைத் திருத்­தச் சட்டத்­தின்­படி, இலங்­கைத் தமி­ழர்­கள் குடி­யு­ரி­மை கோரும் விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது என்ற நிலைப்பாட்­டைக் ­கை­வி­டு­மாறு ஒன்­றிய அரசை தி.மு.க. வலி­யு­றுத்­து­கி­றது. இலங்­கைத் தமிழ் மக்­கள் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்­கும்­போது, அவர்­க­ளி­டம் கட­வுச்­சீட்டு, நுழைவு அனுமதி போனற­வற்­றைக் கோரா­மல் தமிழ்­நாடு அரசு வழங்­கி­யுள்ள அடை­யாள அட்­டையைச் சான்­றா­தா­ர­மாக ஏற்க ஒன்­றிய அரசை தி.மு.க. கோரு­கி­றது.

இலங்­கைத் தமி­ழர்­கள் குடி­யு­ரி­மைக்கு விண்ணப்பிக்­க­வும் அதனைச் சரிபார்த்து மேல் நட­வ­டிக்கை எடுத்­தி­ட­வும் மாவட்ட அளவில் அதி­காரிகளை நிய­மிக்க தி.மு.க. கோரு­கி­றது.

இந்­தி­யா­வில் குடி­பெ­யர்ந்து வாழும் ஈழத்­த­மிழர்க­ளின் சட்டப்­பூர்வ நிலையைத் தெளி­வா­கக் கூறிட ஒன்­றிய அரசை தி.மு.க. வலி­யு­றுத்­து­கி­றது.

தமிழ்­நாட்­டில் பல ஆண்­டு­க­ளாக வசித்து வரும் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு இந்­தி­யக் குடி­யு­ரிமை வழங்கிட ஒன்­றிய அர­சி­டம் தொடர்ந்து வலி­யுறுத்தப்­ப­டும்.

இலங்­கை­யில் கொண்­டு­வ­ரப்­ப­டும் அர­சி­ய­ல­மைப்­புச் சீர்­தி­ருத்­தங்களால் இலங்­கைத் தமிழ்ச் சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளைக் கருத்தில் கொண்டு, இலங்­கைத் தமி­ழர் உரி­மை­க­ளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்­கை­களை இந்திய அரசு உட­ன­டி­யாக எடுக்க வேண்­டும். பாரம்பரியமாக தமிழர்­கள் வாழ்ந்து வந்த பகு­தி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மக்­கள்­தொகை மாற்­றங்­கள், நில அப­க­ரிப்­பு­கள், தமிழ் அடை­யா­ளத்­தின் சிதைவு ஆகி­ய­வை தடுக்­கப்­பட வேண்­டும் என்று வலியுறுத்துகிறது.

இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நியா­ய­மான கோரிக்கைகளுக்கு முழு அங்­கீ­கா­ரத்­தினை இலங்கை அரசு வழங்க ஒன்­றிய அரசு மூல­மாக வலி­யு­றுத்து­வோம். மலை­ய­கத் தமி­ழர் உட்­பட அனைத்து குடி­மக்­களுக்­கும் சமத்­து­வத்­தை­யும் பாகு­பா­டின்­மை­யை­யும் உறுதி செய்­யும் ஒரு கூட்­டாட்சி முறையை நிறுவ வலி­யு­றுத்­து­வோம்.
– திமுக 2026 தேர்தல் அறிக்கையிலிருந்து..
பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...