தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 தெருக்களில் ஜாதிப் பெயர் பலகை அடையாளமாக வைத்ததை கண்டித்து 09.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், கவியரசு ஆகியோர் இருந்தனர்.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026
