கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர்: மார்ச்04 (4வது நாள்): கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலையிலும் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், திமுக அரசை உறுதி செய்வோம்” என்ற தலைப்பில் 4வது நாளாக 04.03.2026 அன்று காங்கேயம், பேருந்து நிலையம், வெள்ளக்கோவில் பகுதியில், முத்தூர் (மூன்று சந்திப்பு சாலையில்), நத்தகாடையூர் ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன.

மார்ச்-05 (5வது நாள்): தாராபுரம், வட தாரை பகுதி, தாராபுரம் அய்ந்து முக்கு சாலை, தாராபுரம், அண்ணா சாலை, தாராபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
ஈரோடு இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சூலூர் பன்னீர்செல்வம் (தலைமைக் குழு உறுப்பினர்), பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முகில் இராசு (மாவட்டத் தலைவர்), சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பளர்), கவி பு.இ.மு காங்கேயம் பகுதி பொறுப்பாளர், ஆறுமுகம் ஆசிரியர் (தி.க காங்கேயம் ஒன்றியத் தலைவர்) கதிர்வன் (தாராபுரம் பகுதியின் திமுக நகர அமைப்பாளர்) தொடங்கி வைத்தார். கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். திமுக நகர தொண்டர் அணி அமைப்பாளர் சாஜகான் கலந்து கொண்டு சிறப்பித்தார். அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), சரசுவதி (மாநகர அமைப்பாளர்) சென்னிமலை செல்வராஜ் (ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர்), சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

மாரிமுத்து (மாநகர துணைத் தலைவர்), சரஸ்வதி (மாநகர அமைப்பாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), சிரிஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.தராபுரம் நிகழ்வை மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் நெறியாளுகை செய்தார், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தோழர் ராசாமணி இல்லத்தில் தாராபுரம் வழக்கறிஞர் கிருட்டிண குமார் அவர்களால் தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டி பொது மக்கள் ரூ.4780 நன்கொடையாக வழங்கினார்கள்.
கோவை: 07.03.2025.சனிக்கிழமை காலை சின்னியம்பாளையம் பேருந்து நிலையம், உப்பிலிபாளையம் பூங்கா திடல் பேருந்து நிறுத்தம், சவுரிபாளையம் மூன்று வீதி சந்திப்பு, பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. சிவராஜ், உக்கடம் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), நிர்மல்குமார் (கோவை மாநகரத் தலைவர்) ஆகியோர் கருத்துரையாற்றினர்.

பன்னீர் செல்வம் (மாவட்டச் செயலாளர்), ந. தமிழ்ச்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), சங்கீதா (திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் ), தரணி, வழக்குரைஞர், சரவணகுமார், சாம்விஜய், ஓட்டுநர் ரமேஷ் சவுரிபாளையம் க.மணிகண்டன் (51 வது வட்டக் கழகச் செயலாளர்), இல.மோகன்ராஜ் (51வது வட்டச் செயலாளர்), லோ.கார்த்தி (இளைஞரணி அமைப்பாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு வழக்குரைஞர் சரவணகுமார் கரும்புச் சாறு வழங்கினார். மதிய உணவு தோழர் சிவராஜ் ஏற்பாடு செய்து கொடுத்தார். திமுக தோழர்கள் கலந்து கொண்டு தோழர்களுக்கு தேனீர் வழங்கினார்கள். இரவு உணவு கிருஷ்ணன் வழங்கினார். உப்பிலிபாளையம் கூட்டத்தில் திமுக தொண்டர் பெரியவர் நிகழ்ச்சி பார்த்து தோழர்களுக்கு குளிர் பானம் வழங்கினார்.

மார்ச்-14: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் சிட்டி பேக்கரி முன்பு 14.03.2026 மாலை 6 மணி அளவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகர அமைப்பாளர் நவீன் கலந்து கொண்டு உரையாற்றினர். இராஜலட்சுமி நன்றி கூறினார். மாநகரத் தோழர்கள் தரணி சத்தியமூர்த்தி கிருஷ்ணன் கதிரவன் கலந்து கொண்டனர். பகுதி மக்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...