திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

சென்னை மாவட்டக் கழகங்களின் (தென்சென்னை, வடசென்னை) சார்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்…திமுக ஆட்சியை உறுதிசெய்வேம்! என்ற தலைப்பில் தினமும் 2 கூட்டங்கள் என 30 கூட்டங்களை நடத்தியுள்ளனர். அரசியல் நையாண்டி, பாடல்கள் என கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று விளக்கி வருகின்றனர். தோழர்கள் இரா. உமாபதி – சத்யா – கார்மேகம் – பொன்ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் மூன்று வாரங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டங்களின் தொகுப்பு:

மார்ச் 3 முதல் மார்ச் 9 வரையிலான 12 கூட்டங்களை, ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்) – இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மார்ச்-4: மாலை 5 மணிக்கு, பிரீத்தி தலைமையில், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, அபிநந்தன் தலைமையில், கீழ்க்கட்டளை பெரிய தெருவிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன.கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், U2BRUTUS மைனர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திமுக: மடிப்பாக்கம் 187வது வட்டச் செயலாளர் எம்.கே.ஜெய் இரவு உணவை ஏற்பாடு செய்து கொடுத்தார். மடிப்பாக்கம் 188-வது வட்டப் பொருளாளர் த. அன்பரசன், சிற்றுண்டி வழங்கினார். சோழிங்கநல்லூர் தி.க மாவட்டத் தலைவர் பாண்டு, மடிப்பாக்கம் ஜெயராமன் (தி.க), எஸ். அரிகிருஷ்ணன் (திமுக தென்சென்னை மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர், மடிப்பாக்கத்தார்), விமல் (திமுக 188-வது வட்ட இளைஞரணி பொறுப்பாளர்), திமுக 187-வது வட்ட பகுதிப் பிரதிநிதிகள் என். வி. ஆனந்தகுமார், சி. நூக்கப்பிள்ளை, செல்வராஜ் (மடிப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி), லெனின் (சி.பி.அய்), கி. மலையமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மார்ச்-5: மாலை 5 மணிக்கு, குருபிரசாத் தலைமையில், தரமணி 5சி பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, முழக்கம் உமாபதி தலைமையில், பெருங்குடி அண்ணா நெடுஞ்சாலையிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கு. அன்பு தனசேகர் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்), பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் உரையாற்றினர். தோழர் முனியன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மார்ச்-6: மாலை 5 மணிக்கு, மடிப்பாக்கம் அருண் தலைமையில், புழுதிவாக்கம் மெயின் ரோட்டிலும், மாலை 7 மணிக்கு, ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திமுக: கே.ஆர். ஜெகதீஸ்வரன் (ஆதம்பாக்கம் 165வது வட்டச் செயலாளர்), டி.ஆர்.எம். மணிகண்டன் (காஞ்சி வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர்), கணேஷ் (சோழிங்கநல்லூர் தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர்), பால்ராஜ் (இளைஞரணி), ராமசாமி (கோவிலம்பாக்கம்) ஆகியோரும் முனுசாமி (தி.க), AISCST ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி ஆனந்தராஜ், பெரியார் பற்றாளர்கள் இயக்கத்தைச் சேர்ந்த நங்கநல்லூர் கார்த்திகேயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மார்ச்-7: மாலை 5 மணிக்கு, இரண்யா தலைமையில், வேளச்சேரி நேதாஜி சாலையிலும், மாலை 7 மணிக்கு, நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர் (தென்சென்னை) இம்மேனுவல் துரை தலைமையில், வேளச்சேரி காந்தி சாலையிலும், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஊடகவியலாளர்கள் ரவுத்திரா , பாட்டர் ஆகியோர் உரையாற்றினர். ரவுத்திரா ஆற்றிய உரை பொதுமக்கள் பலரை ஈர்த்தது. பெண்களுக்கு திமுக அரசு செய்து வருகிற சாதனைகளை தனது பாணியில் எடுத்துரைத்தார்.

மார்ச்-9: நங்கநல்லூர் பெரியார் – அண்ணா சிலைகளுக்கு சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி மாலை அணிவித்த பின், மாலை 5 மணிக்கு, தினியா தலைமையில் நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையிலும், மாலை 7 மணிக்கு, ம. குகானந்தன் தலைமையில், நங்கநல்லூர் 48-வது தெருவிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. பேரன்பு சிறப்புரையாற்றினார். எட்வின் பிரபாகரன் இரவு உணவை ஏற்பாடு செய்தார்.

சிபிஎம் பகுதிக் குழு உறுப்பினர் வெங்கடேசன், சுகுமார் (தமிழ் சிந்தனையாளர் பேரவை), திமுக: மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், கண்ணன், திமுக ஆட்டோ ஓட்டுனர்கள், மமக பகுதிச் செயலாளர் சாகுல் ஹமீது, டெய்லர் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைத்து கூட்டங்களிலும், இரா. உமாபதி – லதா – கார்மேகம் – பொன்ராஜ் – சத்யா குழுவினரின் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

மார்ச்-10: மாலை 5 மணிக்கு, லட்சுமணன் தலைமையில், தியாகராய நகர் மதுரைவீரன் கோயில் அருகிலும், மாலை 7 மணிக்கு, PTC வெங்கடேசன் தலைமையில், முத்துரங்கன் சாலையிலும் (ஞானவாபி அருகே), தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், ராஜா (தமிழ்தேச மக்கள் கட்சி), மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அன்னை மணியம்மையார் பிறந்தநாளையொட்டி, படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் முழக்கமிட்டனர்‌. சாவித்ரி பாய் பூலே நினைவுநாளும் அனுசரிக்கப்பட்டது. விசிக வட்டச் செயலாளர் ரமேஷ், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மார்ச்-11: மாலை 5 மணிக்கு, அ. அறிவுமதி தலைமையில், அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், மாலை 7 மணிக்கு, சைதை சிவா தலைமையில், கங்கையம்மன் கோயில் அருகிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். ம.கி. எட்வின் பிரபாகரன் (சென்னை மாவட்ட அமைப்பாளர்), அ. அறிவுமதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மார்ச்-12: மாலை 6 மணிக்கு, புகழேந்தி தலைமையில், எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. துரைராசு (எம்.ஜி.ஆர் பகுதி அமைப்பாளர் ) ஒருங்கிணைத்தார். கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), U2BRUTUS ஞான சத்யா, கழகப் பேச்சாளர் மகிழவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துரைராசு 10 முழக்கம் சந்தாதொகை ரூ.3,000 வழங்கினார்.

மார்ச்-13: மாலை 5 மணிக்கு, மனோஜ்குமார் தலைமையில், சிவகாமி அம்மையார் காலனி 6வது தெருவிலும், மாலை 7 மணிக்கு, இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு) தலைமையில், எம்.கே.பி நகர் மேற்கு அவென்யூ – 2A பேருந்து நிலையத்திலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, ர. பிரகாசு (நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்) சிறப்புரையாற்றினார். மனோஜ்குமார் இரவு உணவை ஏற்பாடு செய்தார்.

திமுக: 36வது வட்ட திமுக மாமன்ற உறுப்பினர் A R.R. மலைச்சாமி, M. பூங்கோதை (சென்னை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் பிரகாஷ், கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மார்ச்-17: மாலை 5 மணிக்கு, சஞ்சய் தலைமையில், கொளத்தூர் ஹரிதாஸ் மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகிலும், மாலை 7 மணிக்கு, விஜய பிரதாபன் தலைமையில், பெரம்பூர் அகரம் – சந்தரபெருமாள் கோயில் தெரு, காந்தி சிலை அருகிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. ந. தட்சிணாமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர்) ஒருங்கிணைத்தார். மைனர் (U2BRUTUS), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தமிழ்ச்செல்வி, பாட்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மார்ச்-18: மாலை 6 மணிக்கு, இளவரசன் தலைமையில், சேத்துப்பட்டு அம்பேத்கர் மைதானம் அருகில், தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. ராஜன் (சேத்துப்பட்டு பகுதி அமைப்பாளர்) ஒருங்கிணைத்தார். சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), கழகப் பேச்சாளர் மகிழவன், இரண்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ராஜன் இரவு உணவை ஏற்பாடு செய்தார்.

மார்ச்-19: மாலை 5 மணிக்கு, வெங்கடேசன் தலைமையில், அடையாறு சாஸ்திரி நகர் தாமோதரபுரம் மெயின் ரோடு சந்திப்பிலும், மாலை 7 மணிக்கு, அஜித் தலைமையில் திருவான்மியூர் நாகாத்தம்மன் கோயில் அருகிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. முழக்கம் உமாபதி (பகுதி அமைப்பாளர்) ஒருங்கிணைத்தார். பாரி சிவா, இரா. உமாபதி (மாவட்டச் செயலாளர்) நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர்கள் பிரசாந்த் – இம்மேனுவல் துரை ஆகியோர் உரையாற்றினர். வேணுகோபால் (விழிகள் பதிப்பகம்) இரவு உணவை ஏற்பாடு செய்தார். திமுக: முன்னாள் பகுதிச் செயலாளர் துரை கபிலன், 174வது வட்டச் செயலாளர் பி. ராஜி, சுரேஷ் சபா, தமிழ் MS (இளைஞரணி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மார்ச் 20: மாலை 5 மணிக்கு குடிஅரசு தலைமையில், பட்டாளம் மார்கெட்டிலும், மாலை 7 மணிக்கு, விஜயன் தலைமையில் புளியந்தோப்பு மோதிலால் தெருவிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ந. தட்சிணாமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர்) ஒருங்கிணைத்தார். இரா. உமாபதி (மாவட்டச் செயலாளர்), தினகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மார்ச்-21: மாலை 6 மணிக்கு, திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா தலைமையில், திருவல்லிக்கேணி என்.கே.டி பள்ளி அருகில், தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சு. கோபிநாத் (பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்) ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இரண்யா, ஊடகவியலாளர்கள் ஞான சத்யா, கவிதா ஆகியோர் உரையாற்றினர்.

தொடர் பரப்புரையில் கழகத் தோழர்கள் மா. வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), ப.அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), சுகுமார், மயிலை மனோகர், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), அஜித், குமார், பிரபாகரன் (சேலம் இளைஞரணி), சேலம் இளவரசன், மாணிக்கம், அசோக், மயிலை அருண், வீரா, மேட்டூர் முத்துராஜ், புகழேந்தி, சிபி, புருஷோத் அப்பு, கிரிஸ்டோ, இராவணன் (மாவட்டத் துணைச்செயலாளர்), சிவா – ப்ரவீன் aks, புருஷோத்தமன், சிகாமணி, யாழினி, கனிகா செல்வன், ஜெயந்தி, ஸ்ரீலேகா, லட்சுமணன், அருள்தாஸ், மஞ்சுநாதன், அகராதி, பிரீத்தி, , நிரஞ்சன், குறளரசி, யுவலதா, தினியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...