காதில் பூ சுத்துகிறார் எடப்பாடி!‌

மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்! – இசுலாமியர்கள் மத்தியில் எடப்பாடி பேச்சு.

 முத்தலாக் தடை சட்டத்தை ஆதரிப்பார்.

 குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பார்.

 திருப்பரங்குன்றத்தில்‌ எல்லைக் கல்லில் விளக்கேற்றி – மதக்கலவரத்தை உருவாக்கும் சங்கிகளை ஆதரிப்பார்.

 நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை ஏன் திமுக ஆட்சி ஏற்கவில்லை? என்று கேள்வி கேட்பார்.

”திராவிடத்தை அழிக்க முருகா வா!” என்று முருகன் மாநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டபோதும், கலவர மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவார்.

 தங்கள் சகாக்களான செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, ராஜ் சத்தியன் அவர்களையும் மாநாட்டுக்கு வழியனுப்பி வைப்பார்.

 ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணியை அனுப்பி வைப்பார்.

 அதே முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணாவை அவமதிக்கும் விடியோ ஒளிபரப்பிய போது பங்கேற்ற அதிமுகவினர் மவுனம் சாதித்தார்கள்.‌எடப்பாடி இதை கண்டிக்க மாட்டார்.

 கோயில் நிதியை எடுத்து கல்லுரிகள் கட்டக் கூடாது என்ற சங்கிகளின் குரலை எதிரொலிப்பார்.

பெரியார் முழக்கம் இதழ் 19032026

You may also like...