1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம் -மு.க.ஸ்டாலின்

இங்கு கூடி­யி­ருக்­கும் ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும், மக்­களிடம் போகும் போது சொல்ல வேண்­டி­யது என்ன? நடக்க இருக்­கும் தேர்­தல், தி.மு.க. vs NDA கிடை­யாது! தமிழ்­நாடு வெர்­சஸ் NDA! இன்­னும் எளி­மை­யாக சொல்ல வேண்­டும் என்­றால், வெல்­லப் போ­வது, தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்­ப­துதான் 2026 தேர்­தல்! இதில் நம்­மு­டைய தமிழ்­நாடு அணி வெற்றி பெற வேண்­டும் என்­றால், தி.மு.க. தலைமையி­லான மதச்­சார்பற்ற முற்போக்­குக் கூட்­ட­ணி தான் வெற்றி பெற வேண்­டும்! உங்கள் வாக்­கு­க­ளைத் தி.மு.க.வுக்­கும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கும் போடுங்கள் என்று கேளுங்­கள்! இது­தான் நீங்­கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடை­விடாமல் மக்­க­ளி­டம் பரப்ப வேண்­டிய மெசேஜ்!
இந்த நேரத்­தில், தந்தை பெரி­யார் 1971 தேர்­த­லின்­போது சொன்னதை, நினைத்­துப் பார்க்­கி­றேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்­தால்­தான், தமிழ்ச்­ச­முதா­யம் எதிர்­பார்க்­கும் முன்னேற்­றம் ஏற்­ப­டும்” என்­றார். இப்­போ­தும் தந்தை பெரியார் சொன்­னதை மன­தில் வைத்து நம்­மு­டைய பயணத்­தைத் தொடர வேண்­டும்!
இங்கே வந்­த­தும் என்­னு­டைய நினை­விற்கு வந்­தது. 2021 தேர்தலுக்கு முன்பு, இதே திருச்­சி­யில், இதே இடத்­தில் ஏழு இலக்­கு­களை உறு­தி­மொ­ழி­க­ளாக நான் அறி­வித்­தேன். அதில் முதல் இலக்கு வள­ரும் வாய்ப்­பு­கள், வளமான தமிழ்நாடு! இரண்­டா­வது இலக்கு மக­சூல் பெருக்­கம், மகி­ழும் விவசாயி! மூன்­றா­வது இலக்கு – குடி­மக்­கள் அனை­வ­ருக்கும் குறை­யாத தண்­ணீர்! நான்­கா­வது இலக்கு – அனை­வ­ருக்­கும் உயர்­த­ரக் கல்வி – உயர்ந்த மருத்துவம்! ஐந்­தா­வது இலக்கு – எழில்மிகு மாந­க­ரங்­க­ளின் மாநி­லம்! ஆறாவது இலக்கு – உயர்­தர ஊர­கக் கட்­ட­மைப்பு, உயர்ந்த வாழ்க்­கைத் தரம்! ஏழா­வது இலக்கு – அனை­வ­ருக்­கும் அனைத்­து­மான தமிழ்­நாடு!
கழக அரசை எதி­ரி­க­ளும் பத்­தி­ரி­கை­க­ளும் பாராட்­டு­கி­றார்­கள்!
நெஞ்சை நிமிர்த்­திச் சொல்­கி­றேன்! இந்த ஏழு இலக்குகளையும் நம்­மு­டைய ஐந்­தாண்டு ஆட்­சி­யின் திட்­டங்­க­ளால் நிறைவேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம்! அத­னால்­தான் மக்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்­கள்! இதை­யெல்­லாம், நம்­மு­டைய எதி­ரி­களே, இன்­றைக்கு மன­திற்­குள் ஒப்­புக்­கொள்­வார்­கள். யாரா­லும் மறைக்க முடி­யாத, மறுக்க முடி­யாத உண்மை இது! தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து புறக்­க­ணிக்­கும் ஒன்றிய பா.ஜ.க அர­சு­கூட, “நம்­பர் ஒன் மாநி­லம் – தமிழ்­நாடு’ என்று சொல்­கி­றார்­கள். உலக பத்­தி­ரி­கை­களே, ‘சூப்­பர் ஸ்­டார் ஸ்டேட் தமிழ்­நாடு’ என்று பாராட்­டு­கி­றார்­கள். அந்த அளவிற்கு நாம் கெத்­தாக முன்­னேறி இருக்­கி­றோம்!
– திருச்சி மாநாட்டில் முதல்வர் உரை
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...