அகில இந்திய ஒதுக்கீடுகளுக்கு திமுக எதிர்ப்பு!

‘குலத்­துக்கு ஒரு நீதி என்­பது அநீ­தியே’ என்பதை முழங்கி எழுந்­ததே திரா­விட இயக்கம். “சமூ­க­நீதி என்பது சமு­தா­யத்­தில் முன்னே உயர்ந்த­வர்களை கீழே இறக்கி விடு­வது அல்ல. பள்­ளத்­தை சமப்படுத்தி மேடு ஆக்­கு­வதே சமூ­க­நீதி எனப்­ப­டும் இட­ஒ­துக்­கீடு” என விளக்­கி­னார் தந்தை பெரி­யார்.

இட ஒதுக்­கீடு எனப்­ப­டும் சமூ­க­நீ­திக் கொள்கையானது யாரா­லும் கைவைக்க முடி­யாத கொள்கை­யாக மாற திரா­விட இயக்­கத்­தின் தொடர் போராட்டங்­கள் தான் கார­ணம். இது இந்­திய அரச­மைப்­புச் சட்­டம் ஏற்­றுக்­கொள்­ளும் கொள்கையாக மாற­வும் திரா­விட இயக்­கத் தலைவர்­க­ளின் போராட்­டமே கார­ணம். இன்று அகில இந்­தியா முழு­மைக்­கும் இக்­கொள்கை நடை­மு­றைக்கு வர முன்­னோடி மாநி­ல­மா­கத் தமிழ்­நாடே இருந்­தது.

சமூகநீதி கண்­கா­ணிப்புக் குழு அமைத்­தது திரா­விட மாடல் அரசு. இதன் தொடர்ச்சி­யாக மேலும் பல முன்­னெ­டுப்­பு­களை எடுக்க வேண்டியது அவ­சியம் என திரா­விட முன்­னேற்­றக் கழகம் கருதுகி­றது. இதன் தொடர்ச்­சி­யாக, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இட­ஒ­துக்­கீட்டை முழு­மையாக எல்லா நிலை­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­திட அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொள்­வோம் என வாக்குறுதி அளித்துள்ளது. இடஒதுக்கீடு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­கள் நிய­ம­னத்­தில் சமூ­க ­நீ­தியை நிலை­நாட்­டிட இட­ஒ­துக்­கீடு முறை­யைக் கொண்டு வரு­வ­தற்­குத் தேவை­யான அர­சி­யல் சட்­டத்­தி­ருத்­தம் மேற்­கொள்ள ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­து­வோம்.

ஒன்­றிய அர­சின் உயர்­ப­த­வி­க­ளி­லும், பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ், தேசிய சட்­டப்­பள்­ளி­கள் போன்ற உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளி­லும் மண்­டல் கமி­ஷன் பரிந்­து­ரைப்­படி இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்கு 27% இட­ஒ­துக்­கீடு முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டாத அநீ­தியை எதிர்ப்­போம்.

சட்­ட­பூர்­வ­மா­கத் தரப்­பட்­டுள்ள இட­ஒ­துக்­கீடு எண்­ணிக்­கை­யா­னது முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும்; அது தொடர்ந்து கண்­காணிக்கப்படும்.

ஆதி­தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­னர், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் ஆகிய மாண­வர்­க­ளுக்­கான கல்வி உத­வித்­தொகை உயர்த்­தப்­ப­டும்.

ஆதி­தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் மிகவும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர் பெண் க­ளுக்கான தொழில்­வாய்ப்­பு­க­ளைப் பெருக்­கு­வ­தற்­கான திட்­டங்­கள் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.

தமிழ்­நாட்­டி­லுள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் அகில இந்­திய ஒதுக்­கீடு நடை­மு­றையை மாற்றி, அதற்­குப் பதி­லாக மாநில அர­சின் இட­ஒ­துக்­கீடு கொள்­கை­யைப் பின்­பற்­றிட ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­து­வோம்.

தேசிய மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­பு­டன் எடுக்­கப்­ப­ட­வுள்ள ஜாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்­பின் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் உரிய பிர­தி­நி­தித்­துவம் கிடைப்­ப­தற்­கான வழி­வகை செய்­யப்­ப­டும்.

ஆண்­டுக்கு ரூ. 20 இலட்­சத்­திற்கு மேல் ஊதியம் பெறும் உயர்­நி­லைப் பணி வாய்ப்­பு­களை ஆதி­ தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் மிக­வும் பிற்படுத்­தப்பட்­டோர், சீர்­ம­ர­பி­ன­ருக்கு வழங்கும் தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு முத­லீட்டு ஊக்க மானி­யம் மற்றும் இதர சலு­கை­கள் வழங்­கப்­ப­டும்.
– திமுக 2026 தேர்தல் அறிக்கையிலிருந்து
பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...