பாஜகவுக்கு ஒரே நெருக்கடி திமுகதான்

ஒன்றிய ஆட்சிக்குக் கடும் நெருக்கடிகளைத் தந்து வரும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று கோலாகல சீனிவாசன் என்ற பார்ப்பன பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். தீவிர ஆர்.எஸ்.எஸ்-க்காரான இவரது பேட்டி:

அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கக் கூடிய எதிர்க்கட்சிகளின் ஆட்சிகள் பல மாநிலங்களில் இருந்தாலும் ஒன்றிய அரசுக்குத் தலைவலியை தரக் கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியது ஆளுநர்களுக்கு எதிரான மிகவும் கடுமையான தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு விழுந்த அடி.

ஒரே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தலைவலி மேற்கு வங்கத்தில் வர உள்ளது. கேரளாவில் பினராயி விஜயனுக்கு உள்ளது. ஆனால் இவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்குத் தொந்தரவு இருந்ததே கிடையாது. ஆனால் திமுக மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். மம்தா, பினராயைக் காட்டிலும் மோடி எதிர்ப்பில் வலுவாக உள்ளார் மு.க ஸ்டாலின். பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...