பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா
திருவண்ணமலை மாவட்டம் தமிழ்தாசன்- வல்லினத்தமிழ் ஆகிய இணையரின் மகன் பேரறிவாளன், கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்வம்- கோவிந்தம்மாள் ஆகிய இணையரின்மகள் தீபா ஆகிய இருவருக்கும் 09-02-2026 அன்று கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இணையேற்பு நடைபெற்றது.
“விடுதலைக் குரல்” தோழர்களின் பகுத்தறிவு பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் ஆ.ஆசைத்தம்பி, க.இராமர், ந.வெற்றிவேல், க.மதியழகன், மு.நாகராஜ், ஏ.ஜெயப்பிரகாஷ், இரா.கார்மேகம், மா.குமார் ,சி. சாமிதுரை, தே.இராமச்சந்திரன், பெரியார் பாரதிதாசன்,செ.வே.ராஜேஷ், ச.கு.பெரியார் வெங்கட், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ இளையரசன், த.பெ.தி.க மண்டலச் செயலாளர் செ.பிரபு (மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர்) ஆ.இராமலிங்கம், ஆ.நாகராசன் (சி.அய்.டி.யு.தொழிற்சங்கம்)உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 12032026
