ஜாதி தேவை என்கிறது ஆர்.எஸ்.எஸ்!

ஜாதிக் கட்டமைப்பு நீடிக்க வேண்டும்; ஆனால் ஜாதிகளுக்குள்ளே நல்லிணக்கம் வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்று அமைப்பின் தேசிய பரப்புரைத் தலைவர் சுனில் அம்பேத்கர் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறது. ஆனால் அந்த கணக்கெடுப்பை அரசியலுக்கு பயன்படுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு ஜாதியும் மற்ற பிற ஜாதிகளுடன் நட்புடன் பழகி பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றார். கோயில், சுடுகாடு, நீர்நிலை, பொது இடங்களில் ஜாதிப் பாகுபாடுகளை ஆர்.எஸ்.எஸ் சேர்க்கவில்லை என்றும் சுயம் சேவக்குகள் உள்ளூர் வட்டங்களில் இந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் சேர்க்கப்படுவது இல்லை; சுயம் சேவக்குகளாக பெண்கள் வர முடியாது என்ற கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை அவரது பேட்டி உறுதிப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இணையாக “ராஷ்டிய சேவிகா சமிதி” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதில் பெண்கள் சேரலாம் இதிலும் ஆர்.எஸ்.எஸ்-சில் இருப்பது போலவே சாகாக்கள் உண்டு என்றார் சுனில் அம்பேத்கர்.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...