ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

மதுரை: திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி இணைந்து ஜாதிப் பெருமை நூல் அறிமுக கூட்டம், மதுரையில் உள்ள மணியம்மை பள்ளியில் 08.03.2026 நடைபெற்றது.
ஊடகவியலாளர் சத்யராஜ் குப்புசாமி, கனியமுதன் (விசிக துணைப் பொதுச் செயலாளர்), பேரறிவாளன் (தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்) மற்றும் பிரபாகரன் (புஇமு) ஆகியோர் புத்தகத்திற்கான கருத்துரை நிகழ்த்தினார்கள். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) வரவேற்புரை ஆற்றினார். தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணிபாபா தலைமையில் நடைபெற்றது. மதுரைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை தோழர் தவம் அறக்கலம் வலையொலி (YouTube) பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். குமரன் (புஇமு) நன்றி கூறினார்.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...