26,000 ஒபிசி மருத்துவ மாணவர்களின்கல்வி உரிமையை மீட்டுத்தந்த மு.க.ஸ்டாலின்

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டுமென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, ஒட்டுமொத்த இந்திய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குமான உரிமையை 2021-இல் நிலைநாட்டினார். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்ற விவரங்களை, அந்த வழக்கை நடத்திய திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுப் பெற்றுள்ளார்.

அதன்படி, 2021 ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக இந்த நடை­முறை அம­லுக்கு வந்­த­போது 4,422 ஓபிசி மாண­வர்­கள் மருத்­து­வப் படிப்­பு
க­ளில் சேர்ந்­த­னர். இதில் 2,633 பேர் முது­நிலை (PG) படிப்­பு­க­ளி­லும், 1,662 பேர் MBBS படிப்­பி­லும், 127 பேர் BDS படிப்­பி­லும் இடங்­க­ளைப் பெற்­ற­னர்.

2022 ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 4,907 ஆக உயர்ந்­தது. அதில் 2,982 முது­நிலை, 1,804 MBBS மற்­றும் 121 BDS சேர்ந்­துள்­ள­னர்.

2023 ஆம் ஆண்­டில் 5,484 ஓபிசி மாண­வர்­கள் மருத்­து­வக் கல்­வியில் சேர்ந்­த­னர். இதில் 3,295 முது­நிலை, 2,057 MBBS மற்­றும் 132 BDS சேர்ந்துள்­ள­னர். 2024 ஆம் ஆண்­டில் 5,694 ஒபிசி மாண­வர்­கள் சேர்க்­கப்­பட்­ட­னர். இதில் 3,425 முது­நிலை, 2,133 MBBS மற்­றும் 136 BDS சேர்ந்­துள்­ள­னர்.

2025 ஆம் ஆண்­டில் 5,697 ஒபிசி மாண­வர்­கள் அகில இந்திய தொகுப்பில் இட­ஒ­துக்­கீட்­டின் பயனை பெற்­ற­னர். இதில் 3,404 முது­நிலை, 2,160 MBBS மற்­றும் 133 BDS சேர்ந்­துள்­ள­னர்.

இதன் மூலம் 2021 முதல் 2025 வரை மொத்­த­மாக 26,204 ஓபிசி மாண
வர்­கள் அனைத்­திந்­திய ஒதுக்­கீட்­டின் கீழ் மருத்­து­வக் கல்­வி­யில் சேர வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். இதில் 15,739 முது­நிலை மருத்­துவ இருக்கை
க­ளும், 10,465 பட்­டப்­ப­டிப்பு (MBBS மற்­றும் BDS) இருக்­கை­க­ளும் அடங்கு­கின்­றன. பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...