பீகார் வாரிசு அரசியல் கதை தெரியுமா?

பீகாரில் நிதிஷ்குமாரை முதலமைச்சர் ஆக்கிய பாஜக, இப்போது அவருடைய பதவியை பறித்துக் கொண்டு அவரது மகன் நித்திஷை துணை முதல்வர் ஆக்க முடிவு செய்துள்ளது. 50 வயது உள்ள நித்திஷ் பொது வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாதவர்.சொந்த தந்தையின் கட்சியிலே கூட அவர் உறுப்பினராக இல்லை; கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அவர் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார். உடனே துணை முதலமைச்சர் பதவி `லாட்டரி’ கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்து வருகிறார் எடப்பாடி. இதற்குப் பிறகு வாரிசு அரசியலுக்கு எதிராக வாய் திறப்பாரா?
ஏற்கனவே எடப்பாடியாரின் கட்சியில் அடையாளமாக வைத்திருந்த பெரியார் படம்; மாநில உரிமைகள்; மென்மையான மதவாத எதிர்ப்பு என்று ஒவ்வொன்றாக பறித்து எடப்பாடி வாயை அடைத்து விட்டார் அமித் ஷா. இப்போது வாரிசு எதிர்ப்பு பேச்சுக்கும் கடிவாளம் வந்துவிட்டது. எடப்பாடி தக்க வைத்துக் கொண்டுள்ள ஒரே பேச்சுரிமை இதுதான். “எந்தக் கொம்பனாலும் எங்களை அசைக்க முடியாது” என்ற ஒற்றை டயலாக்கு தான்!
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...