என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகில் உள்ள கடுவனூர் கிராமத்தில் 2005-ஆம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவர மோதலில் களமாடி சிறை சென்று 21 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த தோழர்கள் அ.சக்தி, ஆ.தங்கராசு, ஆ.சங்கர், மா.சங்கர் குரு, ச.கு.செயபால், ஆ.முனுசாமி, அ.பாலு, க.சங்குபாலகன், மா.குமார் உள்ளிட்ட தோழர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை பாராட்டியும், “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், தி.மு.க ஆட்சியை உறுதி செய்வோம்! மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்! என்ற தலைப்பிலும் 07.03.2026 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர்களுக்கு கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு மா.குமார் தலைமை வகித்தார், மு.நாகராஜ் வரவேற்புரையாற்றினர். க.இராமர் (மாவட்டச் செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), செ.பிரபு (த.பெ.தி.க.கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்) ஆகியயோர் கலவரம் மற்றும் வழக்கு குறித்து விரிவாகப் பேசினார்கள். க.மதியழகன் (மாவட்டத் தலைவர்), ந.வெற்றிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூ.ஆ.இளையரசன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), ஆ.இராமலிங்கம் (மக்கள் அதிகாரம்) ஆகிய தோழர்கள் தமிழக வளர்ச்சி குறித்தும் தி.மு.கவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார்கள்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர்கள் விடுதலை குறித்து பாராட்டிப் பேசியதோடு தி.மு.க ஆட்சி சாதனைகளை விரிவாகப் விளக்கிப் பேசினார். வரக்கூடிய தேர்தலில் யார் வெற்றிபெறக் கூடாது என்பது தான் மிக முக்கியம். எனவே மதவாதக் கூட்டணியை விரட்டி அடித்து தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை ஆதரிப்போம் என்று கூறி நிறைவுரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் கடுவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ.ஏழுமலை (தி.மு.க), கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் ஏ.பிரகாசு, சி.சாமிதுரை, மு.சங்கர், இரா.கார்மேகம், தே.இராமச்சந்திரன், மு.குமரேசன், வீ.முருகன், வ.பிரபு, சு.வல்லரசு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் போதிசத்வா ஆகிய கழகத் தோழர்களும் தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க கட்சியினரும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கு.பாபா நன்றியுரை நிகழ்த்தினார்.
பெரியார் முழக்கம் இதழ் 12032026
