கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்  கொளத்தூர் பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்.. திமுக ஆட்சியை உறுதிசெய்வோம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முனைப்புடன் நடத்தி வருகிறது. கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் மக்களை சந்தித்து பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொகுப்பு:

3வது நாள் மார்ச்-02 இளம்பிள்ளை: கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் 02.03.2026 நாள் முழுவதும் தாரமங்கலம் பேருந்து நிலையம், சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தம், கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் கூட்டம் நடைபெற்றது. தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), குடந்தை பாலன், ரமேஷ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர்.

சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார். திமுக தலைமைக் கழக பேச்சாளர் சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர் கோனூர் வைரமணி, மேட்டூர் குமரேசன், மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), உமாசங்கர் (வனவாசி நகரச் செயலாளர்), பெரிய சோரகை ஆனந்த், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் பரப்புரை கூட்டத்தின் நோக்கங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். மேட்டூர் முத்துராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

பதிவாளர் இளங்கோவன், நாகராஜ், கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்கள்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்), கொங்கனாபுரம் கோகுல், சேலம் பாலாஜி, பொட்டனேரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

4வது நாள் மார்ச் 03: இளம்பிள்ளை பேருந்து நிலையம், மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் பேருந்து நிறுத்தம், சித்தர் கோவில் பேருந்து நிறுத்தம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), ரமேஷ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர்.

கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), குட்டி (இளம்பிள்ளை), தனபதி (இளம்பிள்ளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார்.
திவ்யா (சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்) மேட்டூர் குமரேசன், மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), உமாசங்கர் (வனவாசி நகரச் செயலாளர்), பெரிய சோரகை ஆனந்த், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் பரப்புரை கூட்டத்தின் நோக்கங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.

இளம்பிள்ளை சேகர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. A.சண்முகம் மகுடஞ்சாவடி (சொசைட்டி செக்கரட்டரி) தோழர்களுக்கு தேநீர் வழங்கினார்.
தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு இளம்பிள்ளை தமிழ்மணி வழங்கினார். திமுக இடங்கணசாலை நகரச் செயலாளர் செல்வம் தோழர்களுக்கு பழச்சாறு வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகள் வழங்கப்பட்டது இளம்பிள்ளை தமிழ்மணி, ரவி, நாகராஜ், கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்கள்), கொங்கனாபுரம் கோகுல், மேட்டூர் முத்துராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5வது நாள் மார்ச்-04, சேலம் மாநகரம் : கருங்கல்பட்டி காய் மார்க்கெட், வாரி ஹோட்டல், மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டை மைதானம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றிமுருகன் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார்.

ஏற்காடு பெருமாள் (சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), வின்சென்ட் (புஇமு), யுவராஜ் (திமுக இளம் பேச்சாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்) பெரிய சோரகை ஆனந்த் ஆகியோர் திமுக அரசின் சாதனைகள் குறித்தும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகங்கள் குறித்தும், பிரித்தாலும் சூழ்ச்சிகள் குறித்தும், மதப் பிரிவினை குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். மேட்டூர் முத்துராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. திமுக தோழர்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

6வது நாள் மார்ச்-05: நெத்திமேடு, அன்னதானப்பட்டி, அருணாசலம் மெயின் ரோடு, தாதகாப்பட்டி கேட் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), பிரபு (சேலம் மாநகர பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றிமுருகன் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார்.

திமுக 49 வது கோட்ட பொறுப்பாளர் சசிகுமார், திமுக 49 வது கோட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.குமாரவேலு, திமுக 54வது கோட்டச் செயலாளர் ஞானசேகர், 54 வது கோட்ட அவைத்தலைவர் சுடலைமுத்து, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ஏற்காடு பெருமாள் (சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மேட்டூர் முத்துராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

மார்ச்-14: சனி மாலை 7.00 மணியளவில் கொளத்தூர் ஒன்றியக் கழகம் சார்பில் பரப்புரைக் கூட்டம் காவலாண்டியூரில் நடைபெற்றது. கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையேற்றார். காவை கிளைக்கழகச் செயலாளர் தங்கராசு, சேகர், கொளத்தூர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்ரவர்த்தி பரப்புரை கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈசுவரன், மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலு, மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுகுமார், தீனரட்சகன், கழக தலைமைக்கழக பேச்சாளர் காவை இளவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாரி நன்றி கூறினார்.

பரப்புரைக் கூட்டத்தில் தோழர்கள் SMT பிரபு, சுகந்தன், கண்ணையன், பொன்னுசாமி, சசிகுமார், பச்சியப்பன், சிந்துசாமி, கலைச்செல்வி, பழனிசாமி, அபிமன்யு, நங்கவள்ளி ராஜேந்திரன், குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. மாணவரணி பொறுப்பாளர் விக்னேஷ் உணவு வழங்கினார்.

பரிசாக கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர். மேட்டூர் முத்துராஜ், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்கள் நாகராஜ், கவியரசு மற்றும் சிந்தாமணியூர் முருகேசன், மகிழினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 19032026

You may also like...