தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்! அண்ணனுக்கும் ஆலோசகருக்கும் இடையே நடக்கும் ஓர் கற்பனை உரையாடல்:

அண்ணன்: ஏம்பா ஆட்சியில பங்கு தருவோம் என்று நீங்கதான் பேச சொன்னீங்க, இப்ப ஒரு கட்சியும் திரும்பிப் பார்க்கல்ல. இந்த லட்சணத்துல எனக்குதான் மக்கள் ஆதரவுன்னு பேச சொல்றீங்க மக்கள் நம்புவார்களா?

ஆலோசகர்: கவலைப்படாதீங்க அண்ணே! ; மக்களை நம்ப வைக்கிறதுக்கு நம்ம கிட்ட ஒரு அய்டியா இருக்கு.

அண்ணன்: என்ன அய்டியா?

ஆலோசகர்: அப்படி கேளுங்க.”எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி”அப்படின்னு அடிச்சு பேசுங்க எட்டு கட்டையில ஓங்கி பேசணும்.

அண்ணன்: இப்படி பேசினா மக்கள் நம்புவாங்களா? இப்படி பேசினதுக்கு அப்புறம் தான் எடப்பாடியை எதிர்க்க வச்சிட்டீங்க; “அதோ பார் விஜய் கொடி பறக்குது” அப்படின்னு புல்லரிக்க பேசினவர், இப்போ நடிகர்களை நம்பாதீங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டாரு. இதுதான் மிச்சம்!

ஆலோசகர்: அத விடுங்க அண்ணே… அவர் எதிர்த்தால் என்ன? பாஜக நம்மை எதிர்க்கக் கூடாது; அதுதான் முக்கியம். ஸ்டாலின் மாதிரி பாஜகவுக்கும் நமக்கும் தான் போட்டி என்று பேசக்கூடாது. அதுதான் நமக்கு ஆபத்து!

அண்ணன்: சரி; நான் அப்படியே ஒத்துக்குறேன். இப்ப தேர்தல் ஆணையத்திடம் தான் அதிகாரம் இருக்கு. அந்த ஆணையம் சட்ட விதிகளைக் காட்டி நமக்கு நெருக்கடி கொடுக்குது. இந்த ஆணையத்தை கண்டித்தால் பாஜகவுக்கு கோபம் வந்துடும். அதுக்காக திமுக தான் பழிவாங்குதுன்னு பேச சொல்றீங்க. மக்கள் நம்புவாங்களா?

ஆலோசகர்: மக்கள் நம்பறதா இப்ப முக்கியம்? நமக்கு ஓட்டு போடுற ரசிகர்கள் நம்பினால் போதும். நிச்சயமா நம்புவாங்க அண்ணே! இப்ப சங்கீதா விவாகரத்து கேட்டதுக்கு அப்புறமும், பெண்கள் பாதுகாப்பு பற்றி நீங்க பேசுறீங்க இல்ல அதை நல்லா நம்புறாங்களே! இதுக்கு என்ன சொல்றீங்க ?

அண்ணன்: சரிதான் ; நீங்க சொல்றத நான் அப்படியே நம்புறேன். இப்ப இரண்டு தொகுதியில போட்டியிட வச்சுட்டீங்க; ஒரு தொகுதி பிரச்சாரத்திலேயே மூச்சு வாங்குது; பாதியிலேயே நிறுத்தியாச்சு. இதுல ரெண்டு தொகுதிக்கு எப்படி பிரச்சாரம் செய்யறது? இதுதான் சந்தர்ப்பம்! இனிமே என்ன நேரா பார்க்க முடியாதுன்னு மக்கள் வேடிக்கை பார்க்க கூடுறாங்க. அப்படியே தப்பித் தவறி எம்.எல்.ஏ ஆயிட்டேன்னா, உங்களை எப்படி நேரில் சந்திப்பதுன்னு மக்கள் கேக்குறாங்க. அதுக்கு என்ன பதில் சொல்றது?

ஆலோசகர்: இருக்கவே இருக்கு நமது பனையூர் பங்களா. அங்க மக்கள வர சொல்லிடுவோம்!

அண்ணன்: இந்த யோசனை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! பனையூர் பங்களாவையே மக்கள் தொடர்பு மய்யமாக மாத்திடலாம். ஆனா இன்னொரு கேள்வியை கேப்பாங்களே. அந்த பங்களாவுக்குள்ளேயே குடும்பத் தொடர்பே இல்லாத நீங்க எப்படி மக்கள் தொடர்பை உருவாக்கப் போறீங்க? அப்படின்னு கேட்டா என்ன சொல்றது? இதுதான் நெஞ்ச பதற வைக்குது!

ஆலோசகர்: இதெல்லாம் ஒரு பிரச்சனையா? விடுங்க அண்ணே..
முதல்ல ஆட்சியை பிடிக்கணும் அதுதான் முக்கியம்.

அண்ணன்: நம்ம கட்சியில போட்டியிடுவதற்கே உங்களால் ஆட்களை பிடிக்க முடியல; படாத பாடுபட்டோம் ஆட்சியைப் பிடிப்பத பத்தி பேச கிளம்பிட்டீங்க. மத்த கட்சியில இடம் கிடைக்காதவங்க தான் வேற வழி இல்லாம கடைசி நேரத்துல நம்ம கிட்ட வந்தாங்க. சுமார் 100 பேர அப்படியே அமுக்கி புடிச்சு வேட்பாளரா அறிவிச்சிட்டோம்; இதுல எப்பட ஆட்சியை பிடிப்போம்னு நம்ப சொல்றீங்க?

ஆலோசகர்: இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஒரே ஒரு டயலாக் இருக்கு. அத சொல்லுங்க போதும்; “எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை நம்பித்தான் வந்து இருக்கேன்னு” ஒரு வார்த்தை சொல்லுங்க. அப்படியே மக்கள் வாக்குகளை குவிச்சுடுவாங்க

அண்ணன்: 624 கோடி ரூபாய் சொத்து இருக்குன்னு தேர்தல் ஆணையத்திடம் தெரிவிச்சி இருக்கேன். கடைசி 5 வருடத்தில் கிடைச்ச வருமானம் மட்டும் 234 கோடிரூபாய். இது வருமான வரித்துறையிடம் காட்டிய கணக்கு. தேர்தல் ஆணையத்திடம் மறைக்க முடியாது. உண்மையிலேயே உழைச்சி சம்பாதிச்சா இவ்வளவு கோடி கிடைக்குமான்னுமக்கள் கேட்பாங்கல்ல? நம்ம கட்சி மட்டும் ஊழலை ஒழிக்கப் போற தனித்துவமான கட்சியின்னு எப்படி சொல்றது?

ஆலோசகர்: விடுங்க அண்ணே.. கவலைப்படாமல் போய் தூங்குங்க “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்”
கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...