Category: பெரியார் முழக்கம்

கழகம் புகார் எதிரொலி  ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

கழகம் புகார் எதிரொலி ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

தீரன் சின்னமலை அவர்கள் நினைவுநாள் என்ற பெயரில் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் ஆணவப் படுகொலையை ஆதரித்தும், ஜாதிக் கலவரத்தை தூண்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தடுத்திடவும் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை அய்.ஜி அவர்களிடம் கோவை மாவட்டக் கழகம் சார்பில் ஆகஸ்ட்-1 அன்று மதியம் 12 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்ததன் எதிரொலியாக காவல்துறையால் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 220 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 13082026

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

தென் மண்டல எல்.அய்.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு முன்னெடுத்த சமூக நீதி போராளி இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம் அண்ணாநகர் டவர் கிளப் இக்லு அரங்கில் ஆகஸ்ட்-1 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன், பெரியார் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ச.அய்யனார் (பொதுச்செயலாளர், தெ.ம.எல்.அய்.சி.பி. ஊழியர் கூட்டமைப்பு) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. வி. சகாயராணி ( தலைவர், எல்.அய்.சி.பி ஊழியர் நலச்சங்கம் செ.கோ-1) வரவேற்புரை ஆற்றினார். ச.சுரேஷ்குமார் ( செயலாளர்(சமூக உறவு) தெ.ம.எல்.அய்.சி.எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கம்), இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட நிகழ்வுகளை விவரித்தார். தமிழ் சாக்ரடீஸ் (திராவிட இயக்க பேச்சாளர்), இரட்டை மலை சீனிவாசன் குறித்த பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் ஜாதியை எதிர்த்து களமாடிய நிகழ்வுகள் குறித்து கருத்துரையாற்றினார். க.கார்குழலி (தலைவர், தெ.ம.எல்.அய்.சி ஊழியர் கூட்டமைப்பு) பெண்கள் இது போன்ற முற்போக்கு செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும்,...

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

திருநெல்வேலி பணகுடி பகுதியில் கழகப் பரப்பரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உற்சாகம் பெற்று மேடைக்கு வந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். தோழர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பணகுடி பகுதியில் பரப்புரையைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ராஜலட்சுமி பயணக் குழு தோழர்களை பாராட்டி குளிர்பானம் வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர். அதிராம்பட்டினம் பள்ளிகொண்டான் பகுதியைச் சார்ந்த தோழர்கள் ராஜேஷ், வினோத், மகேஷ் ஆகியோர் கழகப் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆடை போர்த்தி கழக வெளியீடுகளை வழங்கினார். கோவை ’தோழர்’ அறக்கட்டளை சாந்தகுமார் பேராவூரணி அணி தோழர்களுக்கு முதலுதவி மருந்து பொருட்களை வழங்கினார். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துக்களை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர். திருச்சி பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் இரண்டு நாட்களும் தனது இல்லத்தில் பயணக்குழு...

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

‘ஜாதியில் திருமணம்! மதத்தில் பார்ப்பனியம்! வாழ்வில் மூடநம்பிக்கை! என்ற மூன்று கருத்துகளை முன்னிறுத்தி `தடை, அதை உடை!’ என்ற முழக்கத்தோடு கழகத் தோழர்களின் பரப்புரைப் பயணம் திருச்சி, நாகர்கோவில், போராவூரணி என்ற மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டது. போராவூரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நாகர்கோயிலில் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனும், திருச்சியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தை துவக்கி வைத்தனர். போராவூரணியிலும், திருச்சியிலும் பொதுக்கூட்டமாக நடந்தது. கழகப் பொருளாளர் திருப்பூர். துரைசாமி தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராவூரணி பயணக் குழுவினரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றனர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் இருவரும் பயணக்குழுவினரின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 பரப்புரைக் கூட்டங்களை நடத்துகின்றனர். நூல்விற்பனை, மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுதல், துண்டறிக்கை வழங்கல் என்று தோழர்கள் பணியாற்றுகிறார்கள். நாகர்கோவில் அணி: சேலம் அணியின் பயணக் குழு 05.08.2026 புதன்...

வைகறைவாணன் விடைபெற்றார்!

வைகறைவாணன் விடைபெற்றார்!

தோழர் வைகறை வாணன் (77) முடிவெய்தினார். பெரியாரிய பொதுவுடமை சிந்தனை கொண்டவர். ஈழ விடுதலைப் பிரச்சனையில் முனைப்புடன் செயல்பட்டவர். குத்தூசி குருசாமி எழுத்துக்களையும், தர்ம தீர்த்த அடிகளார் மலையாளத்தில் எழுதிய நூலை தமிழாக்கம் செய்து “இந்து மத கொடுங்கோன்மை வரலாறு” என்ற நூலையும் தனது சாளரம் பதிப்பகம் வழியாக வெளியிட்டவர். அவர் நடத்திய `பாலம்’ இதழ் வழியாக ஈழத்துக் கவிஞர்கள், கவிதைகள், நாவல்களை வெளியிட்டு பதிப்பித்தவர். விடுதலைப் புலிகளின் கவிஞரான புதுவை ரத்தினதுரை கவிதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் முனைப்புடன் இருந்தார். இந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு விடை பெற்றுக் கொண்டு விட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் இதழ் 06082026

பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

ஜாதி மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிரான பாடல் வெளியீட்டு விழா, ஜூலை-31, மாலை 6 மணிக்கு சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், திரைப்படங்களின் மூலம் பரப்பப்படும் புராணக்கதைகளை கண்டித்து உரையாற்றினார். “வெங்காயம்” திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பாடல்வரிகளை வெகுவாகப் பாராட்டினார். இதுபோல் இன்னும் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கழகப் பரப்புரைப் பயணத்தில் தோழர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் பொறுப்புகளையும் விளக்கினார். பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் சத்யா, லதா, குரல் கொடுத்த இரா. உமாபதி, இரண்யா ஆகியோருக்கும், வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அருண் கோமதி, குகன் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. U2BRUTUS மைனர் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று பாடல்களை வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 06082026

கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

சேலம் மாவட்டம், கொளத்தூர் , இலக்கம்பட்டி கழகத் தோழர் குமார் (52) 01.08.2026 அன்று மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார். தோழரின் இறுதி நிகழ்வு 02.08.2026 காலை 10.00 மணிக்கு இலக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழரின் உடலுக்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து கழகக் கொடி மற்றும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பெண் தோழர்களே குமார் அவர்களின் உடலைச் சுமந்து இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறுதி நிகழ்வை சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி நடத்த தோழரின் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு வழங்கினர். கழகத் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் குமார். நிகழ்வில் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், சேலம் மாநகரம், நங்கவள்ளி, வனவாசி, இளம்பிள்ளை, ஏற்காடு, திருப்பூர், குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள்...

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகத்தின் சார்பில் “ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடை! அதை உடை!” என்ற முழக்கத்துடன் பரப்புரைப் பயணம் நடைபெற உள்ளது. இப்பயணத்தின் நிறைவு மாநாடு வருகிற ஆகஸ்ட்-12 அன்று காரைக்குடியில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாடுகளைச் செய்யவும், களப்பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் ஆகியோர் தீவிரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்குடிக்கு வருகை தந்த அவர்கள், மாநாட்டுப் பணிகள் குறித்தும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கழகத் தோழர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும், பல்வேறு தோழர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழ்களையும் வழங்கினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் (காரைக்குடி) அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நாகர்கோயில் மாநகராட்சியின் மேனாள் மேயர், திமுக மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயணக்குழுவிற்கு தேவையான...

வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள் – (2)

வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள் – (2)

ஜோதிடம் அறிவியலா? ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு -ஜோதிடருக்கு -‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது என்கிறார்கள். ஜோதிடத்தின் இந்த அஸ்திவாரமே அறிவியலுக்கு விரோதமானது. சூரியன் ஒரு கிரகமே (Planet) அல்ல. அது ஒரு நட்சத்திரம் (Star). நட்சத்திரம் என்றால் அது பிரதானமாக ஹைட்ரஜன் வாயுவால் ஆனது. ஒளியையும் வெப்பத்தையும் உருவாக்கவல்லது. ஒரு மாபெரும் அணு உலை என்று சூரியனைக் கூறலாம். இதனைச் சுற்றி செல்லும் கிரகங்கள் அப்படி அல்ல. இவற்றிற்கு சொந்தமாக ஒளியை உருவாக்கும் ஆற்றல்...

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6102 சமஸ்கிருத ஆசிரியர்கள்

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6102 சமஸ்கிருத ஆசிரியர்கள்

24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,102 பார்ப்பன பண்டிதர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுள்ளனர். ஏழு கோடி பேர் பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுள்ளனர். மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது. இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளியின் புள்ளிவிவரம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்புயுள்ளார். பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் நாடு முழுக்க எத்தனை உள்ளன? அவற்றில் எத்தனை இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்? என்று கேட்டிருந்தார். எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, இந்தியா முழுமையும் 14,500 பள்ளிகளைப் பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 13,092 பள்ளிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தி அல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டதற்கு, சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது...

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுகிறது!

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுகிறது!

திராவிடர் கழகம் நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரை ஏன் தவெக ஆட்சியைப் பதற வைக்கிறது? நீட்டைத் திணிக்காதே என்று ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக பரப்புரைச் செய்வதை தனது ஆட்சிக்கு எதிரான பரப்புரையாக ஏன் இந்த ஆட்சி கருதுகிறது? ஒன்றிய ஆட்சியுடன் அனுசரித்துப் போவது என்பது அவர்கள் திணிக்கும் கொள்கைகளோடு அனுசரித்தல் தானா? கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுவது கண்டனத்துக்குரியது! பெரியார் முழக்கம் இதழ் 06082026

அதிகார ஆணவத்தின் உச்சம்!

அதிகார ஆணவத்தின் உச்சம்!

கைது அடக்குமுறை அரசியலின் காலம் மலையேறிவிட்டது என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அவதூறு என்றால் அதற்காக வழக்கு ப்பதிவு செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் வழக்குப் பதிவு செய்தவர்களை எல்லாம் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன வந்திருக்கிறது? நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் தனது கடமையை ஆற்ற விடாமல் தடுப்பது சட்டமன்ற ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைப்பது ஆகும்! உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இதை எடுத்துள்ள நிலையில் பகல் 12 மணி வரை கைது செய்ய தடை விதித்த நிலையில் நீதிமன்ற ஆணையையும் மீறி கைது செய்வது அப்பட்டமான பழிவாங்கும் அரசியல் அல்லாமல் வேறு என்ன? நேற்று தஞ்சை ஆர்ப்பாட்டம் முடித்து வந்தவரை மீண்டும் காலையில் கைது செய்து தஞ்சை வரை வேனில் ஏற்றிச் சென்று பழிவாங்க வேண்டும் என்ற அற்ப அரசியலைத் தவிர...

சுயமரியாதைச் சுடரொளி வை.சு.சண்முகம்  பெயரில் காரைக்குடி மாநாட்டு மேடை!

சுயமரியாதைச் சுடரொளி வை.சு.சண்முகம் பெயரில் காரைக்குடி மாநாட்டு மேடை!

காரைக்குடியில் ஆக-12,ல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயண நிறைவு விழா மாநாட்டின் மேடைக்கு சுயமரியாதைச் சுடரொளி வை.சு. சண்முகம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரைக்குடி பகுதியில் செல்வவளம் மிக்க நகரத்து செட்டியார் சமூகத்தினர் வாழ்ந்த பகுதியில் சுயமரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்த பெரியாரின் உற்ற தோழராக விளங்கியவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். ஜாதிக்குள் திருமணத்தையும் இந்துமத பார்ப்பனியத்தையும் எதிர்த்து நின்ற அந்த சுயமரியாதைச் சுடரொளி பெயரை மிகப் பொருத்தமாக மாநாட்டு அரங்கிற்கு சூட்டியுள்ளோம். முகவை மாவட்டம் கானாடுகாத்தானில், 1883ஆம் ஆண்டில் பிறந்த வை.சு. சண்முகம் அவர்கள். காங்கிரசில் இருந்தபோதே சேரன்மாதேவியில் நடந்த குருகுலப் போராட்டத்தில் பெரியாருக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கியவர். “பார்ப்பனரல்லாதார்” உணர்வு நிரம்பியவராகையால், வகுப்புரிமைக்கு பெரியார் சுயமரியாதை இயக்கம் அமைக்கையில் இவரும் உடன் தோழராய்த் தோள்கொடுக்க முன்வந்தார். இவரது நேர்மையும், ஆர்வமும், தகுதியும் உணர்ந்த சுயமரியாதைத் தலைவர்கள் செங்கற்பட்டு மாநாட்டிலேயே இயக்கத்தின் பொருளாளராகத் தேர்வு செய்தார்கள். நாட்டின் பல பகுதிகட்கும் சென்று...

இது மாற்றம் அல்ல; கண்டிக்கத்தக்க ஏமாற்றம்!

இது மாற்றம் அல்ல; கண்டிக்கத்தக்க ஏமாற்றம்!

வேளாண் துறை அமைச்சர் வினோத் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை திருப்பதி ஏழுமலையான் முன் சமர்ப்பித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட இப்படி ஒரு கேவலம் நடந்ததாக தகவல் இல்லை! சட்டமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு பேரவைத் தலைவர் தான் அனுமதிக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கிறார். ஏழுமலையான் பட்ஜெட் முழுவதையும் படித்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசுவார் என்று அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? பட்ஜெட் என்ற அரசு ஆவணத்திற்கு மதம் கிடையாது; அது மக்களுக்கான ஆவணம்.அனைத்து மதப் பிரிவு மக்களுக்கும் மத நம்பிக்கை அற்றவர்களுக்கும் தயாரிக்கப்படுகின்ற ஒரு அரசு ஆவணத்தை இந்து மத கடவுளுக்கு முன் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தையும் அனுமதியையும் கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட அயோத்தி ராமன் கோயில் முன் பட்ஜெட்டை சமர்ப்பிக்கவில்லை. துறையின் அமைச்சர் ஒரு இஸ்லாமியராக இருந்து அவர் பட்ஜெட்டை மசூதி முன்வைத்து...

வந்தே மாதரம் சட்டமாகியது  இந்தியா – `இந்து’ இந்தியாவாகியது!

வந்தே மாதரம் சட்டமாகியது இந்தியா – `இந்து’ இந்தியாவாகியது!

`வந்தே மாதரம்’ பாடலுக்கு மிகுந்த சூழ்ச்சியுடன் ஒன்றிய பாஜக ஆட்சி சட்டபூர்வ ஏற்பை வழங்கிவிட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருந்ததை ஒரு வாய்ப்பாக ஒன்றிய ஆட்சி பயன்படுத்திக் கொண்டது. மாநிலங்களவையில் எந்த விவாதங்களும் இல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத அவையில் (வெளிநடப்பு செய்திருந்தனர்) குரல் ஓட்டு வழியாக மசோதா நிறைவேறிவிட்டது. அதேபோல் மக்களவையிலும் வேறு பிரச்சனைகளை முன்வைத்து நடந்த அமளி துமளிகளை பயன்படுத்தி கடந்த ஜூன்-29, அன்று மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. அமளிகளுக்கு இடையே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்த எதிர்ப்பும், ஆ. ராசா தந்த திருத்தங்களும் புறந்தள்ளப்பட்டன. `வந்தே மாத’ரத்தின் முழுமையான பாடலுக்கும் இப்போது சட்டத்தால் ஏற்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபையில் செய்த முடிவின்படி முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது ஆ.ராசா கொடுத்த திருத்தம். உள்துறை இணை அமைச்சர்...

நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் நங்கவள்ளியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நேரத்துக்குப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லவும், பள்ளி முடிந்த பின் பாதுகாப்பாக வீடு திரும்பவும் ஏதுவாக பேருந்து நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் 20.07.2026 அன்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் மனு அளித்தனர். அமைச்சர், கழகத் தோழர்களின் கோரிக்கையை பரிசீலித்து இரண்டு நாளுக்குள் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படும் என உறுதியளித்தார். பெரியார் முழக்கம் இதழ் 30072026

பால்.பிரபாகரன் கண்டனம்! நீட் எதிர்ப்பை நீர்த்துப் போகச்செய்கிறார் முதல்வர் விஜய்!

பால்.பிரபாகரன் கண்டனம்! நீட் எதிர்ப்பை நீர்த்துப் போகச்செய்கிறார் முதல்வர் விஜய்!

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: நீட் போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மாணவர்களை வாட்டி வதைக்கிறது ஜோசப் விஜய் அரசு. நீட் தேர்வை எதிர்க்கிறோம் என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போராடிய மாணவர்களைத் தாக்கியது மட்டுமல்ல; போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் பணியைத் தனது அமைச்சர்களைக் கொண்டு செய்கிறார். மாணவர் போராட்டத்தைத் திசை திருப்பி ஜூலை 23-ம் தேதி வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடுங்கள் என ஒரு அமைச்சர் அறிக்கை கொடுக்கிறார். ஜூலை-22ம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் முன்பு தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் பாலாபிசேகம் செய்வதும் 150 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500-க்கு வாங்கி செல்வதுமான அவலநிலையைக் காண முடிந்தது. முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு என்றும் அது உரிமைகளுக்கு முதலாவதாக போராடும் என்ற வரலாற்றை மாற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்களைத் தற்குறிகளாக மாற்றும் வேலையை ஜோசப் விஜய் அரசு செய்கிறது. வடமாநிலங்களைப் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்...

காரைக்குடி அழைக்கிறது! தோழர்களே தயாராவீர்!

காரைக்குடி அழைக்கிறது! தோழர்களே தயாராவீர்!

கழகத்தின் பரப்புரைக்கு தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வரும் செய்திகள் வருகின்றன. ஆணவப் படுகொலைகள் மனித மாண்புகளையும் கொலை செய்கின்றன. ஜாதியை மறுத்து வாழத் துடிக்கும் இளம் பிஞ்சுகளின் உயிரைத் துடிக்கத் துடிக்கப் பறிக்கின்றன. ஜாதிவெறியின் இரத்தப் பசி அடங்கவில்லை. சமூக ஒருங்கிணைப்பை மானுட ஒற்றுமையை ஜாதி என்னும் நச்சு சீர்குலைக்கிறது. கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் இது தெரியாதா? தெரியும்! ஆனாலும் வாக்கு வங்கி அரசியல் நியாயங்களைப் பேச மறுக்கிறது. இந்த நிலையில் தான் பெரியார் தந்த ஜாதி எதிர்ப்பு என்ற கொள்கைச் சுடரை ஏந்தி இலட்சியப் பெருமிதத்தோடு கழகத் தோழர்கள் பயணம் புறப்படுகிறார்கள். ஆகஸ்ட் 12-ல் காரைக்குடியில் நிறைவுவிழா மாநாட்டில் ஒவ்வொரு கழகத் தோழர்களும் கழக ஆதரவாளர்களும் திரளவேண்டும்!. குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். காரைக்குடி கருஞ்சட்டை கடலில் மிதக்க வேண்டும்! கழகத்தின் வலிமையை உணர்த்த வேண்டும்!. பெரியார் முழக்கம் இதழ் 30072026

வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள்

வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள்

பேய், பில்லி, சூனியம், சோதிடம், தீ மிதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் விளக்கம். பேய், பிசாசு, ஆவிகள் உண்மையில் இருக்கின்றனவா? இவற்றை ஏவி விடவும் தடுக்கவும் பில்லி, சூனியம், செய்வினை மூலம் முடியுமா? இந்து, முஸ்லிம், கிறித்துவம் உள்ளிட்ட எல்லா மதத்தாரும் பேய், பிசாசு, ஆவிகளை நம்புகிறார்கள். இந்து மதத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விசேடமான பேய் பிசாசு இருப்பதும், பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்வதும் பொதுவான அம்சமாகும். கிறித்துவ மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இஸ்லாம் மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் உண்டு. இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கிறித்துவ மத போதகர்களால் ‘சரீர சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்ச்சிகளைக் காணலாம். கத்தோலிக்க மதத் தலைவர் ‘போப்பும்’ பேய் விரட்டலுக்கான சில நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். ஏர்வாடி ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்குப் பிரபலமான இடமாகக் கருதப்படுகிறது. இந்த ‘பேய் விரட்டல்’...

பெரியார் முழக்கத்தின் சிறப்பான பதிவுகள்

பெரியார் முழக்கத்தின் சிறப்பான பதிவுகள்

பெரியார் முழக்கம் சிறப்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “ஆண்மையும் வேண்டாம்; பெண்மையும் வேண்டாம்” என்ற தலைப்பில் தொகுத்துத் தந்த பெரியார் சிந்தனைகள்; “கட்சி மாறினால் பதவி; ஜாதி மாறினால் மரணமா? என்ற முகநூல் பதிவு; “சேலம் பல்கலைக்கழக துணைவேந்தராக பட்டியல் சமூகத்தினரை நியமக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை; உயிரற்ற பொருளிலிருந்து உயிரை உண்டாக்கி கடவுள் சக்தியை விடைபெற வைத்த செய்தி, `பாஜகவின் சூழ்ச்சிகர அரசியல்’ தலையங்கம்; நூறுசாமி திரைபடம் உருவாகக் காரணமாக இருந்த பெரியார் சிந்தனை என்ற செய்தி அனைத்தும் மிகச்சிறப்பு. மு.சாமிநாதன் (குமாரபாளையம்) நாமக்கல் மாவட்டத் தலைவர் பெரியார் முழக்கம் இதழ் 30072026

தமிழ்மொழிக்கு மூன்றாவது இடமா?

தமிழ்மொழிக்கு மூன்றாவது இடமா?

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பெயரை சூட்டியவர் கலைஞர். அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாட வைத்தவர் கலைஞர். அந்தப் பாடலுக்கு அரசாணை வழங்கியவர் திராவிட மாடல் ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய போது ஏற்க மறுத்தவர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆளுநர் தான் அவையை விட்டு வெளியேறினாரே தவிர தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை வெளியேற்ற முடியவில்லை. விஜய் ஆட்சிக்கு வந்ததும் பதவியேற்பு விழாவிலேயே ‘வந்தே மாதரம்’ முதன்மையிடம் பெற்றுவிட்டது. பேரவையில் ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி தொடக்கத்தில் அனுமதிக்காத தேசிய கீதம் பாடலும் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் ஆளுநர் ரவி விருப்பம் போல் நிறைவேற்றப்பட்டு விட்டது. உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தாத இந்த ஆட்சியின் மவுன மொழி தான் இப்போது...

உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி கங்கை ஆற்றில் அசைவம் குற்றமா?…

உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி கங்கை ஆற்றில் அசைவம் குற்றமா?…

“கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல. அப்படியிருக்கையில், அதற்காக மூன்று மாதங்கள் ஒருவரை சிறையில் அடைத்தது எப்படி?,” என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் சட்ட பல்கலை நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பினார். மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய சட்ட பல்கலையில், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த ஜி.பி.சிங்கின் நான்காம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், ம.பி., உயர் நீதிமன்ற நீதிபதி விஷால் தகத் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசியதாவது: ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்றவற்றை குற்றமாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பிணை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. கங்கை ஆற்றில் படகில் இப்தார் நிகழ்ச்சி நடத்திய இளைஞர்கள், மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்....

‘சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’

‘சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’

எந்தப் போராட்டத்துக்கும் பணியமாட்டோம் என்ற ஒன்றிய ஆட்சியின் ஆணவத்தைப் பணிய வைத்திருக்கிறது இளைஞர்களின் சக்தி. டெல்லி ஜந்தர் மந்தரில் 25 நாட்கள் நடந்த போராட்டத்தை அலட்சியம் செய்து புறக்கணித்தவர்கள் சோனம்வாங்சூக் பட்டினிப் போராட்டம் திவீரமடைந்த நிலையிலே தான் திரும்பிப் பார்த்தார்கள். விவசாய சட்டங்களை எதிர்த்து ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டு விவசாயிகள் போராடினார்கள்; அதற்குப் பிறகுதான் ஒன்றிய ஆட்சி பணிந்தது. இப்போது இளைஞர்கள் போராட்டத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளே பணிந்து வந்திருப்பது மகத்தான வெற்றிதான். ஒன்றிய ஆட்சியினுடைய ஆதிக்கத்தை இளைஞர்களின் சக்தி குலைத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் இது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் இந்த வெற்றி சமூக நீதிக்கு வலிமை சேர்த்திருக்கிறதா? என்றால் இல்லை. `சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’ என்றுதான் கூறவேண்டும். போராட்டக் குழுவினர் முதன்மையாக முன்வைத்த கோரிக்கை ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும்; நீட் தேர்வுகளை முறையாக நடத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இதற்கு மாறாக...

வாஸ்துவை நம்பி கவிழ்ந்த முதல்வர்கள்

வாஸ்துவை நம்பி கவிழ்ந்த முதல்வர்கள்

முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான சோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆலோசனையில் முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறதாம். மாநாடு கூட்ட அரங்கமாக இருந்த தளம் இப்போது அவசர அவசரமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக மாற்றியமைக்கும் பணியில் வாஸ்து பண்டிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால் உயரமான கட்டடத்திலும் முதலமைச்சரின் இருக்கை கிழக்கு முகமாகவும் இருக்க வேண்டும் என்பது ஜோதிடரின் ஆலோசனையாம். அது மட்டுமல்ல தற்போது முதலமைச்சர் பயன்படுத்தும் அறை வாஸ்துப்படி சரியில்லையாம்! மக்கள் மீதான நம்பிக்கை தான் சக்தி வாய்ந்ததே தவிர, வாஸ்து சோதிட நம்பிக்கைகள் அல்ல! என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். வாஸ்து அறிவியல் தானா? வாஸ்து ஒரு போலி அறிவியல். வாஸ்துப்படி கட்டப்பட்ட வீடுகளில் தான் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. நிலச்சரிவு என்றால் வாஸ்து கட்டிடம், வாஸ்து பார்க்காத கட்டிடம் எல்லாமே இடிந்து விழுகின்றன....

நீட் தேர்வை நீக்கு; கழகத் தோழர்கள் போராட்டம்

நீட் தேர்வை நீக்கு; கழகத் தோழர்கள் போராட்டம்

கோவையில்: ஜூலை-22 அன்று அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கட் கண்டன உரை ஆற்றினார். ஜூலை-26, அன்று மாலை 5 மணி அளவில் கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்துக் கட்சிகள் சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்களுடன் எழுச்சியோடு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது கோவை மாவட்டக் கழக தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் பங்கேற்றனர். சேலத்தில்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்திய இளைஞர்கள் அனைத்து இந்திய மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் ஜூலை 22, 2026 முதல் ஜூலை-24 வரை சேலம் மாவட்டம் தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்றது. இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட், தோழர்கள் சுதர்சன் மற்றும் ஆனந்தி கலந்து கொண்டனர். பொள்ளாச்சியில்: நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் செய்து வருகிற மாணவர்கள் மீது...

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை போற்றும் விதமாக 15-07-2026 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அனுப்பர்பாளையம், நகராட்சி அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் கர்மவீரர் காமராசர் அவர்கள் குறித்து கொள்கை முழக்கமிட தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட்டனர். நிகழ்வில் மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் மற்றும் கழகத் தோழர்கள் சிரிஜா, இனியன், குணா, பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகத்தின் சார்பில், ஜூலை-15 காலை 9 மணிக்கு, சென்னை சிம்சன் ஜிம்கானா கிளப் முன்புள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு தோழர்கள்...

பார்ப்பனப் பிடியில் இந்துமதம்  ஏழை இந்துக்களை ஒதுக்கும் `ஏழுமலையான்’

பார்ப்பனப் பிடியில் இந்துமதம் ஏழை இந்துக்களை ஒதுக்கும் `ஏழுமலையான்’

திருப்பதி ஏழுமலையானுக்கு ஜூலை-16, அன்று ஒரே நாளில் மட்டும் 97 கோடி ரூபாய் காணிக்கையாக வந்திருக்கிறது. இதற்கான காரணமும் இப்போது வெளிவந்து இருக்கிறது. ஏழுமலையானுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்குகிறவர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. இதில் 1.97 லட்சம் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் திருப்பதி ஏழுமலையான் கூடுதலாக தரிசனங்களை வழங்குவார். எவ்வளவு அதிகமான தொகை நன்கொடை வழங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தரிசனங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு தரிசனம்; கருவறைக்கு அருகில் உள்ள குறுக்கு வழி வழியாக அனுமதி; பிரேக் அப் தரிசனம்; விடியற்காலை தரிசனம்; சுப்ரபாத சேவை; கல்யாண உற்சவத்தில் அனுமதி. இவை தவிர லட்டு பட்டு வஸ்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுகள், தங்குமிட வசதிகள் எல்லாமும் கிடைக்கும். இந்தச் சலுகைகளில் புதிய மாற்றங்கள் ஜூலை-16, முதல் அமுலுக்கு வந்தன. இதன்படி நன்கொடையாளர்கள் மேலும் புதிதாக நன்கொடை அளித்தால் மட்டுமே பழைய சலுகைகள் அனுமதிக்கப்படும் என்று...

தயாராகிறது சேலம் மாவட்டம்!

தயாராகிறது சேலம் மாவட்டம்!

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை-17, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மேட்டூர் நகரத் தலைவர் மார்டின் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட்-6 முதல் 12 வரை நடைபெற இருக்கும் “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்” சிறப்பாக நடைபெற சேலம் மாவட்டக் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும், சேலம்-நாகர்கோவில் பயணக் குழுவின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேலம் அணியின் இசைக்குழு, கடைவீதி வசூல், புத்தக விற்பனை, ஊடக பிரிவு, பேச்சாளர்கள் பட்டியல் குறித்தும் பயணத்திற்கான நன்கொடை திரட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வனவாசி நகரச் செயலாளர்...

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு ஜூலை-17, வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருப்பூர், பலவஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த பி. என் சண்முகம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சர்வேஸ்வரன் (அ.தி. மு.க) அவர்கள் வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், பி.என் சண்முகம் அவர்களின் உறவினர் கா.சு. நாகராசன் பேசுகையில் என்னுடைய தந்தையார், தாயார் இறந்த பிறகு குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டும், என் தாயார் மறைந்த பிறகு அவரின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கியதைக் கண்டும், உயிரற்ற உடல் மருத்துவ மாணவர்களுக்கு இவ்வளவு பயன்படுகிறதா? என்பதை உணர்ந்து மறைந்த பி.என். சண்முகம் அவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பொது நல பார்வையிலும், தொலைநோக்குப் பார்வையிலும் சிந்தித்து உயிருடன் இருக்கும் போது உடற்கொடை வழங்கும் சான்றிதழை பூர்த்தி செய்து வழங்கினார். எங்கள் வீட்டில்...

பரப்புரைப் பயண களப்பணியில் ஏற்பாட்டு குழுவினர்

பரப்புரைப் பயண களப்பணியில் ஏற்பாட்டு குழுவினர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை இவற்றிற்கு எதிரான “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்’’ என்கின்ற தலைப்பில் வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மூன்று முனைகளிலிருந்து தொடங்கும் பரப்புரை நடைபெற உள்ளது. இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பகுதிகளுக்குச் சென்று கலந்தாய்வு செய்தனர். 08.07.2026 அன்று மதியம் நிறைவு மாநாடு நடைபெற உள்ள காரைக்குடிக்கு சென்று கழக மாவட்டப் பொறுப்பாளர் முத்துவை சந்தித்து மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பேரணி தொடங்கும் இடத்தையும் பார்வையிட்டு இறுதி செய்தனர். மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் தோழர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மாநாட்டிற்கான விளம்பரம் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். மாலை 05.00 மணியளவில் பேராவூரணி சென்று தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் அவர்களை சந்தித்து பேராவூரணியில் 06.08.2026...

கனவுகளில் வந்த ’ராமன்’  களவாடலை ஏன் தடுக்கவில்லை!

கனவுகளில் வந்த ’ராமன்’ களவாடலை ஏன் தடுக்கவில்லை!

இந்து இந்தியாவின் தேசியக் கடவுளாக பகவான் பாலராமனை முன்னிறுத்தியது ஒன்றிய பாஜக ஆட்சி. அந்தத் தேசியக் கடவுளுக்கே நாமம் போட்டு இருக்கிறார்கள் ராமரின் பக்தர்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கைப் பணம் களவாடப்பட்டு இருக்கிறது; வெள்ளி நகைகள் காணாமல் போயிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 70 முறை காணிக்கைப் பணத்தை களவாடியதை சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன. வேறு வழியின்றி உ.பி. ராமராஜ்யம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு இதுவரை வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சிக்கும் மாநில ஆட்சிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. பாபர் மசூதிக்குள் இந்து ராமன் கோயில் இருந்தது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கட்ட அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி தனது கனவில் ராமன் வந்து...

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி    கருத்தரங்கம்!

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கருத்தரங்கம்!

ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் சார்பில், கடந்த ஜூலை-12, (ஞாயிறன்று), சென்னை ராயப்பேட்டை இ.என். சேஷா மகாலில், “இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீதான ஜாதி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் விளைவுகள்’’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி தோழர் அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சூரஜ் மண்டல்; பிற்படுத்தப்பட்டோரை பாஜக ஏமாற்றுவது குறித்தும், பார்ப்பனர் ஒற்றுமை – ஓபிசி ஒற்றுமையின்மை குறித்தும் உரையாற்றினார். அடுத்ததாக உரையாற்றிய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி ஜாதிகளின் எண்ணிக்கையை 46 லட்சமாக உயர்த்திக்காட்டும் மோசடிகளைச் சுட்டிக்காட்டினார். நீதிபதிகள், அரசுத்துறைச் செயலாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் பெரும்பாலும் முன்னேறிய ஜாதிகளாகவே இருப்பதை வினவினார். நீதிமன்றங்களில் புள்ளிவிவரங்களை வழங்காமல், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மோடி தான்...

ஜாதித் தடைகளை தகர்த்த 14,500 உடல் உறுப்புகள்!

ஜாதித் தடைகளை தகர்த்த 14,500 உடல் உறுப்புகள்!

உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலையில் நிற்கிறது. கடந்த ஆறு மாதங்களில் மரணம் அடைந்த 169 பேர்களது உறுப்புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன. கொடையாக பெறப்பட்ட 937 உறுப்புகள் உயிரோடு போராடியவர்களுக்குப் பொருத்தப்பட்டு உயிர் வாழ்க்கை தரப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய செயலாளர் அறிவித்துள்ளார், இது ஆறு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ள கொடை. இது 2008-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,490 பேரிடமிருந்து 14,533 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உடலுக்கோ உடல் உறுப்புக்கோ ஜாதி அடையாளங்கள் இல்லை! உறுப்புகள் ஜாதி பார்ப்பதில்லை! எந்த ஒரு ஜாதி பற்றாளரும் பிற ஜாதியினரின் உறுப்பு தங்கள் குடும்ப உறுப்பினருக்கு தேவை இல்லை என்று மறுப்பதும் இல்லை. எப்போது கிடைக்கும் என்று துடிக்கிறார்கள். நோய்களும் ஜாதி பார்ப்பதில்லை; சிகிச்சைகளுக்கும் ஜாதி இல்லை; எல்லா ஜாதியினருக்கும் ஒரே சிகிச்சைதான்! ஜாதி கடந்து உறுப்புகள் பொருத்துவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். ஆனால் ஜாதி...

பரப்புரைக்கு தயாராவீர்

பரப்புரைக்கு தயாராவீர்

தமிழ்நாட்டில் சமூகத்திலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வந்தாலும் ஜாதி கட்டமைப்பு குலைந்துவிடவில்லை. பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தனக்கான பெருமைகளைப் பேசுகிறது. ஜாதிச் சங்கங்களை அமைக்கிறார்கள்; ஒவ்வொரு ஜாதிக்கும் திருமணத்திற்கு வரன் தேடித்தரும் அமைப்புகள் வந்துவிட்டன; தொலைக்காட்சிகளிலும் அவை விளம்பரம் செய்கின்றன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்திய போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே 50% விழுக்காட்டிற்கும் மேல் ஜாதி உணர்வு இருப்பதையும் சமூக வலைதளங்களில் அவர்கள் ஜாதிப் பெருமைகளை பதிவு செய்து வருவதையும் அந்த ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் பாஜக தனது `இந்துத்துவா’ அரசியலை வளர்ப்பதற்கு ஜாதிச் சங்கங்களை பெருமளவில் பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் சமுதாயத்தில் ஜாதிக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று கவலைப்படவே இல்லை. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடக்கம். அரசியலுக்குள்...

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மைலாப்பூர் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி சேதம் விளைவித்ததாகக் கூறி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து, ஜான்சன் மற்றும் முகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தோழர்கள் நீதிமன்றம் சென்று வந்தனர். இது ஈழத் தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அன்றாடம்...

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை. திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை? இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில்...

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன. அதில் தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்களை மட்டும் பெயர் பட்டியலில் இருந்தும் அவற்றை வரையாமல் தவிர்த்தனர்.கழகத் தோழர்கள் நங்கவள்ளி கிருஷ்ணன், சந்திரசேகரன், உமாசங்கர், மனோஜ் ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். நமது கோரிக்கையை ஏற்று தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்கள் வரையப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த வரையும் பணி 10.07.2026 அன்று முடிவடைந்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 16072026

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 07.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) சார்பில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் தன் உரையில் “இந்தியா முழுவதும் ஜாதி மீறி காதலிக்கும் ஒரே காரணத்திற்காக ஜாதி கௌரவம் என்னும் பெயரில் காதலர்கள் காதல் இணையர்கள் கொடூரமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஆணவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடந்து இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மனு சாஸ்திரத்தை இந்து மதத்தவர்கள் படிக்காமல் இருக்கலாம்; ஆனால் அவற்றின் இதிகாசபுராணக்...

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

சேலம்: 06.07.2026 திங்கள் மாலை 4.00 மணிக்கு கருப்பூரில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கடந்த 28.06.2026 அன்று திருப்பூரில் நடைபெற்ற தலைமைக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வது குறித்தும், பயணக் குழுவின் தொடக்க நிகழ்வாக 05.08.2026 அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையை சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தொடங்குவது எனவும், அதன்பிறகு பரப்புரைக் குழு நாகர்கோவில் சென்றடைந்து காரைக்குடி நிறைவு விழா மாநாட்டு திடலை 12.08.2026 அன்று வந்தடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்றசமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் நடத்துவது, தந்தை பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, பிரச்சார...

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

தாலி சென்டிமென்டை ஓவராகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டுவதால் சில பெண்களிடையே வேறுமாதிரியான பாதிப்பு உண்டாவதை நான் கவனித்திருக்கிறேன். தாலி என்பதைக் கணவனின் மறுபிம்பமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம், குங்குமம் வைக்கிறோம், கணவன் இறந்த பிறகு தாலி அணியக் கூடாது என்றும் சொல்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் ஓர் எதிர்மறை சிந்தனை சிலரிடம் உண்டாகிறது. ‘ஒரு மலர் ஒரு முறைதான் பூக்கும், கணவன் கட்டிய தாலி என்னுடைய உடம்பில் ரத்த நாளங்களாக இருக்கிறது’ என்றெல்லாம் வசனங்களை அமைத்துவிடுவதால் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன சில பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவே தயங்குவது எனக்குத் தெரியும். படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இதே தாலி சென்டிமென்ட் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுமணங்கள்...

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

வெவ்வேறு வர்ணத்தவருக்கு இடையே நடந்த கலப்பு உறவின் காரணமாகத் தான் ஜாதியே பிறந்தது. இது குறித்து ‘விபச்சாரத்தில் பிறந்த ஜாதி’ எனும் தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை. ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்பது என்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ குடிமுழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதன் உண்மையும், உற்பவமும் இன்னதென்று அறியாத மயக்கத்தினால் தோன்றப்படுவதே தவிர வேறில்லை. ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெறும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய்...

தாமரை நன்கொடை

தாமரை நன்கொடை

கழக செயல்பாட்டாளர் தோழர் கடலூர் தாமரை கழக வளர்ச்சிக்கு ரூ.8,000 நன்கொடையாக வழங்கினார். -( நன்றியுடன் பெற்றுக்கொண்டோம் ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ் 16072026

கழக வளர்ச்சி நிதி

கழக வளர்ச்சி நிதி

தஞ்சை மாவட்டக் கழகத் தோழர் சார்கோட்டை இளங்கோவன் அவர்களை 09.06.26 வியாழக்கிழமை அன்று பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது குடந்தை கழக ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் இணையர் வைக்கம் தங்களது புதிய இல்லம்”பெரியார் இல்லம்” திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சிக்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 16072026

சென்னையில் ராயப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் தொடர்ச்சியாக சுவரெழுத்துப் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ராயப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் தொடர்ச்சியாக சுவரெழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில் பேசுகிறார். குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து அவர் உருவாக்கி உள்ள சதி திரைக்கதை வஞ்சகமானது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார் என்ற ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு. தீ பற்றியதற்கு காரணம் மன்னர்தான் என்ற குற்றச்சாட்டு வந்த போது அதை மறைக்க கிறிஸ்தவர்கள் மீது பழி போட்டு அவர்களைக் கைது செய்து பழிவாங்கி தன் குற்றத்தை மறைக்கப் பார்த்தார் என்ற வரலாறு தான் இப்போது நினைவுக்கு வருகிறது. கரூர் கூட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தன்னை உள்ளே அனுப்பியதாக அவர் பேசுவதும் அந்தக் கூட்டத்திற்கு ஏன் தடை போடவில்லை என்று கேட்பதும் எதிர்மறையான நேர்மையற்ற பழிச்சொற்கள். இவர்களே கேட்டு அனுமதி வாங்கிய கூட்டத்திற்கு காவல்துறை தடை...

வி.பி.எஸ்.ஏ ஆபத்து

வி.பி.எஸ்.ஏ ஆபத்து

உயர் கல்வியை முழுமையாக மாநிலக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து தனது ஆளுகைக்குக் கீழே கொண்டு வரும் மசோதா ஒன்றை ஒன்றிய ஆட்சி 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதா கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு வந்துள்ளது. 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவின் தலைவர் பாஜகவைச் சேர்ந்த டி.குடந்தீஸ்வரி. உயர் கல்விக்கான பல்கலைகழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆகிய அமைப்புகள் கலைக்கப்படுகின்றன. வி.பி.எஸ்.ஏ (விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிஷ்டான்) என்ற ஒரே அமைப்பின் கீழ் இந்த அனைத்து அமைப்புகளையும் கொண்டு வருகிறது இந்த புதிய சட்டம். இதன் வழியாக உயர்கல்வியின் முழுமையான அதிகாரத்தை ஒன்றிய ஆட்சி எடுத்துக் கொள்கிறது. மாநிலங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகங்களை நடத்தும் உரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சட்டத்தை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே கடுமையாக எதிர்க்கின்றன....

தடை, அதை உடை!

தடை, அதை உடை!

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று” இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது. ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர். ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா? பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை;...

வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி – கந்தசாமி – இணையரின் சுயமரியாதைத் திருமணம், ஜூலை 5,2026 (ஞாயிறு), பூவிருந்தவல்லி இதயம் மகாலில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலை வகித்தார்.தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணப்பெண் அக்காவும் கழகத் தோழர்களுமான இணையர்கள் புகழேந்தி- ஸ்ரீலேகா இந்தத் திருமணத்தை எந்தவித சடங்குகளும் இன்றி சுயமரியாதைத் திருமணமாக நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடத்திக் காட்டியுள்ளனர். ஸ்ரீலேகா நன்றியுரையாற்றினார். மணமக்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ. 3,000, பரப்புரைப் பயணத்துக்கு ரூ. 4,000, புத்தகங்களுக்கு ரூ. 1,680 வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன், தோழர்கள் பிரனேஷ், ராகுல், ஹானஸ்ட்ராஜ், நவெந்தன், கார்த்தி ராஜேந்திரன், பாரி சிவா, போரூர் அபிநந்தன், நந்தகுமார், அசோக், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா....

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

கணவனை இழந்த அம்மாவுக்கு அவரது இரண்டு மகன்கள் மறுமணம் செய்து வைக்கும் நூறுசாமி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் சமூகம் வழியாக சுமக்கும் வலிகளை பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாக கடத்துகிறது இப்படம். இது உண்மையில் நடந்த சம்பவம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சகோதரர்கள் சித்தார்த்தன் மற்றும் விவேக் இந்த புரட்சி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தச் சிந்தனைக்கு காரணம் பெரியாரைப் படித்தது தான் என்கிறார் சித்தார்த்தன். இது குறித்து ‘ஆனந்த விகடனில்’ ஜூன் 26 ஆம் தேதி வெளிவந்த பேட்டியில் இருந்து… அவள் விகடனில்தான் எங்கள் முதல் பேட்டி வெளிவந்துச்சு. அதைப் பார்த்த பிறகு நிறைய ஊடகங்களில் பேட்டி எடுத்தாங்க. அதையெல்லாம் படிச்சுட்டு டைரக்டர் சசி சார் என்னைக் கூப்பிட்டார். சென்னைக்கு வந்து சாரை சந்திச்சேன். “உங்கம்மாவோட கதையைப் படமா பண்ணலாமா?”ன்னு கேட்டார். அம்மாவுக்கு மகன்கள் கல்யாணம் பண்ணி வெச்சதைப் பலரும் ஒரு செய்தியா கடந்து போனாங்க. ‘அதை...