மூடப்பட்ட தீண்டாமை தேநீர் கடை
ஸ்ரீபாலதண்டாயுதபாணி டீக்கடை தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி டம்ளர்; தனி இடம் என்று ஜாதிய தீண்டாமையை கடைப்பிடித்து வந்த. கோயம்புத்தூரில் உள்ள நாதேகவுண்டன் புதூர் என்ற ஊர். இதனை கோவை மாவட்டக் கழகம் ஏற்கனவே வைக்கம் போர் முடியவில்லை என்ற தலைப்பில் தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஊர்களில் களஆய்வு செய்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளது. தற்போது இதனை (The Hindu) பொதுவெளியில் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஆகவே அதன் எதிரொலியாக ஸ்ரீ பாலதண்டாயுதபாணி டீக்கடை மூடப்பட்டது.
ஏற்கனவே தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்த ஊர்களில் தற்போது ஒரு தனியார் செய்தி நிறுவனம் களஆய்வு செய்து வடிவேலம்பாளையம், மெட்டுவாவி பெரியகளந்தை ஊர்களிலும் அனைவருக்கும் சரிசமமாக ஒன் யூஸ் டம்ளரில் (காகிதக் குவளையில்) தான் தேநீர் தருகிறார்கள் என்ற செய்தியும் தற்போது வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர்-29, 2025 கோவையில் மாநிலம் தழுவிய ஜாதி தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கழகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாக கோவையில் பல்வேறு இடங்களில் தற்போது நீண்டகால தீண்டாமை ஜாதிய பாகுபாடு முடிவுக்கு வந்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 29012026
