Category: அண்மைச் செய்திகள்

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு காலபயணம் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார- பண்பாட்டு வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதரின் கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏணியாக மற்றெந்த இயக்கத்தையும் விடவும் அதீத பங்களிப்பைச் செய்த இயக்கமாக சுயமரியாதை இயக்கமும், அதன் பரிணாம வளர்ச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கமும் திகழ்கின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் அவ்வளவு இனிமையானது அல்ல. நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு சமமான காலம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் மீதே செருப்பு வீசப்பட்டது, பாம்பு வீசப்பட்டது, மலம் வீசப்பட்டது என்றால் சாமானிய தொண்டர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்...

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள் சிந்தனைச்செல்வன் விளக்கம்!

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள் சிந்தனைச்செல்வன் விளக்கம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட முகநூல் பதிவுவின் ஒரு பகுதி. எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்...

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

2015-லிருந்து 2020 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை அதன் பார்ப்பனிய ஆதரவை வெளிப்படுத்துகிறது. சமஸ்கிருதம் – ரூ. 2,532 கோடி; உருது – ரூ.837 கோடி இந்தி – ரூ. 426 கோடி தமிழ்- ரூ. 113 கோடி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.31 கோடி. மக்கள் பேச்சு வழக்கில் இல்லாத பார்ப்பனிய வேதமத சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மொழிக்கு ரூ.2,532 கொடி ஒதுக்கியுள்ளனர். மக்கள் பேசாத மொழி; பார்ப்பனர்கள் கோயிலில் மட்டும் பேசும் மொழி சமஸ்கிருதம். இந்நிலையில் கடந்த மே-15, ஆம் தேதி மத்திய மேல்நிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி-க்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வற்புறுத்துகிறது அந்த சுற்றறிக்கை. இரண்டு இந்திய மொழிகளோடு அந்நிய மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் இரண்டைத்...

அறநிலையத்துறைக்கு பார்ப்பன அமைச்சரா?

அறநிலையத்துறைக்கு பார்ப்பன அமைச்சரா?

இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ! “தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும், 4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதே நேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்க கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. இந்தத் துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குனராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பனகல் அரசர் முதன் முதலாக கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத் தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act)...

பாலியல் படுகொலை:  சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

பாலியல் படுகொலை: சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்,கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பகுதியில் உள்ள சிறுமியின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயக்குமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன், ஆசிரியர் செல்வேந்திரன், சுரேஷ், ராஜா, அழகேஸ்வரி, அவினாசி, குமரன் நகர் பகுதித் தலைவர் தேவராஜ், கார்த்தி, அரவிந்த், பிரசாந்த், அமுதன், கணேஷ், அம்ஜித்கான், கோபிகிருஷ்ணன் கோபால், மணிரத்தினம், ப்ரீத்தி, ராஜேஸ்வரன், அம்முகுட்டி, செந்தமிழ் கலைஅமுதன் ஆகிய மேட்டூர், கொளத்தூர் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

கதற வைத்த கரப்பான் பூச்சி கட்சி!

கதற வைத்த கரப்பான் பூச்சி கட்சி!

அவமதிப்பு வழக்குகள் நீதிமன்றம் வரும்போது ‘நான் அப்படி அந்த அர்த்தத்தில் பேசவில்லை’ என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கம் தருவது வாடிக்கை; அதை நீதிபதிகள் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. “நான் கரப்பான் பூச்சி என்று வேலை தேடும் இளைஞர்களை கூறவில்லை; போலி வழக்கறிஞர்களைத் தான் குறிப்பிட்டேன்” என்று ஒரு நீதிபதியே தன்னிலை விளக்கம் கூறிய நிலை வந்துவிட்டது. அதுவும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சூரியகாந்த். இளைஞர்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். இணையத்தில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை’ அபிஜீத் திப்கே என்ற அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தொடங்கினார். இவர் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்து பிறகு விலகியவர்.2 கோடிக்கு அதிகமான இளைஞர்கள் உறுப்பினர்களாகிவிட்டார்கள். கரப்பான் பூச்சி படையால் பதறிப்போன மோடி ஆட்சி அவர்களது முகநூல் பக்கத்தை முடக்கி தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறது. ● கரப்பான் பூச்சி கட்சி தனது கொள்கையாக 5 அம்சங்களை தெரிவித்திருக்கிறது. ஓய்வு பெறும்...

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை! காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக. 2017-ல்...

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. கொளத்தூர் மணி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி: திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார். தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும்...

சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!

சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!

கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் அவர்களின் இணையர் பழனியம்மாள் (48) 17.05.2026 முடிவெய்தினார்.. அவர்களது இறுதி நிகழ்வு மாலை 7 மணியளவில் பெருந்துறை மின் மயானத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பழனியம்மாள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.   மறைந்த தோழர் பழனியம்மாள் (48) அவர்களின் விருப்பப்படியும், அவரின் இணையர் செல்வராஜ் அவர்களின் விருப்பப்படியும்  பழனியம்மாள் அவர்களின் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க  இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அன்னாரின் உடல் தானமாக பெறும் நிலையில் இல்லை என்று தெரிவித்துவிட்ட நிலையில் அவரது கண்கள் மட்டும் தானமாக வழங்கப்பட்டது.   கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சமூக ஊடகப் பொறுப்பாளர்...

சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி  பணி நிறைவு பாராட்டு விழா!

சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, கடந்த 30.04.2026 தேதியன்று பணி நிறைவு பெற்ற தமிழர் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் மா.கந்தசாமி அவர்களின் இணையர், “பெரியார் கொள்கையாளர்” சார்பதிவாளர் சீனு. தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா 02.05.2026 சனிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா திருமண மண்டப்பதில் நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தற்சார்பு விவாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் “அரசுப் பணியில் நியாமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளிலும் மற்றவர்கள் ஏற்படுத்திய பிரச்சனைகளிலும் தைரியமாக எதிர்வினையாற்றியும், பெரியாரிய கொள்கையில் (கல்லைப்) போன்று உறுதியாக நின்று செயலாற்றி பணி ஓய்வு பெறும் சீனு. தமிழ்ச்செல்வியை பாராட்டி வாழ்த்துரையாற்றினார். கே.ஏ.செங்கோட்டையன் (பொது பணித்துறை அமைச்சர்), சத்யபாமா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), வழக்கறிஞர் ப.பா.மோகன், வந்தியத்தேவன் (ம.தி....

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்த கடந்த இதழின் தொடர்ச்சி… திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடந்தால், கு.சி.பழனிச்சாமி தன் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்வார். தினசரி நூல்களைப் படிப்பது, விவாதிப்பது, பேச்சுப்பயிற்சி என இருந்த மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோரின் உரைகள், கொள்கை உணர்வை ஊட்டி வளர்த்தன. ‘பவளக்கொடி’, ‘வள்ளித் திருமணம்’, ‘சாரங்கதாரா’, ‘நல்லதங்காள்’ ஆகிய நாடகங்கள்தான் கும்மம்பட்டியில் ஆண்டாண்டு காலமாக நடந்தன. அவை தவிர, வேறு எந்த நாடகத்தையும் கும்மம்பட்டி மக்கள் பார்த்ததில்லை. அதனால், பகுத்தறிவுக் கருத்துகளை நாடகம்மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, கலைமன்றம். சுமார் மூன்று ஆண்டுகள்...

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் மனோஜ் ரூ.5,000 வளர்ச்சி நிதி அளித்துள்ளார். அய்ரோப்பா குரோஷியாவில் பணியாற்றி வரும் இவர் கழக செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.தீண்டாமை, ஜாதிய வன்கொடுமைகள், பெண் அடிமைத்தனம் மற்றும் ஆதிக்க மனப்பான்மையோடு சக மனிதர்களை இழிவுபடுத்தும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து, உழைக்கும் எளிய மக்களைக் காத்து நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் என்னை ஒரு துரும்பாக இணைத்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, “இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்; இவன் படிக்க வேண்டும், இவன் குலத்தொழில் செய்ய வேண்டும்” என்று மனித மாண்பைச் சிதைக்கும் ஆரிய பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சமரசமற்ற போர்க்களத்தில் என்னையும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புரட்சிகரமான கொள்கைகளை...

வளர்ச்சி நிதி!

வளர்ச்சி நிதி!

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் ரூ.13,000 வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளனர். * கழகத் தோழர் இரண்யா மாதம் மாதம் ரூ.2,000 முழக்க வளர்ச்சி நிதி வழங்கி வருகிறார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ் 21052026

பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக்கத் துடிக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக்கத் துடிக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 3-வது குழந்தை பெற்றால் ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் 40,000 தருவதாக அறிவித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு. இது முட்டாள்தனமான கண்டிக்கத்தக்க அறிவிப்பு. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாக இழிவுபடுத்துகிறார். உலகம் முழுவதும் “குழந்தைகள் வேண்டாம்” என்ற இயக்கத்தை நோக்கி பெண்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். திருமணங்களுக்கு மாற்றாக “ஒன்றாக வாழ்தல்” என்ற முறையை தேர்வு செய்கிறார்கள். நீதிமன்றங்களும் இதற்கு சட்ட அங்கீகாரம் தருகின்றன. ஒன்றிய பாஜக ஆட்சி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான தொகுதிகளைக் குறைக்கிறது என்றால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர, கூடுதலாக குழந்தை பெற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது. சந்திரபாபுவின் இந்த அறிவிப்புக்கு எதிராக அம்மாநிலத்தில் எந்த எதிர்ப்புக் குரலும் வரவில்லை என்பது வெட்கக்கேடானது. பெரியார் முழக்கம் இதழ் 21052026

நீட் வேண்டாம்!

நீட் வேண்டாம்!

நீட் வினாத்தாள் கசிவு இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒருமுறை கசிந்தது. வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்தவர்களே இதற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த மே 3-ம் தேதி 5432 மய்யங்களில் இருந்து தேர்வு எழுதிய 22.79 இலட்சம் மாணவர்கள் மீண்டும் ஜூன்-21ல் தேர்வு எழுத வேண்டும். மிகுந்த மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த முறை “ஆன்லைன்” வழியாக தேர்வு நடத்தப்படும் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் இருவருமே நீட் தேர்வு கூடாது; பிளஸ்டு (+2) மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். கல்விக் கட்டமைப்பையே சீரழித்து வரும் நீட் வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் ஒருமித்த குரல்! பெரியார் முழக்கம் இதழ் 21052026

திராவிட மாடல் சாதனைகளுக்கு விருது

திராவிட மாடல் சாதனைகளுக்கு விருது

மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்ட “திராவிட மாடல்” ஆட்சி பல்வேறு சாதனைகளுக்காக கொள்கை எதிரியான ஒன்றிய பாஜக அரசிடம் இருந்தே விருதுகளைப் பெற்று வந்தது. ஆனாலும் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இயலாத நிலையை தேர்தல் களம் உருவாக்கி விட்டது.இப்போதும் அந்த சாதனை விருதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடலோரங்களில்இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கான கொள்கைகள்; திட்டங்களை உருவாக்குதல்; அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் “திராவிட மாடல்” ஆட்சியே முதலிடத்தைப் பெறுகிறது என்ற 2025ம் ஆண்டுக்கான விருதை ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் இந்த பாராட்டு விருதுக்கான சான்றிதழை புதிய முதல்வர் ஜோசப் விஜயிடம் டிட்கோ அதிகாரிகள் நேரில் வழங்கி வாழ்த்து பெற்று உள்ளனர். வாழ்த்து பெறும் படத்தை இன்று தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. நடந்தது தீய சக்தியின் ஆட்சி அல்ல; வளர்ச்சி சக்தியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி என்பதை புதிய முதல்வர்...

உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு!

உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு!

ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறை சட்டங்களில் ஒன்றான உபா. (Unlawful Activities Prevention Act) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த சட்டமே அரசியல் சட்டத்திற்கு எதிரான சட்டம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். பிணை வழங்காமல் நீண்டகாலம் சிறையில் அடைத்து வைப்பதற்காகவே இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் குறித்து அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் உயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். உபா சட்டத்தில் கைதானவர்களுக்கும் பிணை வழங்கலாம் என்று கூறிய நீதிபதிகள் “பிணை என்பது விதியாகவும்; சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும்” என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல ஏற்கனவே இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமே பிணை வழங்க மறுத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சையத் இப்திகார்...

மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் மே-15, அன்று பகல் 12-மணியளவில் சந்தித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்று மனம் திறந்து உரையாடினார். “ஆட்சியில் இருந்தபோது உங்களை நாங்கள் சந்திக்கவில்லை; இனி அடிக்கடி சந்திப்போம் என்று கூறி விடைபெற்றனர்”. பெரியார் முழக்கம் இதழ் 21052026

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

இளைய தலைமுறைக்கு சமூக அரசியல் வரலாறுகளைப் புரிய வைக்கும் தேவை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் வரலாறு, நோக்கம் பற்றிய புரிதல் இருப்பது இல்லை! சமூகம் மற்றும் கல்வி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி ஒரு அடையாளமாக ஏன் ஏற்கப்பட்டது என்ற சமூகப் புரிதலை இளைஞர்களிடம் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டு கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனுஸ்மிருதி அடிப்படையிலேயே சமூகத்தில் இட ஒதுக்கீடு இருந்தது. அதன்படி பிராமணர்களே கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள்; ‘சூத்திரர்கள்’ பிராமணர்களின் அடிமைகளாகவும், அவர்களுக்கு கல்வியே கிடைக்காமல் தடை செய்யப்பட வேண்டும் என்பதுமே எழுதப்படாத சமூக சட்டமாக இருந்தது. சமூகத்தை மனுஸ்மிருதி வழியாக பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் பள்ளிகளைக் கட்டவில்லை; கோயில்களைக் கட்டி பார்ப்பனர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள்....

தோப்புக்கரணம் போடுகிறார்!

தோப்புக்கரணம் போடுகிறார்!

சபாஷ்! வாழ்த்து என்று பூரித்து பூங்கொத்து கொடுத்து மாலையிட்டு பாராட்டு விழா நடத்தத் துடிக்கிறோம்; அப்படி யாருக்கப்பா! பாராட்டு விழா என்று கேட்கிறீர்களா? சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்! இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தான் அந்த பாராட்டுக்குரிய ‘மகாபுருஷர்’. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ‘பிராமண’ சேவையை கைக்கழுவி விட்டாரா? எதற்கெடுத்தாலும் இந்து விரோதி என்று கூச்சலிடமாட்டேன் என்று சபதமெடுத்துவிட்டாரா? ‘பிராமணர்’களைக் குறை கூறினால் மேடையில் கொதித்தெழுந்து அடிக்க பாயமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்படியெல்லாம் இல்லை! இனி இந்து மதத்தை எதிர்த்தால் மிரட்ட மாட்டேன்; நீதிமன்றம் போக மாட்டேன்; ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன்; மாறாக கடவுளிடம் மனு கொடுப்பேன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். “சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதிக்கு நல்ல புத்தியைக் கொடு!” என்று கோவை புளியங்குளம் விநாயகரிடம் தோப்புக்கரணம் போட்டார் சம்பத் என்று தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. “ஓ விநாயகனே.. யானை முகத்தோனே; தும்பிக்கை நாயகனே; இது அடுக்குமா?...

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல. பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. “நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால்...

1967-ல் திமுக வெற்றியின் போது பெரியார் கூறியது என்ன?

1967-ல் திமுக வெற்றியின் போது பெரியார் கூறியது என்ன?

எப்படியோ இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்து மாற்றான் எதிரி ஆட்சியாகவே ஏற்பட்டுவிட்டது; அந்தப்படியே எதிரிகளும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்; நானும் நினைத்துக் கவலைப்பட்டேன் ; துக்கப்பட்டேன்; என்னமோ நமது நல்ல வாய்ப்பின் காரணமாய், எதிரியின், புத்தி இல்லாத தன்மையின் காரணமாய்ப் பெரிதும் தங்களால், தங்கள் முயற்சியால் ஏற்பட்ட ஆட்சியை அனுபவிக்க வாய்ப்பு பெறாமல் ஒரே முழுக்கில் மண்ணெடுக்க ஆசைப்பட்டு ஆட்சியாளர்களை சங்கடமான நிலைக்குத் கொண்டுவர ஆசைப்பட்டதால் ஆட்சியாளர் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததும், ஆட்சியாளர்களை ஒழிக்கத் திட்டம் போட்டு விட்டார்கள். இது நமக்கு ஒரு நல்வாய்ப்பாய் வாய்த்தது என்று கருதி இந்த ஆட்சியை விழாமல் செய்து அது உள்ளவரையிலாவது மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும்படி செய்ய முடியுமா? என்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெரிதும் பார்ப்பனர் முயற்சியால் ஆட்சி தி.மு.க.வுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்தது என்றாலும் தி.மு.க. பார்ப்பனர் அல்லாதார் என்பதையும், அதிலும் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்பதையும், இவர்கள் பதவிக்காக...

கலையின் வழியாக கலகம் செய்த கும்மம்பட்டி

கலையின் வழியாக கலகம் செய்த கும்மம்பட்டி

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை தொடர். 1948-ஆம் ஆண்டு, ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான அரசு, சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியை மீண்டும் கட்டாயப் பாடமாக்கியது. நீறுபூத்த நெருப்பாக இருந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரின் உணர்ச்சிப் பிழம்புகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கின. அந்த உணர்வுகளுக்குத் தப்பாத ஒரு கிராமம் கும்மம்பட்டி. திண்டுக்கல்லில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர். அந்த ஊரைச் சேர்ந்த கு.சி.பழனிச்சாமி, எந்நேரமும் கையில் பெரியார், அண்ணா நூல்களை வைத்திருப்பவர். பத்தாம் வகுப்பு மாணவரான அவர், சக மாணவர்களோடு உரையாடும்போதுகூட தமிழ், தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு பற்றியதாகவே இருக்கும். ‘திராவிடப் பண்ணை’ நூல்களை வாங்கி, தான் படிப்பதோடு...

பெரியாரின் இந்தி எதிர்ப்பை இழிவு செய்தவர் ஜீவா! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (16)- கொளத்தூர் மணி

பெரியாரின் இந்தி எதிர்ப்பை இழிவு செய்தவர் ஜீவா! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (16)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது சுமத்தியுள்ள விமர்சனங்களுக்கும் (பழிசுமத்தல் என்ற சொல்லைக் கூட தவிர்க்கிறேன்). தோழர் ஜீவானந்தம் மீதான மிகைமதிப்பீட்டுக்கும் பதில் அளிப்பதே எனது நோக்கம் “ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் தோழர் ஜீவா எழுதியுள்ளவற்றுள் நினைவூட்டலுக்காக சில “நாகரிக” சொற்றொடர்கள் கீழே: “ஜஸ்டிஸ் கட்சியுடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்பச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்குச் சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்குக் கும்பல்களின் யோசனைப்படி ஈவெரா யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.” “சென்னையில் ‘நால்வர் சந்திப்பு’ நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடிஅரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு...

பாஜக ஊடுருவல் முறியடிப்பு!

பாஜக ஊடுருவல் முறியடிப்பு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டமாக கட்டமைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் டெல்லியின் ஊடுருவலை தோல்வியடைய செய்திருக்கிறார். விஜய் கட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிக்கலாம்; அதற்கு ஆளுநரை பயன்படுத்தலாம் என்ற சதி திட்டத்தை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் விஜய் முழுமையாக பாஜக எதிர்ப்பு அணிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் துரோக சக்தியாக மாறி உள்ளது. மற்றபடி சிபிஅய், சிபிஎம், இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியின் நட்பு சக்தியாக இருந்து கொண்டு பாஜக ஊடுருவலை தடுப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மிகச் சிறப்பான முடிவை எடுத்திருக்கின்றன. இதைத் தான்...

பதவிக்காக இருப்பவர்களை கொள்கைவாதிகளாக மாற்ற வேண்டும்!

பதவிக்காக இருப்பவர்களை கொள்கைவாதிகளாக மாற்ற வேண்டும்!

தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து கழக தலைவர் “கொளத்தூர் மணி” அறிக்கை: “தமிழக வெற்றிக் கழகத்துக்கு” பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஒன்றிய ஆட்சியின் தூதுவராகி அதிக பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க மறுத்து வருகிறார். ஆளுநர் உருவாக்கும் இந்த குழப்பத்தால் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உருவாகி வருகின்றன. இது தொடர்பாக அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. மக்களால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அஇஅதிமுகவை ஆட்சி அமைக்க அனுமதித்து அந்த ஆட்சிக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.இது உண்மையாக இருந்து விடக்கூடாது என்று நாம் அஞ்சுகிறோம். இந்திய அரசியலில் கொள்கைக்கான இலட்சியத் தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். மாநில அடையாளங்களை அழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசம் இன்றி அவர் போராடுகிறார். இந்தியாவிலேயே மாநிலங்களுடைய உரிமைக்குப் போராடும் ஒரே தலைவராக இன்றைக்கு பல்வேறு கட்சிகளிலும் அவர்...

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

சென்னை மாகாண முதலமைச்சர் பதவி தன்னை நாடி வந்த போது பெரியார் ஏற்க மறுத்தார். நீதிக்கட்சியின் உள்ளேயே பெரியார் பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தற்கிடையே பெரியார் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்தப் போராட்டம் குறித்து பெரியார் ஈரோட்டில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. உள்ளூரில் என்னை மதிக்கும் அளவுக்கு நானில்லை என்பது வாஸ்தவந்தான். அதைப் பொறுத்துத்தானே கழக வேலையும் இங்கு இருக்கும்? இன்று கூட இக்கூட்டத்தில் அரசியல் நிலையைப் பற்றிப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். எனக்கு முன்னால் பேசிய நண்பர்களும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். ஆனால், நான் அரசியலைப் பற்றி இந்த ஊரில் பேச இஷ்டப்படவில்லை. காரணம், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இவ்வூரில் மிகமிகச் சொற்பம்! இந்த ஊரில் பெரும்பாலும் எல்லாம் வியாபாரிகள்: அவர்களுக்கு அடிக்கடி ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்கவும், அதற்கான பூசை, திருவிழா செய்யவுமே காலமெல்லாம் சரியாய் விடுகிறது. அதுவும்...

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை. காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில்...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கடலூர்: ஏப்ரல்-14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக கடலூர் மஞ்ச குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, ராஜேந்திரன், திராவிட மகிழன், சத்யா, சதீஷ், திருமூர்த்தி, அசோக், வீரா, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி: ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளையொட்டி ஏப்ரல்-14 காலை 11.00 மணியளவில் நங்கவள்ளியில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, நங்கவள்ளி பகுதி புகழேந்தி, பிரபாகரன், ஹரி, தினேஷ், சித்திக் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். சென்னை:...

விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு கழகம் இறுதிமரியாதை!

விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு கழகம் இறுதிமரியாதை!

மறைந்த பெரியார் தொண்டர் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு, ஏப்ரல்-28 மாலை 7 மணிக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போராசிரியர் சரசுவதி ஆகியோருடன், கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். பெரியார் முழக்கம் இதழ் 07052026

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026‌ அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர். ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே...

புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

மறைந்த கழக செயல்வீரர் பத்ரி நாராயணனின் 22வது நினைவு நாளான ஏப்ரல்-30 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ் தலைமையில், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா முன்னிலையில், பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. பகுதித் தலைவர் சு. கோபிநாத் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – சத்யா – லதா, பொன்ராஜ் குழுவினரின் பாடல்கள் சிந்திக்க வைத்தன. “அமைப்பாக திரள வேண்டியதின் அவசியம் என்ன?” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஒரே நாளில், ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் காரணத்தை விளக்கினார். “சமகால சிக்கல்களில் பெரியாரிய பார்வை” குறித்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். கம்யூனிச இயக்கங்களும் பெரியார் இயக்கமும் ஒன்றிவரும் புள்ளிகளையும் – வேறுபடும் புள்ளியையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திரகுமார் தேரடி, “பெரியாரியலும்...

பார்ப்பனிய எதிர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தவர் ஜீவா ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (15)- கொளத்தூர் மணி

பார்ப்பனிய எதிர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தவர் ஜீவா ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (15)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்கள் தனது ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் முன் வைத்திருக்கும் வேறொரு குற்றச்சாட்டைப் பற்றியும் பார்ப்போம். “1.8.1927இல் சென்னையில் நால்வர் சந்திப்பு நடந்தது. அது குறித்து அடுத்த வார குடிஅரசில் வெளியான “பிராமணிய சடங்கை விலக்கியவர்” பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன் வரிசையில் இடம்பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரரோடு இணைந்து சமூக சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.” என்னதான் உண்மை? 25.7.1926 குடிஅரசு இதழின் 9ஆம் பக்கத்தில் ‘சென்னையில் நால்வர்’ என்ற தலைப்பில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.அதில் “காங்கிரஸ் பார்ப்பனரல்லாத தலைவர்களான ஸ்ரீமான்கள் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், ஆர்கே சண்முகம் செட்டியார் ஆகிய நால்வரும் அரசியல் சமுதாய விஷயங்களில் தற்காலம் இருக்கும் நிலைமையில் இனி தாங்கள் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப்...

பண்ணையார்களைப் பணியவைத்த திருவாதிரைமங்கலம்!

பண்ணையார்களைப் பணியவைத்த திருவாதிரைமங்கலம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திருவாதிரை மங்கலம் குறித்தும் திராவிட தொழிலாளர் சங்கம் குறித்தும் விவரிக்கிறது இக்கட்டுரை தொடர். நெடுங்காட்டன்குடி, சூரனூர், சோழிங்கநல்லூர், வடகுடி, எழுமுக்கால், கீழவைப்பூர், குரும்பேரி, தேராகுளம் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி, திருவாதிரை மங்கலம். அதன் தலைகிராமம் திருவாதிரை மங்கலம்தான். 1950-க்கு முன்பு, ஊராட்சி முழுவதுமே ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி, ‘ஆதிக்கஜாதி – ஒடுக்கப்பட்ட ஜாதி’ என வர்க்கமும் வர்ணமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே நிலவியது. பண்ணையார்கள் வீட்டிற்குள்கூட தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. உணவோ, தண்ணீரோ திண்ணையில் அமர்ந்துகூட உண்ண முடியாது. கொல்லைப்புறத்தில் வைத்து கொடுப்பார்கள். பள்ளி செல்லவும் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி கிடையாது. இந்தச் சூழலில் 1950-களின் பிற்பகுதியில், நாகை...

தீர்ப்பை மாற்றி எழுத மக்களைத் தயார் செய்வோம்!

தீர்ப்பை மாற்றி எழுத மக்களைத் தயார் செய்வோம்!

ஒவ்வொரு முறையும் கொளத்தூர் தொகுதிக்கு போகும்போதெல்லாம் மக்களை சந்திக்கும் போது மிகவும் உற்சாகம் பெறுவதாக மு.க ஸ்டாலின் பெருமையுடன் கூறுவார்; மிகவும் கவலை எடுத்து தனது தொகுதியை வளர்த்தெடுத்து அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே கொளத்தூர் தொகுதி இன்று முதல்வரை கைவிட்டதை அறியும்போது இதயம் வலிக்கிறது. தனது ஐந்தாண்டு ஆட்சியை சாதனைகளின் சரித்திரம் ஆக்கினார் மு. க.ஸ்டாலின். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதலிடத்தில் கொண்டு வந்த நிறுத்தினார். ஒன்றிய ஆட்சி வஞ்சகத்தை இவரைப் போல் துணிவுடன் வேறு எந்த மாநில முதல்வரும் எதிர் கொள்ளவில்லை. இவர் செயல்படுத்திய பெண்களுக்கான உரிமை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பல்வேறு மாநில பெண்களுக்கும் இவரால்தான் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கும் ஆளுநரின் அத்துமீறல்களிலிருந்து மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கும் இவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் ;அதில் கிடைத்த வெற்றிகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல;‌‌ இந்தியாவின்...

‘‘இலட்சியமும் கொள்கைகளுமே முக்கியம்”

‘‘இலட்சியமும் கொள்கைகளுமே முக்கியம்”

மக்­கள் தீர்ப்­பைத் தலை­வ­ணங்கி ஏற்கிறோம் என­வும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்­றும், சிறப்­பான எதிர்க்­கட்சியாகச் செயல்படுவோம் என­வும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்துள்ள அறிக்கை வரு­மாறு: கடந்த ஐந்­தாண்டு காலத்­தில் ஏரா­ளமான திட்டங்­களை உருவாக்கி, தமிழ்­நாட்டு மக்களுக்கு நல்­லாட்­சியை வழங்கினோம். தமிழ்­நாட்டை அனைத்து வகை­யிலும் உயர்த்­தி­னோம். தேர்­தல் களத்­தில் எங்­க­ளது சாத­னை­க­ளைச் சொல்லியே வாக்­கு­களைக் கேட்­டோம். மக்­க­ளுக்குச் செய்து கொடுத்த நலத்­திட்­டங்­கள் தொட­ரு­வ­தற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்­புரை செய்­தோம். அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கும் உண்­மை­யான ஆட்­சி­யைத் தந்­தேன்! திராவிட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட் ட­ணியை ஆத­ரித்து வாக்க­ளித்த தமிழ்­நாட்டு மக்கள் அனை­வ­ருக்­கும் நான் எனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, வாக்­க­ளிக்க மறந்­த­வர்­க­ளுக்­கும் சேர்த்தே ஆட்சி நடத்­தி­னேன். அனைத்து மக்­க­ளுக்­கும் உண்­மையாக இருந்­தேன். நான் எனது மனச்­சாட்­சிப்­ப­டியே செயல்­பட்­டேன். நான் எனது சக்­தியை மீறி...

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்றே சொல்ல வேண்டும். எவ்வித அரசியல் அனுபவமோ, பயிற்சியோ இல்லாத நடிகர் விஜய் ஒரு கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் நேரடியாக முதலமைச்சர் பதவியில் அமரப் போகிறார். இதற்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் பெருமளவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள் பெருமளவு நடிகர் விஜய்க்கு வாக்குகளைக் குவித்துள்ளார்கள். நடிகர் விஜய் மக்களிடம் முன்வைத்த ஒரே கொள்கை “திமுக தீய சக்தி” என்பது மட்டுமே! இது தவிர தனது கொள்கை இதுதான் என்று ஒரு வார்த்தையைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. ’மாற்றம் வேண்டும்’ என்ற ஒரே கொள்கைக்காக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். எதை நோக்கிய மாற்றம் என்பது குறித்த புரிதலோ, தெளிவோ வாக்காளர்களுக்கும் இல்லை; அந்த கட்சிக்கும் இல்லை. தமிழ்நாடு வரலாற்றில் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த திராவிட மாடல் ஆட்சி அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சமூகத்தில் எந்த...

ஈழ விடுதலைக் கவிஞர் விடைபெற்றார்!

ஈழ விடுதலைக் கவிஞர் விடைபெற்றார்!

தேனிசை செல்லப்பா எனும் இசைப் போராளி விடை பெற்றுக் கொண்டு விட்டார். தமிழீழ விடுதலை வரலாற்றில் தேனிசை செல்லப்பாவுக்கு நிலைத்த இடம் உண்டு. தமிழ்நாட்டு விடுதலை இலட்சியத்தை முன்னிறுத்தி `தினத்தந்தி ’ நாளேட்டின் நிறுவனர் சி.பா ஆதித்தனார் தொடங்கிய `நாம் தமிழர் கட்சி’யிலிருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது. தனிநாடு விடுதலையில் தோய்ந்து நின்றவர். அந்த இலட்சியம்தான் அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கி நகர்த்தியது. 1983-இல் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை உணர்வுகள் வெடித்து கிளம்பிய போது தேனிசை செல்லப்பாவின் இசை நாடா வெளிச்சத்துக்கு வந்தது. நாம் தமிழர் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டிருந்த கவிஞர் காசி.ஆனந்தன் எழுதிய உணர்ச்சிமிகு கவிதை வரிகளுக்கு இசை வடிவம் தந்திருந்தார் தேனிசை செல்லப்பா. தமிழ்நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கங்களில் குறிப்பாக பெரியார் இயக்கங்களில் அவரது இசை நிகழ்ச்சிகள் உணர்வலைகளைத் தட்டி எழுப்பின....

கை விலங்கிலிருந்து கருப்பு அங்கி வரை!

கை விலங்கிலிருந்து கருப்பு அங்கி வரை!

கை விலங்கோடு குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பேரறிவாளன், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக படியேறுகிறார். ராசீவ் கொலையில் குற்றவாளியாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்தை ஏற்றவர் பேரறிவாளன். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவராக நிறுத்தப்பட்டார். பூந்தமல்லியிலும் வேலூரிலும் பிறகு சென்னையிலும் அவர் சிறைவாசம் தொடர்ந்தது. சிறைக்குள் இருந்து கொண்டே மன உறுதியோடு சட்டப் போராட்டம் நடத்தினார். மரண தண்டனை அறிவிக்கப்பட்டது; மரண தண்டனைக்கு எதிராக மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. எழுவர் விடுதலைக்கான தொடர் பரப்புரைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், போராட்டங்கள் தமிழ்நாடு முழுதும் தீவிரமாக நடந்தன. மரண தண்டனையை எதிர்த்து தனக்கு மரண தண்டனையைத் தந்து கொண்டார் செங்கொடி என்ற வீரப்பெண். மரண தண்டனைக்கு எதிராக உலகில் தமிழ்நாட்டில் நடந்தது போல் வேறு எந்தப் பகுதியிலும் இயக்கங்கள் நடந்த வரலாறு இல்லை. இந்த மக்கள் இயக்கம் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும், புலன் விசாரணை செய்த தலைமை இயக்குனரையும், வாக்குமூலம் வாங்கிய...

கன்னியாகுமரி மாவட்டக் கழக  கலந்துரையாடல் கூட்டம்!

கன்னியாகுமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்!

குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.04.2026 ஞாயிறு அன்று மாலை 03.00 மணியளவில் தக்கலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் தலைமை வகித்தார். குமரி மாவட்டக் கழகச் செயலாளர் நீதியரசர் முன்னிலை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, தமிழ்நாடு சட்ட தேர்தலில் கழகத் தலைமைக்குழு எடுத்த தீர்மானத்தின் படி குமரி மாவட்டத்தில் எப்படி களப்பணியற்றுவது என கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் மஞ்சுகுமார், நாஞ்சில் சூசையப்பா, தமிழ்மதி, அணைக்கரை பால் வண்ணன், ரமேஷ் பாபு அன்டன் பாலசிங்கம், ரெவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகம் எடுத்துள்ள தேர்தல் நிலைபாட்டின்படி குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய களப்பணியாற்றுவது என்றும் குறிப்பாக பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் முழுகவனம் செலுத்தி பா.ஜ.க. இல்லாத குமரி மாவட்டம்...

உதயநிதிக்கு கழகம் சார்பில் வரவேற்பு!

உதயநிதிக்கு கழகம் சார்பில் வரவேற்பு!

ஏப்ரல்-20, மாலை 6 மணிக்கு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு, பிரச்சாரம் செய்ய வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, இராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், பல கட்சிகள் இணைந்து வரவேற்பு அளித்தனர். துணை முதல்வர் முன்னிலையில், திமுக – திவிகவினர் இணைந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர். வி.எம் தெருவின் பெயரை, பெரியார் தொண்டர் “பத்ரி நாராயணன் தெரு” என்று மாற்றியமைக்க, பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்து பெற்ற கோரிக்கை மனு, சென்னை மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், க.வே. மோகன் தலைமையிலான வட்டக்கழக திமுகவினர் ஒருங்கிணைத்த நிகழ்வில், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்...

கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு!

கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையில் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். திருப்பூர், அவினாசி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மொடக்குறிச்சி, சேலம் (மேட்டூர், எடப்பாடி) புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் (திண்டிவனம்), புதுச்சேரி, சென்னை (மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதை, பெரம்பூர், வில்லிவாக்கம், ஆர்.கே நகர், எழும்பூர்), காஞ்சிபுரம், உத்திரமேரூர், வேலூர், குடியாத்தம், கே.வி குப்பம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் தோழர்களே நட்சத்திர பேச்சளார்களாக வலம் வந்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்ற நோக்கத்தில் முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் Zero BJP என்ற பெயரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளான திருச்செந்தூர், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் கிராமங்கள்தோறும் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தோழர்கள் மேற்கொண்டனர். பாஜகவை வீழ்த்த களமிறங்கிய கழகத் தோழர்கள்! 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்...

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் சீ. பிரவீன்குமார் – ஜா. சமீம் மோனிஷா ஆகியோரின் சுயமரியாதை திருமணம், மார்ச்-23, காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டை சமூகநலக் கூடத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. மயிலை சுகுமாரின் ஒருங்கிணைப்பில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சாரநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன், சேத்துபட்டு இராசேந்திரன், துணை செயலாளர் இராவணன், மாவட்ட அமைபாளர்கள் தட்சணாமூர்த்தி, ம.கி எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் கோபிநாத், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். கழக ஏட்டுக்கு மணமக்கள் ரூ. 2,000 நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

உலக மகளிர் தினத்தையொட்டி 9 நூல்கள் வெளியிடு

உலக மகளிர் தினத்தையொட்டி 9 நூல்கள் வெளியிடு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் .வானதியின் கவிதைகள், வழி, தியாகச்சுடர் அன்னை பூபதி, கஸ்தூரியின் ஆக்கங்கள், மார்ச்-8, அனைத்து உலக பெண்கள் நாள், கனவுக்கு வெளியேயான உலகு, பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும், பெண்களும் புரட்சியும், வேர்கள் துளிர்க்கும், காதோடு சொல்லி எழு ஆகிய 9 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ம. டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பௌமிகா வரவேற்புரையாற்றினார். இனியாழ், ஆண்டனி ராஜ் (அ. தி. மு. க), அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர் திவிக), லாரன்ஸ் பிரபாகரன் (தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்), வள்ளலார் நகர் தினகரன், அ. சி. சின்னப்பத்தமிழர் (தமிழ் வழிக்கல்வி இயக்கம்), M. K பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவி இயக்கத்தில் “எங்களின் குரல்” நாடகம்...

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

கோவை மாவட்டம், சீரபாளையம் பகுதியைச் சார்ந்த (விடியல் பதிப்பகம்) விசயக்குமார் – கற்பகவள்ளி இணையரின் மகள் இலக்கியா அவர்களுக்கும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியைச் சார்ந்த பழனிசாமி – பாக்கியலட்சுமி இணையரின் மகன் விஷ்ணுராம் அவர்களுக்கும் திருமண வரவேற்பு விழா 23.02.2026 திங்கள் அன்று மாலை 6 மணி அளவில் பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள வேல் மஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, காவை.அவினாசி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் – லதா ஆகியோரின் மகள் தமிழ்ஈழம் அவர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 22.02.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கோவை நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டத்தில் நடைபெற்றது. புதிய குரல் நிறுவனர் ஓவியா தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார். பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஆறுச்சாமி (த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர்), மயூரா தாமோதரசாமி (கல்வியாளர்), முனைவர் தமிழரசி, முகம்மது ஜியாவுதின் (நீதிபதி, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் தமிழ்நாடு அரசு), மோகனசுந்தரம் (ராகவேந்திரா சேவா டிரஸ்ட்), திருப்பூர் தமிழ்ச்செல்வி (கருணா மனோகரன் அறக்கட்டளை), அசோக்குமார் (அறிவுச்சோலை அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த. பெ. தி. க...

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்:   திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்: திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

சேலம்: தமுஎகச சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முழு வரலாறு’ ஆய்வு நூல் அறிமுக விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் கலைஞர் கருணாநிதி திருமண மண்டபத்தில், த.மு.எ.க.ச சேலம் மாவட்ட உதவித் தலைவர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் நாசர்,சையத் மூஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்), காஜாமொய்தீன் (வி.சி.க இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர்), ஷேக்முகம்மது (மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்), சதாம் உசேன் (மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர்), ஷரிப் பாஷா (எஸ்.டி.பி.அய் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), சோபனா (த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர்), பிரவீன்குமார் (மக்கள் ஒற்றுமை மேடை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சேலம் மாநகரச் செயலாளர் ரகுபதி வரவேற்புரையாற்றினார்....

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை: இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது. எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை...

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார். பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது. இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்....

உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு

உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரையில் மக்களின் இதயங்களோடு உரையாடுகிறார். குறிப்பாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் உரிமைத் தொகை திட்டம் அவர்களின் குடும்ப உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியம் என்பதை உள்ளத்தில் பதிய வைக்கிறார். குடும்பத் தலைவி என்ற பெயரில் அவர்கள் உழைக்கிறார்கள்; அதற்கு ஊதியம் இல்லை; வேலைக்குச் செல்லும் ஆண்கள் தான் ஊதியம் பெறுகிறார்கள் என்று சமூகம் கூறுகிறது. குடும்பத் தலைவிகள் காலையில் தொடங்கி குடும்பத்திற்கு வழங்கும் வேலைகளை முதல்வர் பட்டியலிட்டுக் காட்டும்போது பெண்கள் அந்த எதார்த்தத்தை உணர்ந்து முதல்வரின் உரையோடு ஒன்றிப் போகிறார்கள். குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும்; உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற இயக்கம் உலகம் முழுதும் நடந்து வருகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு சட்ட அங்கீகாரம் மட்டுமே கிடைத்திருக்கிறது. குழந்தை வளர்ப்பு, சொத்துரிமை, ஓய்வூதியம் போன்றவற்றில் பெண்களின் குடும்ப...