நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!
தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...
