Category: திவிக

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

உடற் கொடை அளிப்பு!

உடற் கொடை அளிப்பு!

திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது. தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது. மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார். நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு...

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

20.06.2025 அன்று கழகத் தலைவரின் 78 வது பிறந்தநாளில் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் தலைவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி மற்றும் தோழர்கள் கலைச்செல்வி, காயத்ரி, கோமதி, கீதா, தேன்மொழி, இராணி, அருள்மொழி, மகிழினி ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 10072025இதழ்

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக திவிக மாநிலத் தலைவர் தோழர் இராவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரு ஜெய்பீம் பவன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று தோழர் இராவணன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்தியாவில் பௌத்தம் முன்னெடுத்த சமத்துவம் குறித்தும், ஆரியர்கள் படையெடுப்பு பற்றியும், ஆரிய பண்பாட்டு படையெடுப்பால் நாம் இழந்தவற்றை திணிக்கப்பட்ட ஆரிய பண்பாட்டில் இருந்து நாம் மீள்வதற்கு பெரியார் கையாண்ட விழாக்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 03072025இதழ்

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும். 2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது 3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல்,...

விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை ! அன்பார்ந்த தோழர்களே! “முருகன் முகமூடியோடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களைக் கொள்ளை அடிக்க சிலர் எடுத்த முயற்சி, பல வகைகளிலும், பல தரப்பிலும் நிகழ்ந்த அசைவுகள், நகர்வுகள், எச்சரிக்கை மணிகள் என விழிப்போடு இருந்து நா(வீ)ட்டாரால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், ‘மயானக் கொள்ளை’ என்பதைப் போல மக்களையும் உடன் அழைத்துக் கொண்டு, பறைகள் முழங்க, பட்டப்பகலில், ஒலிபெருக்கிகள் அலற ஆண்டுதோறும் நடக்கும் அடுத்த ‘மனங்கள் கொள்ளை’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் நடக்க உள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் களை, இரசாயன சாயப் பூச்சோடு இப்போதே ஜோராக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள். மூன்று அங்குல விட்டமுள்ள...

முழக்கத்திற்குப் பாராட்டு!

முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது. அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா...

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கலைஞர் பிறந்த நாள் கூட்டம் நடைப்பெற்றது. திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சிவானந்தா காலனி திமுக பகுதிச் செயலாளர் டெம்போ சிவா, தமிழ்ப்புலிகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் இராமச்சந்திரன், கோவை குமார், விசிக மாவட்ட செய்தி அமைப்பாளர் கோவை ராசா, திமுக முனீர் அகமது, திக தோழர் ராஜா, திவிக மாநகரத் தலைவர் நிர்மல், சதீஷ், மாதவன், ஸ்டாலின் ராஜா கதிரவன் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார். பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக குடிஅரசு மற்றும் சுயமரியாதைஇயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் 10.06.2026 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணம் பகுதியில் வே.அரிதாசு தலைமையில் நடைபெற்றது. யாழ் வெள்ளிங்கிரி வரவேற்புரை ஆற்றினார். கோவன் கலைக்குழுவின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர், ஆசிரியர் சிவகாமி (தலைவர், தமிழ்நாடுஅறிவியல் மன்றம்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழக தலைவர் கொளத்தூர் மணி, காசு.நாகராசன் (திராவிட இயக்கத்தமிழர் பேரவை) சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தினேசு குமார் கழகத்தில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார். தோழருக்கு கழகத் தலைவர் புத்தகம் வழங்கினார். 15 பேர் உடற் கொடை வழங்க முன்வந்துள்ளனர். இதற்கான சான்றிதழை தோழர் அறக்கட்டளைத் தலைவர். சாந்தகுமார் மற்றும் கழக தலைவர் கொளத்தூர் மணி வழங்கினர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், பொள்ளாச்சி கழக தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு...

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம்...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து...

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

தாய் தமிழர் இயக்கம் நடத்திய அறிவரண் தளபதி பொட்டு அம்மான் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை செங்குன்றத்தில் டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய இனமுரசு சத்யராஜ், நூலை மதிப்புரை ஆற்றிய திவிக-புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், நூலைப் பற்றி அறிமுக உரை மேச்சேரி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். திருவல்லிக்கேணி பகுதியில் உயர்நீத்த கழகத் தோழர்கள் பத்ரி நாராயணன், தமிழரசு, கண்ணன், குமார் ஆகியோரின் குடும்பத்தினர் நூல்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு கழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவி பாரதி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் இலக்கியா- பிரகாஷ் சுயமரியாதை ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு புதுவை அரியாங்குப்பத்தில் நடைபெற்றது. காசு.நாகராசன் (அமைப்பு செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) வாழ்த்துரை வழங்கினார். சடங்குகளால் மணமக்கள் படும் தொல்லைகளை, அவமதிப்புக்களை எடுத்துரைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையேற்பை நடத்தி வைத்து மந்திரங்கள் அதன் வழியாக சடங்குகள் மூலம் அடிமைத்தனத்தைத் திணிக்கும் பார்ப்பன புரோகித திருமண முறையும், எவ்வித சடங்குகள் இல்லாமல் நடைபெறும் சுயமரியாதைத் திருமணம் பற்றி விளக்கிப் பேசினார். நிறைவாக மணப்பெண் இலக்கியா பேசுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசை ஆசையாக வளர்க்கிறார்கள் ஆனால் அவர்களின் சுய விருப்பத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஜாதி, மதத்தை காரணம் காட்டி பல பேர் இல்லறம் சரியாய் அமைவதில்லை. ஆகவே பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். பிள்ளைகளின் சுய விருப்பத்தை பாருங்கள், ஜாதி, மத, சொந்தக்காரர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். என்னுடைய குடும்பம் ஆச்சாரமான கடவுளை நம்பும்...

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 12.06.25 வியாழன் அன்று மேட்டூரில் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது “குடியரசு 100” எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட 3 புத்தகங்கள் அடங்கிய தொகுதியை கழகத் தலைவர் அவர்கள் முதல்வருக்கு வழங்கினார். மேலும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் அவர்கள் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பாக கழகம் வெளியிட்ட “ஆரிய மாடலா? திராவிட மாடலா?” நூலை முதல்வருக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், மேட்டூர் சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

தோழர் மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.3000/ கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களிடத்தில் வழங்கினார்கள். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம்12062025இதழ்

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை: மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2025 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மறைந்த கழகத் தோழர் இசைக் கலைஞர் அருண் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தொடர்ச்சியாக கழகம் முன்னெடுத்த பிரச்சார கூட்டங்களையும், இளைஞரணி, நிமிர்வோம் வாசகர் வட்டம், மாணவர் கழக செயல்பாடுகளையும் பட்டியலிட்டு கருத்துரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், அருண் கோமதி, புருஷோத்தமன், தினகரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தேன்மொழி, இரண்யா, பிரசாந்த், சிரிஜன், மகிழவன், நந்தகுமார், ஹர்ஷா ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் கழக வார இதழான ‘புரட்சிப்...

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன?  மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன? மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

மதுரையில் பாஜக ஜூன் 23 அன்று முருகன் அரசியல் மாநாடு ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இந்து முஸ்லிம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம். அங்கே இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்ற திமுக ஆட்சி முயற்சிக்கிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் மதவெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன… திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும்...

அய்யா உணவகம் திறப்பு விழா

அய்யா உணவகம் திறப்பு விழா

30-05-2025 அன்று காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு அருகில் திறக்கப்பட்டது. ரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் திவிக) ஒருங்கிணைத்தார். மக்கள் மன்ற‌ ஒருங்கிணைப்பாளர் மகேசு திறந்து வைத்து உரையாற்றினார். இரா.உமாபதி( சென்னை மாவட்டச் செயலாளர்), பிரவீன் குமார் (ஒருங்கிணைப்பாளர் மே17 இயக்கம்), தமிழ் சாக்ரடீஸ் (பெரியார் உணர்வாளர்), அ.வெ முரளி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தி.க), காஞ்சி அமுதன்(தமிழ் உரிமை கூட்டமைப்பு), மு.சங்கர் (50வது மாமன்ற உறுப்பினர் திமுக), ச.மகேஷ் (திமுக), சானகிராமன் (காஞ்சி மாவட்ட மே17 இயக்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அய்யா உணவக உரிமையாளர் சுரேஷ் நன்றி கூறினார். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 2000 வழங்கினார். மேலும் கழக தோழர்கள் சென்னை அருண் (இளைஞரணி), இராவணன் (துணை செயலாளர் தென்சென்னை), கோபி (பகுதி தலைவர் திருவல்லிக்கேணி) மற்றும் காஞ்சிபுரம் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01062025இதழ்

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2006 ஆம்...

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் 10-5-25 அன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! சமூகநீதியைக் காப்போம்! உழைப்பாளர் நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் கைத்தடி பேரணியும்- பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக நடைபெற்றது. அரியாங்குப்பத்தில் கலைஞர், சிங்காரவேலர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பெரியார் கைத்தடி பேரணியை பா.செ.சக்திவேல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக புதுச்சேரி)‌, மகேசு காஞ்சி மக்கள் மன்றம் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில்‌ வழிநெடுக கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு கழக மயிலாடுதுறை மகேஷ் மாலை அணிவித்தார். அரியாங்குப்பம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டருக்கு பேரணியாக சென்று பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகங்கள் பொதுமக்கள் மற்றும் தோழர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தொடர் சொற்பொழிவுகளாக இல்லாமல் பேச்சுக்களுக்கு இடையே பாடல்கள், நாடகங்கள் என‌ கலைத்திருவிழா போல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரா. உமாபதி, (திவிக சார்பாக சென்னை...

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு வழக்கில் இருந்து கழகத் தோழர்கள் விடுதலை : பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக காவல்துறை, போராடிய கழகத் தோழர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி திறம்பட வாதாடி வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விடுதலை பெற்றவர்கள் : மு.சாமிநாதன், வைரவேல், தண்டபாணி, சதீசுகுமார், பூபதி, மணி, பிரகாஷ், சுப்பு என்கிற ராஜசேகர், கோபி, தியாகு, மனோஜ், கவுதம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

நாமக்கல் மாவட்ட கழகம்‌  “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகம்‌ “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் அ முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, குமாரபாளையம் நகரத் தலைவர் எம் டி தண்டபாணி ஆகியோர் முயற்சியில் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பிறவியின் அடிப்படையில் இலவசமாகக் கிடைத்தது ஜாதி. இந்த ஜாதியால் பயன் அடைந்தவர்கள் அதைக் கொண்டாடினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள். ஜாதி சமூகத்தை வளர்க்கவில்லை; மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்தியது; சமூக ஒற்றுமையையும் அது கட்டிக் காக்கவில்லை. இன்றைக்கு அரசியலில், அதிகாரத்திலும், சமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. “பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று நடக்கும் அதிகார சண்டை என்பது ஜாதி அரசியலில் மோசமான தோல்வி!” சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஒரு காலத்தில் முற்போக்கு பாதையில் பயணித்தது உண்மை; பிறகு 35 வயதில் தனது மகனை இராமதாஸ்அமைச்சராக்கிய பிறகு அது திசை மாறியது. மருத்துவர் ராமதாஸ் அது நான் செய்த பெரும் தவறு என்று இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக நீதி அரசியலை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல் பதவிகளுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு கூட்டணிகளை மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டு சுயநலப் பாதையில் அதிகாரத்திற்காக பயணித்தவர்கள், அந்த...

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

01.06.2025 தமிழ்நாடு மாணவர் கழகம் முன்னெடுத்த புதிய தோழர்களுக்கான “இட ஒதுக்கீடு – அ முதல் ஃ” என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியரசு தலைமை தாங்கினார், தோழி அனைவரையும் வரவேற்றார், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் இளவரசன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் இட ஒதுக்கீடு பற்றி சிறப்பாக அறிமுக வகுப்பெடுத்தார். வகுப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற தோழர் லாவண்யா அவர்களுக்கு தோழர் அன்பு தனசேகர் பரிசுத்தொகை ரூ.1000/- வழங்கினார். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன் உட்பட 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவை தி.வி.க மாவட்டச் செயலாளர் உமாபதி வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்...

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரங்களை தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதினத்தை கண்டித்து 16-5-2025 அன்று காலை 10:30 அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன நிகழ்வில் பால் பிரபாகான் (கழக பரப்புரைச் செயலாளர்) கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி (திவிக) தலைமையில் நிகழ்வு தொடங்கி, கனியமுதன்(விசிக), மீ.த பாண்டியன்(மதநல்லிணக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் – தமிழ்ப் புலிகள்), கபீர் நகர் கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர்), வரதராஜன் (பெரியார் நெறியாளர்), தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க), ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர்), அப்பாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), குமரன் (பு .இ.மு) ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனத்தைக் கண்டித்தும், அவரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழமை இயக்கங்களுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக்...

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

ஜெசி மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து… இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது. சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport)பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றிவிடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார். ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத்...

கொளத்தூர் குலுங்கியது

கொளத்தூர் குலுங்கியது

சேலம் மாவட்டம் மகளிர்‌ அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார். உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்‌) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி,...

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

கருப்பு உடை தரித்து பெரியாரியப் பெண்கள் தீச்சட்டிகளுடன் அலகுகுத்திக் கொண்டும் கடவுள் இல்லை என்றும் பேரணியாக அணிவகுத்த காட்சியை கொளத்தூர் கண்டது. “நாங்கள் பெரியாரியப் பெண்கள்; எங்களுக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, தோழியர்களே! இந்த நம்பிக்கைகள் தான் நம்மை அடிமையில் ஆழ்த்துகின்றன” என்ற செய்தியை மக்களுக்கு கூறினார்கள். மேட்டூர் வட்டத்தின் ஒரு சின்னஞ்சிறு கிராமம் கொளத்தூர். அந்த ஊரைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஒரு புரட்சிகர முடிவை எடுத்தனர். நாத்திகர் விழா நடத்துவது என்று அறிவித்து களம் இறங்கினர். கழகத் தலைமைக்கு அந்த முடிவை தெரிவித்தனர். பெண்களே நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பெண்களே பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். கடவுள், மதத்தை எதிர்த்து இப்படி பெண்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு பேரணியையும் விழாவையும் நடத்தி அதை வெற்றியாக்கி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் இருந்து கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களுமாக கொளத்தூர் நோக்கி திரண்டனர்....

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம்காட்டி கடவுச்சீட்டு கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி,சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய கடவுச்சீட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்த மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, என் மீது தடா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி நிராகரித்துவிட்டார்” என முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கொளத்தூர் மணி தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘‘குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே கடவுச்சீட்டை புதுப்பிக்காமல் இருப்பது தவறு என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளன’’ என்று வாதிட்டார். ஒன்றிய அரசுத் தரப்பில், மனுதாரர்...

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் (04/05/25) சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குறளரசி தலைமை தாங்கினார், இளவரசன் முன்னிலை வகித்தார். சூர்யா, ஷர்மிளா, தோழி, பிரசாந்த், பேரன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள்: 1)கல்லூரி சேர இருக்கும் மாணவ மாணவியருக்கான வழிகாட்டுதல் தருவது. 2)இட ஒதுக்கீடு பற்றிய அறிமுக வகுப்பு இந்த மாதத்தில் நடத்துவது. 3) புதிய இசைக்குழுவை தொடங்குவது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 2025-2026 ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு RTE முலமும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பித்து தரப்படும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி சேரும் மாணவ மாணவியருக்கான ஆலோசனை மையம். தொடர்புக்கு: பேரன்பு(சென்னை): 89731-19313, இளவரசன்(சென்னை): 88382-77257 நாகராஜன்(சேலம்): 90929-04626, ஷர்மிளா(ஈரோடு)-75987-04581 நவீன்(கோவை)-63698-18361, ஷியாம் (தஞ்சாவூர்)-90808-18987 பெரியார் முழக்கம் 22052025இதழ்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னையில் 17.05.2025 அன்று ‘திராவிட வாரிசுகள்’ ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமை நடத்தியது. இந்த பழகு முகாமில் குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு வளர்த்தல், பாலின சமத்துவம், கலைகள் கற்றல் இது போன்ற தலைப்பில் கலை வடிவத்திலும் விளையாட்டு, பாடல் மூலமாகவும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் ஆகியோர் பயிற்சி வழங்கினர். தோழர் சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? என்று அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பழகு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்...

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்” ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின்...

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

வரும் மே 24 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற உள்ள நாத்திகர் விழா – மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி – பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடத்த அனுமதி கேட்டும் இதுவரை போலீசார் தரப்பில் எந்த உத்தரவும் தராததால் சேலம் மாவட்ட தி.வி.க. மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் கூட்டத்திற்கு அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு. வழக்குரைஞர் திருமூர்த்தி கழக சார்பில் வாதாடினார். பெரியார் முழக்கம் 22052025இதழ்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார். இறுதியாக சேலம்...

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

28/04/2025 திங்கள் மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு ஊரில் கழக மு.சரத்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் மற்றும் மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்ட நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். மு.நாகராஜ், வீ.முருகன், தே.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற சாமியார்களின் மோசடியையும், சோதிடம் போன்ற புரட்டுகளையும், மூடநம்பிக்கையால் மக்கள் எவ்வளவு ஏமாறுகிறார்கள் என்று தன்னுடைய அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார். தொடக்க உரை செ.வே.ராஜேஷ் நிகழ்த்தினார். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் செ. பிரபு, மக்கள் அதிகார கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், CPI இவிதொச, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.முருகேசன், அறிவியல் மன்ற தலைவர்...

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள்....

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம் காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌ பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வற்புறுத்தினார். நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. “கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச்...

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர். ● நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. ● எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ● இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து...

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது. “நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், 1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது 2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி 3. தீச்சட்டி ஏந்துதல் 4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது 5. அரிவாளின் மீது ஏறி நிற்பது 6. கன்னத்தில் அலகு குத்துவது 7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது 8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது 9. நெருப்பை கக்குவது 10. சுருள் வீச்சு 11. தீப்பந்தம் சுற்றுதல் 12. சிலம்பம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். “மூடநம்பிக்கைகளை...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் இல்லத்துக்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் நலம் விசாரித்தார். உடன் திமுக பொறுப்பாளர்கள் ரோட்ஜ், முனுசாமி தொண்டாமுத்தூர் ரவி, சி.ஆர் இராமச்சந்திரன், அருண், அறிவரசு மற்றும் கழக தோழர்கள் பலர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 08052025இதழ்

இணையதள பிரிவின் மின்னூல்

இணையதள பிரிவின் மின்னூல்

கழக இணையதள பிரிவு சார்பாக‌ கடந்த ஏப்ரல் 21 தேதி மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மானத்தை ஒட்டி கழகம்‌ சங்கரச்சாரிக்கு எதிராக பெரியார் முழக்கத்தில் எழுதிய செய்திகளை இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தொகுத்து “இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி” என்ற‌‌ தலைப்பில் மின்னூல் வெளியிடப்பட்டது. அட்டைப்பட‌ வடிவமைப்பு: அருண் இளைஞரணி, நூல் வடிவமைப்பு: பரிதி. மேலும் இந்த மின்னூல் கழக இணையதள பக்கத்தில் இலவசமாக படிக்கலாம். பெரியார் முழக்கம் 15052025இதழ்

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் மற்றும் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவைகுளம் மெயின் ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் கே.சந்திர சேகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் பால். அறிவழகன், ஆழ்வை ஒன்றிய தி.வி.க. செயலாளர் இரா.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ச.ரவி சங்கர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச் சாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சு.க. சங்கர், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.மை....

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

03.05.2025 அன்று கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் உணர்வார்கள் ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி! என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சிவா மொபைல்ஸ் சிவா தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க. மருத்துவரணி பெரியார் செல்வி, அ.பா.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தி.மு.க. மகளிரணி ஜெயலலிதா, திருப்பூர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் விஷ்ணு நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டம் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை வழக்கறிஞர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். இனியன் கழக தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்....