கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

19-02 -2024 அன்று மாலை 4 மணியளவில் சிதம்பரத்தில் யுஜிசி திருத்த வரைவு அறிக்கையை கண்டித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அமைப்பாளர் அ.மதன்குமார் தலைமையேற்றார்.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு ந.கொளஞ்சி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், தாமரை, விக்னேஷ், தகவி, பார்த்திபன், ராகுல், ரூபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செ.பிரகாஷ் வரவேற்று தொடக்கயுரையாற்றினார், இதனையடுத்து கவி, வீரகுமார்,சாகுல் ஹமீது மனித நேய மக்கள் கட்சி, கணபதி ஏகாதிபத்தி எதிர்ப்பு இயக்கம், பாலராஜ் புரட்சிகர மாணவர் இயக்கம் மற்றும் இளைஞர் முன்னணி, இசாக் அலி மே17 இயக்கம், ரமேஷ்மித்ரன் தபெதிக, வழக்கறிஞர் செந்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், தயாநிதி மக்கள் தமிழகம் கட்சி, குறிஞ்சிவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளையரசன் விழுப்புரம் மாவட்டத் தலைவர் திவிக, ப.அறிவழகன் மாவட்ட அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகேஷ் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திவிக, அய்யனார் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திவிக, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நிறைவாக வெற்றிமணி நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 27022025 இதழ்

You may also like...