காரைக்குடியில் கருத்தரங்கம்

இந்தி இந்துத்துவம் இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் 8.2.25 அன்று கருத்தரங்கம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இந்துத்துவம் இந்தி இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகளையும் நாம் இதில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதனையும் விரிவாக பேசினார்.

கருத்தரங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், பேராசிரியர் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர். நிகழ்வு ஏற்பாட்டை மார்க்சு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு செய்தது. தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார் திராவிடர் விடுதலை கழகத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பெரியார் முத்து தலைமையில் வைத்தார், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாவெல் மற்றும் திவிக இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள்.

இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் முத்துக்குமார், ரமேஷ், இளங்கோ, திருநாவுக்கரசு, அன்புக்கரசு, தவச்செல்வன் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த பேராசிரியர் கோச்சடை, பெரியார் கடைசி உதவியாளர் தோழர் எழில் மாறன், வேம்பன், பூர்ணிமா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கருத்துரையாற்றி சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் 20022025 இதழ்

You may also like...