நிமிர்வோம் வாசகர் வட்ட 26-வது சந்திப்பு!

பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 26-ஆவது சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்டம் 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிமிர்வோம் வாசகர் வட்டப் பொறுப்பாளர் தோழர் பிரகாசு தொகுத்து வழங்க ,கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் .மேலும் ஊடகவியலாளர் கரிகாலன், “பார்ப்பனக் கைக்கூலிகள் சீமான், மணியரசன்” என்ற தலைப்பில் உரையாற்றினார் .
ஊடகவியலாளர் மில்டன், “பெரியார் அண்ணாவின் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் அண்ணா செய்த சாதனைகளையும் நிகழ்கால அரசியல் குறித்தும் சிறப்புரையாற்றினார்.கழக தோழர்கள் உட்பட நூற்றுக்கும்‌ மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்‌.
கழக ஏட்டின்‌ வளர்ச்சிக்கு சென்னை அடையாறு பகுதி இரா.வெங்கடேசன் ரூபாய் 7000 -கழக பொதுச் செயலாளரிடம் நிகழ்ச்சியில் வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பேரன்பு 25-முழக்க சந்தாவுக்கான ரூபாய் 7500 தொகையைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் பிரவீன்,சுபாஷ் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பெரியார் முழக்கம் 13022025 இதழ்

You may also like...