“ஏன் வேண்டும் பெரியார்” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்
புதுக்கோட்டை: “ஏன் வேண்டும் பெரியார்” என்ற தலைப்பில் புதுக்கோட்டையில் 23.2.25 அன்று காலை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்அதர்மம்யூடுப் சேனல் மனோஜ் விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் செயல் இந்திய அரசின் செயல் இதற்கு காரணமான பார்ப்பனிய அதிகாரிகளின் சூழ்ச்சி ஆகியவற்றையும். சீமான் உளவுத்துறையின் கையால் என்பதையும் படம்பிடித்து காட்டினார்.
ரூட்ஸ் தமிழ் யூடுப் சேனல் கரிகாலன் அவர்கள் போலி
தமிழ் தேசியவாதிகளின் அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து பேசினார். இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கல்வி வளர்ச்சியில் நூறாண்டுகளுக்குள் ஏற்பட்ட மாற்றமே பெரியார் படிக்க வைத்ததற்கு சாட்சி, யார் தமிழர்கள் என்ற பாவாணரின் கருத்தையும், சாதிதேசியமாக இயங்கும் போலி தமிழ் தேசியவாதிகளையும் அம்பலப்படுத்தும் விதமாகவும், இந்தி திணிப்பை 1930 களின் இறுதியில் எதிர்த்து முதல் இப்போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து எதிர்ப்பது இன்னும் பலமாக இருக்கிறது என பலற்றை ஆழமாக பேசினார். மேலும் கருத்தரங்கத்தில் தமிழ் வழி கல்வி இயக்கம் தோழர் சின்னப்ப தமிழர், விசிக மா. து. செயலாளர் திலீபன் ராஜா உள்ளிட்ட பலர் கருத்துறை ஆற்றினார். வணிகர் சங்கங்களின் பேரவை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தோழர் தரணி ரமேஷ் நிகழ்விற்கு தலைமை ஏற்றும் ஒருங்கிணைத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டையும் தமிழ் வழி கல்வி இயக்கத்தோடு இணைந்து செய்திருந்தார்.
