வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.

மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணிய உரிமை சார்ந்த சிந்தனைகள் வேகமாக சென்றடைந்து கொண்டிருக்கின்றன.
பெரியார் முழக்கம் 23012025 இதழ்

You may also like...