குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

“குன்றக்குடி அடிகளார்” மற்றும் “சேரன் மாதேவி” நூற்றாண்டு சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்ட 24வது சந்திப்பு 29.09.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சந்திப்பிற்கு தௌபீக் தலைமை தாங்கினார். மயிலை அஸ்வின் வரவேற்புரையாற்றினார். பொன்மலர் முன்னிலை வகித்தார்.
முதல் நிகழ்வாகத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
பின்னர் “வைதீக எதிர்ப்பு மரபில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்!” என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும், “பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சியில் சேரன்மாதேவி” என்ற தலைப்பில் கழக இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாசும் சிறப்புரையாற்றினார்கள்.
நிறைவாக நிறை நன்றி கூறினார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, ஆய்வாளர் பழ.அதியமான் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

You may also like...