கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கழகத் தோழர் மு.நாகராஜ் – நா.சுலோச்சனா ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா 09.01.2025 அன்று கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

திராவிடர் செல்வி பகுத்தறிவுப் பாடலை பாடினார் கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், ராமச்சந்திரன், ஆசைத்தம்பி ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், ஒன்றியத் தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர்,  மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் நிறைவாக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கதிரவன் நன்றி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூமாலை, த.பெ.தி.க. கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் பிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமகிருஷ்ணன், தனலட்சுமி பசுமதி, சூர்யா, பஞ்சவர்ணம், கார்சீலா, ஜெயபிரகாஷ், வீரமணி, ஆனந்தன், இலட்சுமணன், தனிமொழி, வல்லரசு, நீதிபதி, இராஜேசு  உள்ளிட்ட கழகத் தோழர்கள் – உறவினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவுப் பரிமாறப்பட்டது.

முன்னதாக கழகத் தலைவர், பாக்கம் கிராமத்தில் கழகக் கொடியை ஏற்றி, சிந்தனைப் பலகையை திறந்துவைத்தார்.
பெரியார் முழக்கம் 23012025 இதழ்

You may also like...