தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழரும், ஊடகவியலாளருமான தினேசு – சூர்யா இணையர்களின் சுயமரியாதைத் திருமணம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 02.02.2025 அன்று சென்னையில் ராமாபுரம்‌ பகுதியில் உள்ள பாம்ஷோர் உணவகத்தில் நடைபெற்றது. எவ்வித சடங்கு சம்பிரதாயம் இன்றி எளிமையாக, இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார்.
காசு நாகராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சன் நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் மு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊடகவியலாளர் கீதா தொகுத்து வழங்கினார்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண் உட்பட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.சன்நியூஸ் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் பேசுகையில்,தோழர் தினேஷ் அடக்கமான சிந்தனை,படைப்பூக்கமும் நிறைந்தவர் என்று பாராட்டினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் அனைத்து வெளியீடுகள், துண்டறிக்கைகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று ஆர்வத்துடன் செயல்பட்டார் என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டடார்.
பெரியார் முழக்கம் 13022025 இதழ்

You may also like...