லெனின் சுப்பையா படத்திறப்பு நூல் அறிமுக விழா
பார்ப்பனக் கும்பலை தன் பாடல்களால் தோலுரித்த, விடுதலைக்குரல் இசைப்போர் நிறுவனத்தலைவர் புரட்சிப் பாடகர் லெனின் சுப்பையா படத்திறப்பு மற்றும் நூல் அறிமுக விழா புதுச்சேரி தீனா தோழர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. பொழிலன், ஏ கே ராஜன், காசு நாகராசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அவருடன் பயணித்த பல தோழர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மணிமேகலை, நாத்திகன், தேன்மொழ் பெரியார் பிஞ்சு திராவிட மகிழ்நன் ஆகியோர் சுப்பையாவின் பாடல்களைப் பாடி அவரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். உமாபதி சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகமும் லெனின் சுப்பையாவும் இணைந்த பயணித்த நிகழ்வுகளையும், “மோடி என்பது எல்லாம் வெறும் முகமூடி” பாடலை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டத்தில் பாடிய களஅனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். காசு நாகராசன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் விடுதலைப்போர் புத்தகம் வெளியிட்டார். கலந்துக்கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
