புதுச்சேரி பெரியாரியல் பயிற்சி வகுப்பு
16-8-2015 அன்று காலை முதல் மாலை வரை புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ‘ பெரியாரியல் பயிற்சி வகுப்பு, அரியாங்குப்பத்தை அடுத்த அலுத்துவேலியில் உள்ள தோழர் பழனிராசா தோட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்பில் நடந்தது.
அறிமுக உரையை ஆற்றிய மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மாநிலக் கழகம் எடுத்த முடிவை ஒட்டி மாதந்தோறும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்வே இது என்று குறிப்பிட்டார். கழகத் தோழர்கள் யார் எந்தவகையான கேள்விகளை கேட்டாலும் உடனே பதிலளிக்கும் அளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியே இது என்றார்.
தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “பெரியார் என்றொரு மனிதர்” என்ற தலைப்பில் பெரியாரின் இளமைக் காலம்யற்சி முதற்கொண்டு அவர் பெரும் மானுடநேயராக, ஜாதி ஒழிப்பு, பெண்ணூரிமைப் போராளியாகப் பரிணமித்ததற்கான பின்புலம் போன்றவற்றை விளக்கி 11-00 மணி முதல் நண்பகல் 2-00 மணிவரை விளக்கினார்.
மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.
பிற்பகல் 3-00 மணி முதல் மாலை 5-30 வரை தோழர்கள் தாங்கள் பரவலாக எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான விளக்கங்களை கேட்டறிந்தனர்.
ஏறத்தாழ 75 தோழர்கள் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மாலை 6-00 மணிக்கு நிறைவடைந்தது.