என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி
அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!!
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்
கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும்
விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும்
நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும் தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும்,
மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும்
புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும்,
புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத்
அவர்கள் தலைமையிலும்,
அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும்
தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர்