ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!
ஏற்காடு: 08.03.2026 அன்று ஏற்காடு பகுதியில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, மஞ்சக்குட்டை பகுதியில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் இரா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. சரிதா முன்னிலை வகித்தார். தெருமுனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சேலம் மாவட்ட அமைப்பாளர் அ. பெருமாள், கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் ம. தேவபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏற்காடு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஏற்காடு சுற்றுலா பயணிகளும் பெருந்திரளாக நின்று கேட்டுச் சென்றனர். சுற்றுலா வந்த விசிகவை சேர்ந்த மகளிரணி தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு குடிநீர் வாங்கி கொடுத்து வாழ்த்தினார்கள். தெருமுனைக் கூட்டத்தை பொதுக்கூட்டத்தைப்போல த சுகந்தா ராமசந்திரன் (மஞ்சக்குட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவர்), ராமசந்திரன்...
