மகளிர் முன்னேற்றம் ஒன்றிய ஆட்சி பாராட்டுகிறது
தமிழ்நாட்டில் 2021-இல் ஒரு லட்சத்து 1,26,000 ஆக இருந்த மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 2024-25-ல் 9,04,000 ஆக உயர்ந்தது! பி.ஜே.பி ஆளும் குஜராத் மாநிலத்தில் மகளிர் தொழில் முனைவோர் 2,18,000 பேர் மட்டுமே. ராஜஸ்தான் மாநிலத்திலும் 3,36,000 பேர் மட்டுமே! மகளிர் சாதனையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமைகள் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழொளி பரப்புகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மனித சமுதாயத்தில் ஏறத்தாழ சரி பாதியாக இருக்கும் மகளிர் சமுதாய முன்னேற்றத்தில் திராவிட இயக்கம் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனால் இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் கல்வி, அறிவியல், பொருளாதாரம், தொழில் முதலிய அனைத்திலும் ஆற்றல்கள் பெற்று பன்முகத் திறன்களுடன் வளர்ந்து இந்திய அளவில் முன்னிலை பெற்றுத் திகழ்கிறார்கள்.
ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் `திராவிட மாடல்’ ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை, 1,26,000 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்து, 2024-2025 ஆம் நிதியாண்டில், 9,04,000 ஆக உயர்ந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு என்பது குன்றின் மேலிட்ட விளக்காக புகழொளி பரப்புகிறது!
அதே நேரத்தில், பி.ஜே.பி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிட்டால் அங்கு சிறு, குறு மற்றும் நடுத்தரப் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை வெறும் 2,18,000. அதே போல ராஜஸ்தான் மாநிலத்திலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை விடக் குறைந்து, 3,36,000 ஆக உள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 09042026
