ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காடு: 08.03.2026 அன்று ஏற்காடு பகுதியில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, மஞ்சக்குட்டை பகுதியில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் இரா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. சரிதா முன்னிலை வகித்தார்.
தெருமுனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சேலம் மாவட்ட அமைப்பாளர் அ. பெருமாள், கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் ம. தேவபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஏற்காடு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஏற்காடு சுற்றுலா பயணிகளும் பெருந்திரளாக நின்று கேட்டுச் சென்றனர். சுற்றுலா வந்த விசிகவை சேர்ந்த மகளிரணி தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு குடிநீர் வாங்கி கொடுத்து வாழ்த்தினார்கள்.
தெருமுனைக் கூட்டத்தை பொதுக்கூட்டத்தைப்போல த சுகந்தா ராமசந்திரன் (மஞ்சக்குட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவர்), ராமசந்திரன் (திமுக மஞ்சக்குட்டை கிளைக்கழக செயலாளர்) நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தேவராஜ் (மாநகர அமைப்பாளர்), நாகராஜ் (மாணவரணி அமைப்பாளர்), உமாசங்கர் (வனவாசி நகர செயலாளர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச்செயலாளர்) கவியரசு(மாணவரணி அமைப்பாளர்), மூலப்பரை கோகுல், பொட்டனேரி ரவிக்குமார், இளம்பிள்ளை வெண்ணிலா, ஏற்காடு சுதாகர், ஏற்காடு டேவிட், ஏற்காடு நான்சி , ஏற்காடு கார்க்கி, பெரியார் பிஞ்சுகள் சே , அமுதன் . மற்றும் மஞ்சக்குட்டை மாதேஷ் திமுக, K.v.ராஜா (எ)ராஜேந்திரன் (ஏற்காடு ஒன்றிய கழக செயலாளர்), கருணாநிதி(முன்னாள் மாவட்ட கவுன்சிலர்), ராமச்சந்திரன் (மஞ்சகுட்டை தேர்தல் பொறுப்பாளர்), மைக்கேல் (கிளை கழகச் செயலாளர்), ஆதிசங்கர் (ஏற்காடு சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்), டவுன் பாகம் முகவர் வெங்கடேஷ், விஜய் (பொறியாளர் ஒன்றிய துணை அமைப்பாளர்), கோவிந்தன் (அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய அமைப்பாளர்), அனீஸ் (மஞ்சகுட்டை கிளைசெயலாளர்) மற்றும் ராமச்சந்திரன் (தேர்தல் பொறுப்பாளர்), சுகந்தா இராமச்சந்திரன் (மஞ்சக்குட்டை பஞ்சாயத்து தலைவர்), சம்பத் (மஞ்சக்குட்டை முன்னாள் பஞ்சாயத்து தலைவர்),மஞ்சக்குட்டை ஊர்கவுண்டர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 09042026

You may also like...