ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக தொடரட்டும் “தமிழ்நாட்டில் சாதனைகள், திமுக ஆட்சியை உறுதி செய்வோம்” என்கின்ற முழக்கத்தோடு அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஒருங்கிணைப்பில் 4 நாட்களில் 13 இடங்களில் தெமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
11.03.26 புதன் அன்று காலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெருமுனைக் கூட்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சண்முகப்பிரியன் (திமுக)ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
2வது நாள் (12.03.26): வியாழன் அன்று கனி ராவுத்தர் குளம், அக்ரகாரம், காமராஜர் நகர், காந்திநகர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களுக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.மதிய உணவு சண்முகப்ரியன் (திமுக) வழங்கினார்.

3வது நாள் 13.03.25: வெள்ளி காலை சோலார் பகுதியில் தெருமுனை கூட்டங்கள் தொடங்கி லக்காபுரம், நஞ்சை ஊத்துக்குளி, மொடக்குறிச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி கழகப் பொருளாளர் துரைசாமி சமூக வலைதள பொறுப்பாளர் பரிமள ராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.
4வது நாள் 15.03.26 ஞாயிறு அன்று காலை ஏலமாத்தூர் பகுதியில் தொடங்கி மண்கரடு, விளக்கேற்றி, சிவகிரி ஆகிய 4 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டங்களில் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, சிவகிரி சண்முகம் (தி.க.) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பழனிச்சாமி, மீசை முருகேசன், திருமுருகன், விச்சு கணேசன், சத்யராஜ் சந்தோஷ், அய்யப்பன், பாபு, கிருஷ்ணமூர்த்தி, மரவப்பாளையம் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 09042026

You may also like...