தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்: எடப்பாடியின் முகத்திரையை கிழித்தார் முதல்வர்!
“எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப தோல்வி பயத்தில் தொடர்ந்து அவதூறுகளைப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தனது எஜமானர்களின் பாணியில் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். சங்கிகளும் தம்பிகளும் பேசும் அதே பாணியில் தற்போது அதிமுகவும் பேசுகிறது. உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கூச்ச நாச்சமின்றி பொதுவெளியில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேசிய பொய் பட்டியல்:
2002 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் பிரதமராவதற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்லும் திமுக இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களுக்கு எதிராக வாக்களித்தது என்று கூறினார்.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் 2002 குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கலைஞர் அங்கம் வகித்தார். திமுக உட்பட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அப்துல் கலாம் அவர்களை ஆதரித்தது. குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கலைஞர் அவருக்கு கவிதை ஒன்றை எழுதினார். அந்தக் கவிதை அப்போது பேசு பொருளானது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்துல் கலாம் கடிதமும் எழுதியுள்ளார்.
காமராசர் மேல் பாச மழையை பொழிந்து வரும் எடப்பாடி 10ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போது எந்த ஒரு திட்டமும் செய்யவில்லை. பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் தரவில்லை திமுக என்று தனது எஜமானர்களின் பாணியில் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? 1975 அக்டோபர் 2 காமராசர் மறைந்த போது அவரின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைத்து உரிய மரியாதையை செய்தது திமுக. அரசு மரியாதையுடன் தகனம் செய்ய ஏற்பாடு செய்தவர் கலைஞர். மேலும் காமராசர் உடல் புதைக்கப்படவில்லை. அவருக்கு வாரிசுகள் இல்லை என்பதால் அவரின் தங்கை வழி பேரன் தான் அவருக்கு இறுதி சடங்குகளை செய்தார். அவரின் உறவினர் சமீபத்திய பேட்டியில் காங்கிரஸ்காரர்கள் யாரும் மெரினாவில் அடக்கம் செய்வதற்கு கேட்கவில்லை என்றும் கலைஞர் பெருந்தன்மையுடன் காமராசர் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
கிண்டியிலே காந்தி மண்டபத்திற்கு அருகிலே காமராசருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. காமராசர் நினைவிடம் யாரும் கவனிக்கப்படாத நிலையில் அதைத் தானே இறங்கி சுத்தம் செய்தவர் கலைஞர். மேலும் மெரினா கடற்கரை செல்லும் சாலைக்கு காமராசர் சாலை என்று பெயரிட்டவர் கலைஞர். பள்ளிக்கூடங்கள், நூலகங்கள் என ஏராளமான திட்டங்களுக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையே சூட்டி அழகு பார்த்தவர் கலைஞர்.
பெரியார் முழக்கம் இதழ் 09042026
