வாராது வந்த மாமணி ஸ்டாலின்!
கடந்த சனவரி-24, சூலூர் பாவேந்தர் பேரவை நடத்திய மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரை: நமக்கு வந்திருக்கிற ஆபத்து நமக்கு அமைந்திருக்கிற ஒரு வாய்ப்பு. மூடநம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவுவாதிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. நன்றாக பேசுபவர்தான் நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கருதிக்கொண்டிருந்தோம். அதனால் ஸ்டாலின் கொஞ்சம் தகுதி குறைவானவர்தான் என்ற மூடநம்பிக்கை அவர் ஆட்சிக்கு வந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு வரை இருந்தது. அந்த மூடநம்பிக்கை அதற்கு பின்பு மறைந்தது. பேச்சாளராக இருக்க வேண்டியது அவசியம் இல்லை, செயல்படுபவராக இருந்தால் போதும் என்பது அவர் ஆட்சிக்கு வந்த பின்னால்தான் நமக்குத் தெரிய வந்தது. பதவி இல்லாத 10 ஆண்டுகாலத்தில் அவர் என்னென்ன நினைத்து வைத்திருந்தார் என்பதெல்லாம் தற்போதுதான் தெரிகிறது. இன்னும் 10-ஆண்டுகள் முடிந்தால்தான் வெளியே வரும் என நினைக்கிறேன். யாரும் எண்ணிப்...
