மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –
“பார்ப்பன உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ, உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம்...
