உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!
உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கு எதிராக மேலும் வழக்குகள் போடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “ ‘சனாதன தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் அவதாரம் எடுத்து கிருஷ்ணன் வர மாட்டார், நாம்தான் வழக்கு தொடர வேண்டும் என்று பகவான் கிருஷ்ணனை அவமதித்து சனாதனவாதிகள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பார்வையில் இதுவும்கூட கடவுளை அவமதிப்பதுதான். இதற்காகவே சனாதனவாதிகள் மீது வழக்குத் தொடரலாம். இந்துத்துவ அரசியல் மதத்தையும் கடவுளையும் புறந்தள்ளிவிட்டு கூட்டணி அரசியலாக உருவெடுத்து நிற்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் முழக்கம் 13032025இதழ்
