மயிலாடுதுறையில் திரள்வோம்!

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் மீது அவதூறுகளை பேசுகிறார்,‌ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் ஒவ்வொரு நாளும் அவதூறுகளை வீசுகின்றனர்.

இதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் சங்கிகளின் கைப்பாவையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பெரியார் எதிர்நீச்சலில் வளர்ந்த தலைவர்; இந்த எதிர்ப்புகள் பெரியார் கருத்துக்களை மேலும் வலிமைப்படுத்தவே செய்யும் அதற்கான களங்களை பெரியாரியத் தொண்டர்களாகிய நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுக்கவே இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இதன் நிறைவு மாநாடு மயிலாடுதுறையில் மார்ச் 22 -ல் நிகழ இருக்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த மாநாட்டில் நாம் முடிவெடுப்போம். பெரியாரியலுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களை சந்திக்க வேண்டியது நம் வெவ்வெருவரின் இலட்சியக் கடமை என்ற உணர்வோடு மயிலாடுதுறை மாநாட்டிற்குப் பெரும் திரளாக திரண்டு வருமாறு தோழர்களையும், உணர்வாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம். மயிலாடுதுறை கருஞ்சட்டைக் கடலாகட்டும்! திரளுங்கள் தோழர்களே!

கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர்.
திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 20032025இதழ்

You may also like...