கோவையில் அமிஷாவுக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் !
இந்தித் திணிப்பு – புதியக் கல்விக் கொள்கைத் திணிப்பு – வெள்ள நிவாரண நிதி மறுப்பு என தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டிக்கும் விதமாக 26.02.2025 கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் 26.02.2025 மாலை 5 மணியளவில் ஹோப் காலேஜ் சிக்னல் அருகில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, சிபிஐ (மா.லெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர் இனியவன், தமிழ்ப் புலிகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் இராமச்சந்திரன் கண்டன உரையாற்றினர்.
திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா.லெ) ரெட் ஸ்டார் அமைப்புகளைச் சேர்ந்த 135 பேர் கலந்து கொண்டனர். 109 பேர் கைதாகினர். மேலும் கழக மாவட்டங்களான கோவை, சேலம் கிழக்கு – மேற்கு, ஈரோடு வடக்கு – தெற்கு, நாமக்கல், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு அமித்ஷா-வுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பெரியார் முழக்கம் 06032025இதழ்
