பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடிவடிக்கை

“ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவரும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்கு எதிராகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன.

a) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, தமிழ்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக்களை, குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது.

b) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட் டாலும் காணொலி வழியாக பொதுவெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் ( report) இடுமாறும், அதேவேளை காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது.

c) பெரியார் மீதான ஆதாரமற்ற அவதூறு களை பரப்பியதற்காக புதிய தண்டனை சட்ட விதிகள் 192, 196, 352, 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சீமான், அண்ணாமலை, எச்.ராஜா போன்ற பேர்வழிகள் மீது புகார் கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

புகார் அளித்த தோழர்கள் சீமானையும் உரிய காவல்துறை அதிகாரிகளையும் எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டு தனி வழக்குகளாக (Private complaint) உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

You may also like...